கண்ணடித்தல் காட்சி மூலம் தென்னிந்திய சினிமா உலகில் பிரபலம் அடைந்தவர் மலையாள நடிகை பிரியா வாரியர். அவரது நடிப்பில் வெளியான படம் ‘ஒரு அடார் லவ்’.

இந்தப் படம் அண்மையில் மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியானது. இந்தப் படத்தை ஓமர் லுலு இயக்கியிருந்தார்.

ஒரு அடார் லவ் என்ற இந்தப் படத்தில் பிரியா பிரகாஷ் வாரியர், ரோஷன் அப்துல் ரஹுப் என எல்லாம் ஒரு புதுமுகப் பட்டாளமே இறங்கியிருந்தது. அண்மையில் இந்தப் படம் வெளியாகி மலையாளத்தில் ஓரளவு வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தில் வரும் ஒரு பாடலில், கண்ணடித்தல் காட்சிக்காகவே இது சமூகத் தளங்களில் வைரலானது. ஆனால், இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் மிகவும் சோகமாக இருந்தது என்று கூறி ரசிகர்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்தனர்.

எனவே ரசிகர்களுக்குப் பிடித்த வகையில், இதன் க்ளைமாக்ஸ் காட்சிகளை மாற்ற வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பலரும் தங்கள் விருப்பங்களை தெரிவித்தனர்.

இதனால் யோசித்த இந்தப் படத்தின் கதைக் குழு இதன் க்ளைமாக்ஸை வேறு மாதிரி மாற்றியது. இயக்குனர் ஓமலர் மாற்றப்பட்ட இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை படமாக்கி, அதை படத்துடன் இணைத்துள்ளார்.

இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் பகுதியை மட்டும் மீண்டும் படமாக்கி, 10 நிமிடங்கள் கொண்ட புதிய க்ளைமாக்ஸ் காட்சியை இணைத்துள்ளனர். மேலும், படத்தின் மொத்த நீளத்தில் 10 நிமிட காட்சிகளை குறைத்துள்ளனர். இதனை ஒமர் லுலு தெரிவித்துள்ளார்.

ரசிகர்களின் விருப்பத்துக்கு ஏற்ப கிளைமாக்ஸை அதுவும் வெகுநாட்கள் கழித்து மாற்றுவது ஆச்சரியமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...