ஜெயம் ரவியின் ‘அந்த 4 எஃப்’: குவியும் பிறந்த நாள் வாழ்த்து!

குறிப்பாக சமூக ஊடகங்களான டிவிட்டர், பேஸ்புக் வாயிலாக அவருக்கு ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ஜெயம் ரவி பிறந்த நாள் கொண்டாடுகிறார். இதை ஒட்டி அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக சமூக ஊடகங்களான டிவிட்டர், பேஸ்புக் வாயிலாக அவருக்கு ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து ஒரு வீடியோ பதிவு வெளியிட்ட ஜெயம் ரவி, அடங்கமறு படம் குறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். தான் எப்போதும் இது போன்ற நல்ல படங்களை ரசிகர்களுக்காகச் செய்வேன் என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார். மேலும், தான் எப்போதுமே 4 எஃப் குறித்து சொல்வேன். ஃபேமிலி, ஃப்ரெண்ட்ஸ், ஃபிலிம், ஃபேன்ஸ் – அந்த நாலும் எப்போதும் எனக்கு உறுதுணையாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அவரது நன்றி அறிவிப்பு காணொளி இதோ…