விசுவாச அஜித்தை வெகுவாக பாராட்டும் காவல்துறை

விசுவாசம் படத்தில் அஜித்தை பாராட்டாதவர்களே இருக்க முடியாது

இந்தப் பாராட்டு வித்தியாசமான ஒரு துறையில் இருந்து வந்திருக்கிறது விசுவாசம் படத்தின் போக்குவரத்து விதிகளை சரியாக கடைபிடித்து அஜித் நடிப்பில் என் ரசிகர்களுக்கு நல்ல விதமாக அறிவுறுத்தி இருக்கிறார் முன்னோடியாக நடந்து கொண்டிருக்கிறார் என்று காவல் துறையைச் சேர்ந்த சிலர் நல்லதொரு விமர்சனத்தை அளித்து பாராட்டுகிறார்கள் அந்தப் பாராட்டில் ஒன்று…

A leader is someone who demonstrates what’s possible.

சமீபத்தில் வெளியான நடிகர் அஜீத்குமார் நடித்த விஸ்வாசம் படத்தினை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

படத்தில் கதை, பாடல்,நடிப்பு, சண்டைகாட்சிகள் என ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று பிடித்திருந்தாலும் எனக்கு சில காட்சிகள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது .

🎯 படத்தில் கதாநாயகன் , கதாநாயகி இருவரும் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயமாக ஹெல்மட் அணிந்து செல்வது.

🎯 கதாநாயகன் கார் ஒட்டும் போதெல்லாம் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுவது. தனது மகளின் உயிரை காப்பாற்ற செல்லும் அவசரத்தில் கூட சீட் பெல்ட் அணிந்து செல்வது.

🎯 பெற்றோர்கள் தங்கள் கனவுகளை குழந்தைகள் மேல் திணிக்காமல், அவர்கள் கனவுகளை எட்ட துணை நிற்க வேண்டுவது.

இந்தியாவில் சாலை விபத்துகளில் அதிகம் பேர் உயரிழக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. பல லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட அஜித்குமார் போன்ற நடிகர்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றுற்றி நடிக்கும் போது அவரது ரசிகர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே எனது அவா.

விஸ்வாசம் படத்தின் கதாநாயகன் அஜீத்குமார் மற்றும் இயக்குநர் சிவா மற்றம் அவரது குழுவினருக்கு பாராட்டுகள் .

என்றும் அன்புடன்
ச. சரவணன்
காவல் துணை ஆணையர்
தலைமையிடம்
சென்னை மாநகரம்

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.