நம்ம ஊரு ஜோசப் விஜய், சர்வதேச அளவில் சிறந்த நடிகருக்கான விருது வாங்கியுள்ளதாக, ஒரு படம், சிறு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அதில், விஜய் ஐஏஆர்ஏ விருது பெற்றிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

ஐஏஆர்ஏ – என்பது, இண்டர்நேஷனல் அச்சீவ்மெண்ட் ரெகக்னிஷன் அவார்ட்… அதாவது சர்வதேச திறமையாளர்களை ‘கண்டுகொள்ளும்’ விருது என்று வைத்துக் கொள்ளுங்களேன்..! இந்த விருதைத்தான் விஜய் ஜோசப் பெற்றிருக்கிறார்.

சமூக வலைத்தள செய்திகளில், நடிகர் விஜய்க்கு சிறந்த நடிகருக்கான விருதை இங்கிலாந்தைச் சேர்ந்த ஐஏஆர்ஏ நிறுவனம் வழங்கியுள்ளதாகக் கூறப் பட்டுள்ளது. ஆனால், இந்த விருது குறித்த பின்னணியைப் பார்க்கப் போனால் அது அப்படி ஒன்றும் சொல்லும்படி அமையவில்லை!

IARA அமைப்பு 2014ஆம் ஆண்டு ஹெலன் இமாப் என்பவரால் தொடங்கப் பட்டுள்ளது. இங்கிலாந்தை மையமாகக் கொண்ட இந்த நிறுவனம் உலகளாவிய அளவில் நடிகர், நடிகை, டிவி கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், தொழிலதிபர் என்று துறையில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டும் விதமாக விருது வழக்குவதாகக் கூறியுள்ளது. இது தொடர்பான தகவல் இந்த அமைப்பின் இணையதளப் பக்கத்தில் உள்ளது. காண்க: https://iara-awards.org/about/

IARA விருதுக்கு முதன் முதலில் 2014ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டன் டொனால்ட் என்ற ஹாலிவுட் துணை நடிகரை சிறந்த நடிகராக தேர்வு செய்து விருதுக்கு அவர் பெயரை அறிவித்தது. ஆனால் இந்த நிறுவனத்தின் மீது நம்பிக்கை இல்லை அவருக்கு. எனவே அவர் அந்த விருதை வாங்க மறுத்துவிட்டாராம்.

இந்த வருடமும் அது விருதை அறிவித்துள்ளது. அது குறித்த விவரம் இந்தச் சுட்டியில்…https://iara-awards.org/winners-2018/ இதில் சிறந்த சர்வதேச நடிகர் என விஜய் ஜோசப் பெயர் இடம்பெற்றுள்ளது. இந்த நிறுவனத்திற்கு டிவிட்டரில் சொந்தமாக வெரிபைடு (VERIFIED) கணக்கு கூட இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. இதிலும், இந்த நிறுவனத்தின் கணக்கை டிவிட்டரில் ஃபாலோ செய்வது பெருபாலும் விஜய் ரசிகர்கள்தானாம்!

ஐஏஆர்ஏ அமைப்பு தொடங்கி 4 ஆண்டுகளே ஆகின்றது என்பதும், இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படும் நடிகர்களுக்கு முதலில் தகவல் அளிக்கப்படும் என்றும், அதன்படி அவர்கள் முதல் தவணையாக ரூ. 20 லட்சம் பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறப் படுகிறது. எனவே, விஜய் ஜோசப்பும் ரூ. 20 லட்சம் கொடுத்தால்தான் பெயரே பரிசீலனைக்கு ஏற்று கொள்ளப்பட்டிருக்கும் என்றும், விஜய் இந்தப் பணத்தைக் கொடுத்திருந்தால் மட்டுமே இது கிடைத்திருக்கும் என்றும் கூறுகிறார்கள்.

சர்வதேச அளவில் பணம் கொடுத்து ஒரு விருது பெற்று நாலு சுவருக்குள் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்து…. மிஸ்டர் ஜோசப் விஜய் .. இதெல்லாம் உங்களுக்குத் தேவையா? என்று கேட்கிறார்கள் சமூக வலைத்தளங்களில்!

ஒன்றுக்கும் உதவாத ஒரு விருதை, இவ்வளவு பணம் செலவழித்து ஏன் வாங்கினார் ஜோசப் விஜய் என்பது மட்டும் இதுவரை யாருக்கும் புரியவில்லை!

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...