ஒண்ணு போதாது… அஞ்சு வேணும்… அடம் பிடிக்கும் ஶ்ரீரெட்டி!

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, தனக்கு பட வாய்ப்புகள் தருவதாகக் கூறி தன்னுடன் பாலியல் உறவு கொண்ட சினிமா பிரபலங்கள், தன்னை பயன்படுத்திக் கொண்டு பின்னர் ஏமாற்றிவிட்டனர் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இவரது வாழ்க்கை வரலாறு, தற்போது தமிழில் வெளிவர உள்ளது. இந்தப் படத்தில் அவரே நடிக்கிறார். இந்நிலையில் தற்போது கூடுதல் தகவல் ஒன்றை தன் பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை வரலாறு படத்தை தமிழில் அலாவுதீன் என்பவர் இயக்க உள்ளார். சித்திரைச் செல்வன் மற்றும் ரவிதேவன் ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரிக்க உள்ளார்கள்.

ஸ்ரீ ரெட்டியின் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட உள்ள இந்த படத்துக்கு ‘ரெட்டி டைரி’ என பெயரிட்டுள்ளனர். ஸ்ரீ ரெட்டியின் வாழ்க்கையில் நடந்த அனைத்து சம்பவங்களும் இந்தப் படத்தில் இடம் பெறும் என அதிரடியாக அறிவித்தனர்.

இதனால் படம் வெளியாகும் போது ரெட்டி டைரியில் மேலும் பல பிரபலங்கள் பெயர்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்நிலையில் தன் வாழ்க்கையைப் பற்றி படம் எடுத்தால் ஒரு பாகத்தில் எடுக்க முடியாது. குறைந்தது ஐந்து பாகங்களாவது எடுக்க வேண்டும் என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.