அதிமுக.,வினர் போராட்டம்; பணிந்தது படக் குழு! சர்காரின் சர்ச்சைக் காட்சிகள் நீக்கப்படும்!

சேனல் ஒன்றுக்கு திருப்பூர் சுப்ரமணியன் அளித்த பேட்டியில், அதிமுகவினர் மாநிலம் முழுக்க சர்கார் படத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து படத் தயாரிப்பாளர் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

விஜய் நடிப்பில் தீபாவளி அன்று வெளியான சர்கார் திரைப் படத்துக்கு அதிமுக.,வினர் கடும் எதிர்ப்பு கிளப்பியுள்ள நிலையில், சர்கார் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பு தரப்பு ஒப்புக்கொண்டுள்ளது. இதனை மேற்கு மண்டல திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர்திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

சேனல் ஒன்றுக்கு திருப்பூர் சுப்ரமணியன் அளித்த பேட்டியில், அதிமுகவினர் மாநிலம் முழுக்க சர்கார் படத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து படத் தயாரிப்பாளர் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக, இன்று இரவு எந்தெந்த காட்சிகளை நீக்க வேண்டும் என முடிவு செய்து, நாளை மதியம் முதல் நீக்கப் பட்ட காட்சிகளுடன் மட்டுமே படம் திரையிடப்படும். இதனை தணிக்கை குழு அனுமதி பெற்று செய்வோம். இது தொடர்பாக படத்தின் இயக்குனர் முருகதாஸ், நடிகர் விஜய் ஆகியோருடன் நான் பேசவில்லை. தயாரிப்பு தரப்பு இந்த தகவலை அவர்களுக்கு சொல்லியிருப்பார்கள்.

படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இயற்பெயரைக் குறிப்பிடும் காட்சிகள், ம்யூட் செய்யப்படும். எனவே அதிமுகவினர் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அவர் கூறினார்.