சர்கார் ஓவர்… தமிழ் ராக்கர்ஸின் அடுத்த டார்கெட்…!

ரஜினி நடித்த 2.0 திரைப்படத்தை விரைவில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல் விடுத்துள்ளது.

ரஜினி நடித்த 2.0 திரைப்படத்தை விரைவில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல் விடுத்துள்ளது.

சர்கார் படத்தை இணையதளத்தில் வெளியிடுவோம் என்று கூறியிருந்த தமிழ் ராக்கர்ஸ், சொன்னபடியே பல்வேறு கண்காணிப்புகளுக்கும் மத்தியில் சர்கார் படத்தை இணையதளத்தில் வெளியிட்டது.

 ஆனால் அந்த லிங்க் பின்னர் வேலை செய்யவில்லை என்ற போதிலும், முதல் நாளே சர்காரை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், பெரும் பொருட்செலவில் உருவாக்கப் பட்டுள்ள இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தையும் இணையத்தில் வெளியிடுவோம் என்று அது எச்சரிக்கை செய்துள்ளது.