துப்பாக்கி முனை… பேக்கிங் வீடியோ.. யாரிவன்?

தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஹன்ஷிகா மோத்வானி ஆகியோர் நடித்துள்ள படம் துப்பாக்கி முனை.

கலைப்புலி எஸ்.தாணுவின் வி.கிரியேஷன் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில்  விக்ரம் பிரபு  மிரட்டலான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். .

ஹன்சிகா மோத்வானிக்கு 50வது படமாக அமைந்துள்ள இந்தப்  படத்துக்கு எல்.வி முத்து கணேஷ் இசையமைத்துள்ளார்.

துப்பாக்கி முனை படத்தின் டீசர் வெளியானபோதே அது பெரும் வரவேற்பை பெற்றது.  வரும் டிசம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் துப்பாக்கி முனை வெளியாகும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் துப்பாக்கி முனை படத்தின் பேக்கிங் வீடியோ,  ‘யாரிவன்’ என்ற பாடலுடன் தற்போது வெளியாகிள்ளது.

ஏ ஆர் முருகதாஸ் இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

#VCreations #ThuppakkiMunai Making Video with Song to be Launched by @ARMurugadoss at 5.15pm Today @iamVikramPrabhu @ihansika @din_selvaraj #LVMuthuGaneshMusical #Rasamathi @iam_LVM @thinkmusicindia @diamondbabu4