சரத்குமார் நடித்த கம்பீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் மனிஷா ஜித்! இவர் நாயகியாக நடித்துள்ள படம் கடலை போட பொண்ணு வேணும்!

அண்மையில் கூட சென்னை நகரில் பலரும் செல்லும் அண்ணா சாலையில் இந்த படத்தின் விளம்பர போஸ்டர்கள் அதிகமாக ஒட்டப்பட்டிருந்தன! அந்த போஸ்டரில் இடம்பெற்ற வாசகங்கள் அதிக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தின!

போட ஒரு பொண்ணு வேணும் என்று பெரிதாக தெரிந்த அந்த வாசகங்கள் இரட்டை அர்த்தத்தை கொடுத்ததால் பலர் முகம் சுளித்தனர்!

இந்நிலையில் இந்தப் படத்தின் வெளியீட்டை ஆவலோடு எதிர்நோக்கியுள்ளார் மனிஷாஜித்! அவர் இது குறித்து கூறிய போது… குழந்தையாக நான் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன்! கமர்கட், ஆண்டாள் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறேன்

கடலை போட பொண்ணு வேணும் படத்தின் கதை கரு கொஞ்சம் வித்தியாசமானது தான்!  நான் கதாநாயகன் அசாருடன் நடித்தபோது அவர் சிரிக்க வைத்த படியே இருந்தார்! ஆனந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடித்தது மிகவும் வித்தியாசமான அனுபவம் என்று கூறினார்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...