ரசிகர்களின் கனவை சுக்குநூறாக்கிய கமல்!

rajini kamal4

ரஜினி, கமல் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் நீண்ட கால ஆசை. ஆனால் அந்த ஆசை இதுவரை நிறைவேறாமலே இருக்கிறது.

80களில் இருவரும் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளனர். ஆனால் இப்போது இருவரும் ஒரே படத்தில் இணைவதும் சாத்தியமில்லாததாக மாறிவிட்டது. இந்நிலையில் ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தில் ரஜினி ஹீரோவாகவும் கமல் வில்லனாக நடிப்பார் என்று கூறப்பட்டது.

ஆனால் கமல் தன்னுடைய அடுத்த படத்தில் பிஸியாக இருப்பதால் ரஜினியின் படத்திற்கு நோ சொல்லி விட்டார் என்று கமல் தரப்பில் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதோடு கமல், ஷங்கரை நேரில் சந்தித்து இதில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம்.

இதன்காரணமாக, சூப்பர் ஸ்டார், உலக நாயகன் இருவரையும் ஒரே படத்தில் காணலாம் என்று காத்திருந்த ரசிகர்களின் கனவை கமல் சுக்குநூறாக்கியிருக்கிறார்.