விஜய் நடித்துள்ள சர்க்கார் படத்தில் வரலட்சுமி வில்லியாக நடிக்கிறார் அவருக்கு கோமளவல்லி என்று பெயர். நான் பார்த்த வகையில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் தான்! படம் பார்த்தபிறகு அந்த பெயர் என் மனதில் நிற்கவில்லை பாப்பா பாப்பா என்றுதான் படத்தில் வரும்.

மக்களுக்கே ஜெயலலிதாவின் பள்ளிப்பருவப் பெயர் கோமளவல்லி என்பது தெரியுமா என்பது சந்தேகம் தான். 1965க்கு முன்பே வெண்ணிற ஆடை படத்திலேயே அவர் ஜெயலலிதா ஆகி விட்டார்.

இப்போது சர்கார் படத்திற்கு எதிராக ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் பொங்கும்போது தான் “அட, ஜெயல்லிதா பெயர் கொமலவல்லியா?” என்று மக்கள் மூக்கின் மேல் விரல் வைக்கிறார்கள்.

மந்திரிகளின் நிஜக் கோபத்திற்குக் காரணம் அதுவாக இருக்க முடியாது. ஏன் என்றால் எத்தனயோ படங்களில் கதாபாத்திரங்களுக்கு இப்படிப் பெயர் அமைந்திருக்கும்.

ஆனாலும் கோமளவல்லி என்பது ஜெ இயற்பெயர் எனவே அதை எப்படி வில்லிக்கு சூட்டலாம் என்று ஜெயக்குமார் கேள்வி கேட்கிறார்? நேற்று சில அமைச்சர்களும் அந்த கேள்வியை எழுப்பினார்கள்.

படத்தைப் பொறுத்தவரையில் சில் அரசியல் சம்பவங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளன. அவ்வளவு தான். அது இன்னாரைக் குறிக்கிறது என்று நினைத்தால் யாரும் பொறுப்பு அல்ல. மேலும் தணிக்கைக்குப் பின் மந்திரிகள் மறு தணிக்கை செய்ய முயற்சிப்பது சர்க்காருக்கு இலவ்ச விளம்பரம் தான்.

சொல்லப் போனால் முதல் மந்திரி கதாபாத்திரத்தின் வாரிசாக அவரது மகள் கொண்டு வரப்படுகிறாள். அப்படிப் பார்த்தால் அது திமுகவுக்கும் பொருந்தும். ஆனால் தயாரிப்பு சன் பிக்சர்ஸ். அப்படியானால் கலைஞரின் வாரிசா ஜெயலலிதா?

எமர்ஜென்சி காலத்தில் “கிஸ்ஸா குர்ஸி கா?”படம் இந்திரா காந்தியை விமர்சிப்பதாக ஒரு சர்ச்சை சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் எழுந்தது. படச் சுருள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது.

படம் வெளிவந்தபிறகு டப்பாவுக்குள் போனது வரலாறு. மொத்தத்தில் சினிமா நன்றாக இருந்தால் ஓடும். அவ்வளவு தான். இதற்கு ஏன் அரசியல்வாதிகள் பொங்குகிறார்கள்?

கருத்து: பத்திரிகையாளர் ‘தராசு’ ஷ்யாம்

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...