கோலிவுட்டையே நடுநடுங்க வைத்த விஷால்!

vishal11ரசிகர் மன்றமாக செயல்பட்டு வந்த மன்றங்களை “அகில இந்திய புரட்சி தளபதி விஷால் ரசிகர்கள் நற்பணி இயக்கம்” என்று மாற்றி இயக்கத்திற்கு புதிய கொடி அறிமுகப்படுத்தி, பெண் கல்வி என்கிற கோஷத்தை முன் வைத்து, புதிய தலைவராக ஜெயசீலனை அறிவித்துள்ளார் விஷால்.

அப்போது அவர் அளித்த பேட்டி வருமாறு… நடிகர் சங்க பிரச்சனையில் தலையிடுவது, திருட்டு விசிடிகளை தேடி அலைவது எதற்காக? நடிகர் சங்க நிர்வாகிகளின் செயல்பாடுகளை எதிர்க்க காரணம் நானும் அதில் ஒரு உறுப்பினர்தானே. என் பணமும் சங்கத்தில் இருக்கிறது. சங்கம் பாராபட்சமில்லாமல் நேர்மையாக நடக்க வேண்டும். என் கருத்தை சொல்லவும் தேவைப்பட்டால் போராடவும் எனக்கு முழு உரிமை உண்டு”.

திருட்டு விசிடி ரெய்டில் நானே ஒரு தயாரிப்பாளராகவும் நடிகராகவும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். ஆயிரக்கணக்கானவர்கள் உழைத்து ஒரு படத்தை உருவாக்கி கோடிக்கணக்கில் பணம் போட்டு எடுத்த படத்தை எவனோ ஒருவன் திருட்டு விசிடி போடுவான். இன்னொருத்தன் கேபிள் டி.வி.யில் போட்டு காசு சம்பாதிப்பான்…  இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு நான் விரல் சூப்பனுமா? என்றார்.

ராதாரவி உடனான பிரச்சனை குறித்து கேட்டதற்கு, “என்னை நாய் என்றும் கடன்காரன் என்றும் சொன்னார். பின்னர் நடிக்கத் தெரியாதவன் என்றும் சொல்லியிருக்கிறார். இதையெல்லாம் சரிப்படுத்திட்டு சங்கத்துக்கு வர சொல்கிறார். அவர் சொல்றபடியே நான் இருந்து விட்டுப் போகிறேன். ஆனால் நான் சரிப்படுத்தி விட்டு திரும்பி வருவதற்குள் இவர்கள் முழுமையாக சங்கத்தை துடைத்து விட்டு சென்று விடுவார்கள். எனவேதான் நான் இப்போதே கேள்வி கேட்கிறேன்” என்று காரசாரமாக பேட்டி கொடுத்துள்ளார் விஷால்.