எம்எல்90 டீஸருக்கே இவ்ளோ எதிர்ப்பா? ஓவியா ஆர்மிய ஓவரா திட்டுறாய்ங்களே…!

எம்.எல்.90 படத்தின் டீசரை யுடியூப்பில் பார்த்துவிட்டு, கழுவிக் கழுவி ஊத்துகிறார்கள் நெட்டிசன்கள். நேற்று யுடியூப்பில் பதிவு செய்யப் பட்டது என்விஸ் எண்டர்டெய்ன்மெண்ட்டின் எம்.எல்90. எஸ்டிஆர் மியூசிக்கல் என்று குறிப்பிட்டு வெளியான அந்த ’ஏ’ சர்ட்டிபிகேட் டீஸரைப் பார்த்துவிட்டு, பலரும் கொந்தளித்துக் கிடக்கிறார்கள்.

முன்னர் இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்ற படம் வெளியான போது தெரிவிக்கப்பட்ட கருத்துகளைப் போல் இப்போது பலரும் கருத்துப் பதிவுகளை இட்டு வருகின்றனர்.

ஓவியா மற்றும் பெண்கள் டீம் பேசும் இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாசத்தின் உச்சம் என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இத்தகைய படங்கள் சமூகத்தை சீரழிக்கும். குறிப்பாக பெண்கள் சமூகத்தை மேலும் சீரழிக்கும் என்று கொந்தளிக்கிறார்கள். தண்ணி அடிப்பது தம் அடிப்பது, கஞ்சா என தொடங்கி, ஆண்களுடனான உடலுறவு கொச்சை வார்த்தைகள் என பெண்களை கேவலமாக சித்திரித்துள்ள இந்த டீஸருக்கு ஆண்களும் எதிர்ப்பு காட்டியுள்ளனர்.

யுடியூபில் வெளியான ஒரு நாளில் பத்து லட்சம் பார்வையாளர்களை நெருக்கிக் கொண்டிருக்கும் இந்த டீசருக்கு சுமார் 4ஆயிரம் பேர் கருத்துப் பதிவிட்டுள்ளனர்.

அவற்றில் ஒரு சில கருத்துகள்…

saravanan balasubramaniyan – ஓவியா ஆர்மிகளா போங்கடா போய் செத்திருங்கடா..

Incredible India – Aarav Nee Oviya va venanu sonadhu correctu thn bha…!!

Parames Warn – சார் நம்ம தமிழ் நாடு பொண்ணுங்க. சேலை யில் இருந்து சுடிதாருக்கு மாருணாங்க ஆணா நம்ம கலாசரம் மாறல வேலைக்கு போங்க பப்பு க்கு போறதில்லை இண்ணும் பொண்ணு பாக்க போறப்ப. டப்புண்ணு அம்மா வுக்கு பிண்ணாடி போய் ஒளிந்து கொள்ளும் பழக்கம் மாறவில்லை இது போல ஆயிரம் படம் வந்தாலும் உங்க கார் ப்ரேட் பருப்பு
தமிழ்நாடு வேகாது

shi sha – Stupid teaser! This type of movies is going to spoil many young girls mind!

Muthu Muthu – இருட்டு அறையில் முரட்டுகுத்து படம் பார்க்காதவர்கள் மட்டும் நெகட்டிவ் கமென்ட் பன்னவும்.. பாத்தவங்களாம் நெகட்டிவ் கமென்ட் பன்ன துப்பில்ல…பெண்களில் ஒரு குரூப் இப்படித்தான் வாழுது தண்ணி கஞ்சா தம்முனு…அதெல்லாம் நடிச்சுக் காட்டினாத்தானே புரியும்…நிச்சயம் இதில் நல்லவிசயம் இருக்கும்…இது மாதிரி பொண்ணுங்க சிக்கலில் மாட்டி தவிப்பது போல திரைக்கதை அமைப்பு இருக்கும்…ஆம்பள தண்ணியடிச்சு ஆட்டம் போடுறா மாதிரி படம் வந்தா அதையும் தப்புனு சொல்லி பழகுங்க…அந்த மாதிரி அதாவது இருட்டு முரட்டுல நடிச்சவனுகளையும் இயக்கியவனையும் டேஷ் பையன்னு பொண்ணுங்களும் சொல்லலாம்ல…

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...