விஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..!

நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் இன்று வெளியானது. முன்னதாக இந்தப்படம் வெளியிடப்படக் கூடாது என்று பிரமிட் சாய்மீரா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இந்நிலையில் இன்று இந்தப்படம் வெளியானது ஆனால், புதுச்சேரி மற்றும் 8 மாவட்டங்களில் வெளியாகவில்லை.

இதற்கு படத் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் சங்கத்துக்கு இடையேயான பிரச்னையே காரணம் எனக் கூறப்படுகிறது. மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் விஸ்வரூபம் 2  வெளியாகவில்லை.

இப்பகுதிகளில் உள்ள சுமார் 60 தியேட்டர்களில் படம் வெளியாகாததால் 4 கோடி ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை இழப்பு எனக் கூறப்படுகிறது.

படத் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் வினியோகஸ்தர்களுக்கும் இடையிலான பிரச்னையால்,  இங்கெல்லாம் படம் வெளியாகாவில்லையாம்.