சினிமாக்காரின்னு என்ன திட்டினா… கலைஞர் தொடங்கி உதயநிதி வரை அதே குட்டைல ஊறினவங்கதானே!

சென்னை: சினிமா நடிகை என்று தரக்குறைவாக என்னைப் பேசினால், உங்கள் கருணாநிதி தொடங்கி உதய நிதி வரை எல்லோரையும் அப்படியே திட்டியதாகத்தான் ஆகும் என்று பதிலடி கொடுத்திருக்கிறார் நடிகை கஸ்தூரி.

கஸ்தூரிக்கு எதிராக திமுக., பின்னணியில் உள்ள ஒரு குழு டிவிட்டரில் இயங்கி வருகிறது. கஸ்தூரி சொல்வதை எல்லாம் திரித்தும், தவறான சித்திரிப்புடனும், உடல் ரீதியான கொச்சை வாசகங்களுடனும் படங்களுடனும் பதில் கொடுப்பதுமாக இயங்கி வரும் அவர்களுக்கு #திதிசொ என பெயரிட்டு கொஞ்சமும் பதட்டப் படாமல் பதில் கொடுத்து வருகிறார் கஸ்தூரி.

அவரது நேற்றைய இன்றைய டிவிட்டர்கள் இதை நோக்கியே இருந்தன. இலவசங்களுக்காக நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு அலைபவர்கள்தானே தமிழர்கள் என்று கஸ்தூரி சொன்னதாகவும், அதற்கு இல்லவே இல்லை என்று கஸ்தூரி மறுப்பு தெரிவிப்பதாகவும் டிவிட்கள் நீண்டன. இந்த டிவிட்டர் உரையாடலில்தான், கஸ்தூரி கன கச்சிதமாக தான் சொல்ல வரும் திமுக., உ.பி.,ஸ் எதிர்ப்புக் குரலை பதிவு செய்திருக்கிறார். அவரது டிவிட்டர் பதிவும் பதிலடிகளும்…

‘இன்று ஒரு தகவல் ‘ மாதிரி க்களுக்கு ‘தினம் ஒரு பொய். ” அதுலயும் குறிப்பா கஸ்தூரி என்ன சொன்னான்னு பொய் செய்தி போட்டு அதுக்கு கமெண்டும் பண்ணி ஆபாச அலப்பறை பண்ணுறதுன்னா ‘அல்வா” துண்ணுறது மாதிரியாச்சே ! இன்னிக்கு பிரியாணிக்கு பலியாடு நானா? என்ஜோய் !

இலவசமா குடுத்தாக்கூட வேணாம்னு இவிங்க சொல்லுற விஷயங்கள் – அறிவு! உண்மை ! கண்ணியம் !

|| இலவசங்களுக்காக நாக்கை தொங்கபோட்டபடி அலைபவர்கள்தானே தமிழர்கள் – அப்ப நீங்க தமிழச்சி இல்லையா…?

வந்தனம். இது பொய் செய்தி. இப்படி நான் சொல்லவில்லை. ஒரு குறிப்பிட்ட குரூப் என் மீது பரப்பும் அவதூறுகளை நம்பவேண்டாம் என்று பகுத்தறிவும் கண்ணியமும் உள்ள அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். வேற வேலை ஏதுமிருந்தா பாருங்க க்களா என்னை பழிப்பதால் குஸ்காவுக்கு கூட லாபமில்லை.

|| திராவிடத்தை பற்றி பேச உங்களை மாதிரி ஆட்களுக்கு அருகதை இல்லை. போய் எதாவது படத்துல கவர்ச்சி காட்டி நடிக்கிற வேலையை பாருங்க. அதுக்கு தான் நீங்க சரிபட்டு வருவீங்க ||

ரொம்ப சரி. உதயநிதி படத்துல நடிச்சிட்டா போகுது ! என் தொழிலை திட்டினால் , கலைஞரை, மாறன் சகோதரர்களை , உதயநிதியை எல்லாரையும் சேர்த்துதான் திட்டுகுறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என் அறிவுக்கொழுந்தே !

|| அவர்கள் எல்லாம் நடித்தும் வசனம் எழுதியும் தயாரித்தும் சினிமாவில் உயர்ந்தார்கள். உங்களை மாதிரி உடம்மை கண்பித்து நடிக்கல ||

ஆமாமா, சன் குழுமம் தயாரித்தது அனைத்தும் ஆவணப்படங்கள். மானாட மயிலாட, கிராமத்தில் ஒரு நாள் எல்லாம் பக்தி நிகழ்ச்சி.. உதயநிதி படத்தில் குடிக்காத, பெண் வாசனை படாத சாமியார் வேஷம் மட்டுமே தரிப்பார். அட போப்பா. எங்க பொழப்பை நாங்க கவனிக்கிறோம். உன் வேலைய நீ பாரு….

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.