கடந்த 2011இல் ராகவா லாரன்ஸ், சரத்குமார் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் காஞ்சனா. அதன் பிறகு காஞ்சனா படம் மூன்று பாகங்கள் வெளியாகிவிட்டன. அனைத்துமே பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றவையாகத் திகழ்கின்றன. குறிப்பாக, கடந்த மாதம் வெளியான காஞ்சனா-3 வது பாகம் இன்னமும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

காஞ்சனா படத்தை நடித்து இயக்கிய ராகவா லாரன்ஸே பாலிவுட்டிலும் காஞ்சனாவை இயக்கவிருப்பதாகக் கூறி ஏப்ரல் மாத இறுதியில் பூஜை போடப்பட்டது. இதில் லக்‌ஷ்மி ராய் நடித்த கதாபாத்திரத்தில் லஸ்ட் ஸ்டோரிஸ், தோனி பயோபிக்கில் நடித்த கியார அத்வானி ஆகியோர் நடிக்கிறார். ராகவா லாரன்ஸ் கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார்.

சர்ப்ரைஸாக திருநங்கையாக நடித்த சரத்குமார் வேடத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அபிதாப் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் அமிதாப் நடிப்பது பற்றி இதுவரை உறுதி செய்யப் படவில்லை. இந்தப் படத்துக்கு லக்ஷ்மி பாம் என்று தலைப் பிட்டிருந்தார்கள். நேற்று மதியம் இதன் ஃபர்ஸ்ட்லுக் வெளியானது.

இந்நிலையில் நேற்று இரவு தனது ட்விட்டர் பக்கத்தில், ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், காஞ்சனா ஹிந்தி ரீமேக்கிலிருந்து தாம் விலகுவதாகக் கூறியிருந்தார்.

இந்தப் பதிவில், பணம் புகழை விட சுயமரியாதைதான் முக்கியம். அதனால் காஞ்சனா இந்தி ரீமேக்கில் இருந்து நான் விலகுவதாக முடிவு செய்து இருக்கிறேன். இதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது அதனை நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் முக்கிய காரணம் எனக்கு தெரியாமல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட் டிருக்கிறார்கள். ஒரு கலைஞனாக எனக்கு இந்த ஃபர்ஸ்ட் லுக்கிலும் திருப்தி இல்லை. நான் மிகவும் அவமரியாதை செய்யப்பட்டதாக உணர்கிறேன். நான் இதுவரை எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை. எனக்கு அக்‌ஷய் குமார் மீது மிகுந்த மரியாதை இருக்கிறது. அதனால் அவரை சந்தித்து கதையை மட்டும் கொடுக்கப் போகிறேன். இந்தப் படம் வெற்றியடைய என் வாழ்த்துகள்’’ என்று தெரிவித்துள்ளார்.

அவரது  இந்த டிவிட் பாலிவுட்டில் ஒரு கலக்கு கலக்கியிருக்கிறது.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...