இன்றையக் காதல் டா… – டி.ராஜேந்தரின் புதுப் பட அறிவிப்பு!

சிம்பு சினி ஆர்ட்ஸ் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாரிக்கும் புதிய படம் “இன்றையக் காதல் டா…”

நமீதா வித்தியாசமான லேடி டான் கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறாராம். பிரபல நட்சத்திரங்களும் இந்தப் படத்தில் கைகோப்பதாகக் கூறியிருக்கிறார்களாம். கதாநாயகர்கள், கதாநாயகிகள், நகைச்சுவை நடிகர்கள் பலர் என புதுமுகங்களையும் அறிமுகம் செய்கிறார் டி.ஆர்.

ராதாரவி, இளவரசன், விடிவி கணேஷ், வே.ஆ.மூர்த்தி, பாண்டு, ரோபோ சங்கர், மதன் பாபு, கவண் ஜெகன், மைதிலி என்னைக் காதலி சுரேஷ், கூல் சுரேஷ் நினைத்தாலே இனிக்கும் ராஜப்பா, கொட்டாச்சி, தியாகு உள்ளிட்ட பல நகைச்சுவைப் பட்டாளங்களை களம் இறக்குகிறார் இந்தப் படத்தில்!

இளமை சொட்டும் காதல் கதையுடன் இன்றைய கால கட்டத்துக்கு ஏற்ற கதை அம்சத்துடன் தயாராகிறது என்று டி.ஆர். கூறியுள்ளார்.