11/07/2020 6:49 AM
29 C
Chennai

ஐயம் அ கார்ப்பரேட் கிரிமினல்; ‘சன் பிக்சர்ஸ்’ஸின் சர்கார் டீசரில் விஜய்!

ஐயாம் அ கார்ப்பரேட் கிரிமினல் - என சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படத்தின் டீசரை யுடியூப்பில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

சற்றுமுன்...

ஸ்டாலினின் பொறாமை காய்ச்சலை கட்டுப் படுத்தவே முடியாது!: ஆர்.பி.உதயகுமார்!

அத்தனை அறிக்கைகளும் பொய்யான, விஷமத்தனமான ,மக்களை அச்சுறுத்தும் வகையில் தான் இருக்கிறது

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய வரலட்சுமி சரத்குமார்!

அவரது தாய் சாயா தேவி உணவளித்தும், மருத்துவ உதவிகளையும் செய்தும் வருகிறார்கள்

100வது நாளாக ஏழைகளுக்கு உணவுப் பொட்டலம் விநியோகம்: பாராட்டுப் பெற்ற பாஜக நிர்வாகி!

இந்தப் பணியில் என் மனைவி உணவு தயாரித்துக் கொடுத்தார். என் மகன்கள் உள்ளிட்ட இளைய தலைமுறை, உணவை அனைவருக்கும் சென்று விநியோகிக்க உதவியது.

தமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு தொற்று: சென்னையில் 1205 பேருக்கு தொற்று உறுதி!

இதை அடுத்து, தமிழகத்தில் இதுவரை 82,324 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்

பரவையில் கொரோனா பரிசோதனை முகாம்!

காலை 10.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை நடைபெற்றதில் மொத்தம் 200 நபர்களுக்கு மேல் (Swap Test) எடுக்கப்பட்டது.

sarkar audio launch ஐயம் அ கார்ப்பரேட் கிரிமினல்; ‘சன் பிக்சர்ஸ்’ஸின் சர்கார் டீசரில் விஜய்!

சர்கார்- டீசர் வெளியீடு: ஆடி கார், நானோ கார், மாருதி கார், சர் கார்… என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்காக.. அந்த சர் காரில் என்ன சரக்கு இருக்கிறது என்பதைக் காடுவதற்காக ஜன்னலை சிறிது திறந்திருக்கிறார்கள் டீசரில்!

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் டீசர் வெளியாகியுள்ளது. இதில், விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரஹ்மான் இசையில் தீபாவளிக்கு வெளியாகிறது படம்.

வெளிநாட்டில் கார்பரேட்டில் உயரதிகாரியாக வேலை பார்க்கும் விஜய், ஓட்டு போட இந்தியா வருகிறார். அவரது ஓட்டை யாரோ முன்னமேயே போட்டுவிட, அதனால் வெகுண்டெழுகிறார் விஜய்!

கள்ள ஓட்டு போடப் பட்டதைச் சொல்லி, தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடக்கும் அரசியல் ஆட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி அரசியல்வாதிகளுக்கு ஆட்டம் காண்பிக்கிறார்! இதான் டீசரின் சுருக்கம்!

“அவன் ஒரு கார்பரேட் மான்ஸ்டர்… எந்த நாட்டுக்குப் போனாலும் தன்னை எதிர்க்கிறவங்களை அழிச்சிட்டுதான் வெளில போவான். அவன் இப்போ இண்டியா வந்திருக்கான்” என விஜய்யின் அறிமுகத்துக்கு வரலட்சுமி குரல் பின்னணியாக ஒலிக்கிறது.

” நான் எந்த கம்பெனியையும் விலைக்கு வாங்க வரல, இன்னிக்கு என்ன டே?! எலக்‌சன் நாள். நான் என்னோட ஒட்டு போடுறதுக்காக வந்திருக்கேன்..” என்று துவங்கும் விஜய் குரல், இன்னும் ஓரிரு நாளில் என்னவெல்லாம் நடக்க போகிறது என ஓரமாக நின்று வேடிக்கை பாரு, நான் கார்பரேட் கிரிமினல். உங்க ஊரு தலைவன தேடி பிடிங்க, இது தான் நம்ம சர்கார்” என விஜய் பேசும் டயலாக்குகள் இடம் பெற்றுள்ளன.

ஐயாம் அ கார்ப்பரேட் கிரிமினல் – என சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படத்தின் டீசரை யுடியூப்பில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad ஐயம் அ கார்ப்பரேட் கிரிமினல்; ‘சன் பிக்சர்ஸ்’ஸின் சர்கார் டீசரில் விஜய்!

பின் தொடர்க

17,863FansLike
78FollowersFollow
70FollowersFollow
903FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை