நீண்ட காலத்துக்குப் பின் ரஜினிக்கு ஹிட் கொடுக்கும் ‘ஓப்பனிங் ஸாங்’… கலக்கிய அனிருத்!

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் தற்போது வெளியாகி பிரமாண்டத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்தியிருக்கும் படம் 2.0. இதற்குப் பின்னும் இன்னும் 3 படங்கள் வரிசையாக வரும் என்று கூறி வரும் நிலையில், அடுத்து தயாராகி வரும் படம் பேட்ட!

பேட்ட படத்திற்கு இளமைத்துள்ளல் இசை அமைத்துள்ளார் அனிருத். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, த்ரிஷா, சிம்ரன், மகேந்திரன், நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

வரும் பொங்கல் அன்று வெளியாக உள்ளது பேட்ட. அஜித்தின் விசுவாசம். இந்தப் படத்துக்காக தியேட்டர்கள் முன்னமே புக் ஆகிவிட்டதால், பேட்ட அடுத்த டம்மி தியேட்டர்களில் தான் வருகிறது என்று பரவலாகப் பேசப்பட்டாலும், பேட்ட படத்தில் மரண மாஸ் காட்டியிருக்கிறார்கள். பேட்ட படத்தின் சிங்கிள் டிராக் பாடலான, “மரண மாஸ்” பாடல் தற்போது வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. விவேக் எழுதியுள்ள இப்பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியமும், அனிருத்தும் இணைந்து பாடியிருக்கிறார்கள்.

ரஜினியின் படங்களுக்கு 90களில் இருந்து பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் அமைந்தவை ஓபனிங் ஸாங்தான். ஆனால் அண்மைக் காலங்களில் அப்படி பாடல்கள் இடம்பெறாமல் சப் என்று இருந்தது ரஜினி ரசிகர்களுக்கு! இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு, ரஜினி ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் விதமாக உருவாகியிருக்கிறது மரண மாஸ் பேட்ட பாடல், அனிருத்தின் துள்ளல் பாடல் வெகுவாக ரசிகர்களை ஈர்த்திருக்கிறது. இந்தப் பாடல் யுடியூப்பில் வெளியான ஒரு நாளில் 33 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.