#திருமணநாள் வாழ்த்துக்கள் அஜித் ஷாலினி

இன்று தங்களது 19ஆவது ஆண்டு திருமண நாளைக் கொண்டாடுகின்றார்கள், தல அஜித் – ஷாலினி தம்பதியர்.

தமிழ் சினிமாவில் காதல் திருமணம் செய்து கொண்டு வெற்றிகரமாக எந்த சர்ச்சையிலும் சிக்காமல், 19 வருடங்கள் கடந்து சினிமா உலகமே வியந்து பார்க்கும் வகையில் திகழ்கிறது இந்த காதல் ஜோடி.

சினிமா உலகில் இன்றளவும் சிறந்த காதல் ஜோடியாக திகழும் அஜித்-ஷாலினி இருவரும் கடந்த 2000வது ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

அன்றைய நாளில் மிகப் பிரபலமாகத் திகழ்ந்த இவர்களின் காதல் 1999ஆம் ஆண்டு வெளியான ‘அமர்க்களம்’ படத்தில் அதே காதல் ஸீனுடனுயே ஆரம்பித்தது. படத்தில் வருவது போல் நிஜ வாழ்க்கையிலும் இந்த ஜோடி காதலில் விழுந்தது அப்போதைய கிசுகிசுக்களைத் தாண்டிய நிஜச் செய்தியாகவே இருந்தது!

குழந்தை நட்சத்திரமாக தமிழ், மலையாளம் என கலக்கிய ஷாலினி, திருமணத்திற்கு பின்னர் திரையுலக வாழ்க்கையை முற்றும் துறந்தவர் ஆகிவிட்டார்.

காதல் கணவர் அஜித் சந்தித்த வெற்றி தோல்விகளில் முற்றிலும் பங்கெடுத்தவராய், நட்சத்திர திருமண வாழ்க்கையின் உதாரணர்களாய் ஜொலித்து வருகிறார்கள் இருவரும்.

திருமணம் ஆகி 19 ஆண்டுகள் கடந்த நிலையில் மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் ஆகியோருடன் திரை உலகினருக்கு எடுத்துக் காட்டாய் வெற்றிகரமான வாழ்க்கையை நடத்தும் தல தம்பதிக்கு நம் ‘தினசரி’யின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...