22/10/2019 1:56 AM
சினிமா சினி நியூஸ் கரகாட்டகாரனுக்கு வயது 30..!

கரகாட்டகாரனுக்கு வயது 30..!

கவுண்டமணி, செந்தில், கோவை சரளா ஆகிய 3 பேரின் நகைச்சுவை காட்சிகள் இப்போதும் ரசிக்கப்பட்டு வருகின்றன. அதிலும் அந்த வாழைப்பழ காமெடியை இன்றுவரை யாராலும் அடித்துக் கொள்ள முடியவில்லை.

-

- Advertisment -
- Advertisement -

அட.. ஆமாம்!  கரகாட்டக்காரனுக்கு இன்று வயது 30. கரகாட்டக்காரனைப் பற்றி நாம் கட்டாயம் பேசியாக வேண்டும்.

இயல்பு மாறாமல் ஜனரஞ்சமாக எடுக்கப்படும் ஒரு திரைப்படம் எல்லாத் தரப்பு மக்களாலும் எப்படியெல்லாம் கொண்டாடப்படும் என்பதற்குக் கரகாட்டக்காரனே சிறந்த எடுத்துக்காட்டு. தற்காலத்திலும்கூட ஏதேனுமொரு தொலைகாட்சியில் கரகாட்டக்காரன் ஒளிபரப்பாகிறது. மக்கள் விரும்பிப் பார்க்கிறார்கள்..

திருச்சியில் ரம்பா திரையரங்கில் ரிலீசாகி கூட்டம் இல்லை என்பதால் பேலஸ் தியேட்டருக்கு மாற்றறப்பட்டடுத்த.என்ன மாய்மோ மந்திரமோ தெரியவில்லை மாற்றப்பட்ட ஒரு சில நாளில் கட்டுக்கடங்காத கூட்டம்….திட்டுமிட்டு இறுக்கிப்பிடித்து இழைத்து இழைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களைக் காட்டிலும் இயல்பான கதையை வைத்துக்கொண்டு வழமையாக எடுக்கப்பட்ட கரகாட்டக்காரன் பட்டிதொட்டியெங்கும் நில்லாமல் தொடர்ந்தோடியது. இன்றைக்குவரை கரகாட்டக்காரன் நிகழ்த்திய பல சாதனைகளை இன்று வரை எப்படமும் முறியடித்ததாகத் தெரியவில்லை.

வெற்றியென்றால்… உங்கள் வீட்டு வெற்றி எங்கள் வீட்டு வெற்றி இல்லை. தெறிக்கவிட்ட வெற்றி. அதிரிபுதிரி வெற்றி. மதுரையில் 350 நாட்களைக் கடந்து ஓடியது. திருச்சி, கோவை, நெல்லை, தஞ்சாவூர், சேலம், விழுப்புரம், நாகப்பட்டினம், கடலூர் என பல ஊர்களிலும் 100 நாள், 150 நாள், 175 நாள் என போட்ட தியேட்டர்களிலெல்லாம் வசூல் மழை. ரசிகர்கள்
படத்தைத் திரும்பப் பார்த்தார்கள். திரும்பத் திரும்பப் பார்த்தார்கள். மூன்றாம் நாள் பார்த்துவிட்டு, முப்பதாம் நாள் திரும்பவும் பார்க்கப் போனவர்கள், படம் பார்க்க முடியாமல், ‘ஹவுஸ்ஃபுல்’ போர்டை மட்டும் பார்த்துவிட்டு வந்தார்கள்.

பாட்டுக்காகப் படம் பார்த்தார்கள். இசைக்காகப் படம் பார்த்தார்கள். கதைக்காக பார்த்தார்கள். பொழுதுபோக்கிற்காக பார்த்தார்கள். எல்லாவற்றையும் விட முக்கியமாக, காமெடிக்காகப் பார்த்தார்கள். பார்த்துக்கொண்டே இருந்தார்கள்.
இராமராஜன் என்னும் நடிகர் ஆட்டத்தில் வல்லவரல்லர். ஆனால், அவரைக் கரகாட்டக்காரனாகக் காட்டியது யாரையுமே உறுத்தவில்லை. அவருடைய ஆட்டத்திலும் நமக்குக் குறை தோன்றவில்லை. பாடத் தெரியாத நடிகரைப் பாடுவதுபோல் காட்டிவிடலாம். அதுபோல் எளிதில்லை ஆடத்தெரியாத நடிகரை ஆட வைப்பது. கரகாட்டக்காரனில் அது நடந்தது.

படத்தின் காதற்காட்சிகளை ஈர்ப்பாக்குவதற்குப் புதுமுக நாயகி. “துண்டோட இன்னொன்னையும் விட்டுட்டுப் போய்ட்டேன்… அதை எடுத்து வெச்சிருக்கீங்களா ? என் மனசத்தான் விட்டுட்டுப் போனேன்…” என்ரு முத்தையன் சொல்கையில் காமாட்சி வெட்கத்தோடு கூறுவது : “ஒரு மனசைக் கண்டுபிடிக்கணும்னா அது இன்னொரு மனசாலதான் முடியும்… அப்படிக் கண்டுபிடிக்கறதுக்கு என் மனசு என்கிட்ட இல்ல… அது உங்ககிட்டதான் இருக்கு…!” பின்னணியில் புல்லாங்குழல் இசையோடு வந்த அந்தக் காட்சி காதற்சுவையோடு இருந்தது.

வழக்கம்போலவே இளையராஜா இசை. வெற்றிக்குச் சொல்லவா வேண்டும்.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் கங்கை அமரன். இளையராஜா இசை. ‘படத்தின் வெற்றிக்கு இளையராஜா ஒருவர்தான் காரணம்’ என்று கங்கை அமரன் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

இசைஞானி இளையராஜா இசையில் படத்தில் இடம்பெற்ற இந்தமான் உங்கள் சொந்தமான், குடகுமலை காற்றில் வரும் பாட்டு கேட்குதா, மாங்குயிலே பூங்குயிலே, ஊருவிட்டு ஊருவந்து, பாட்டாலே புத்தி சொன்னான் மாரியம்மா மாரியம்மா உள்ளிட்ட இனிமையான பாடல்கள் உலகெங்கும் தமிழ் மக்கள் உள்ள இடங்களில் எல்லாம் ஒலிக்குமே..

கவுண்டமணி, செந்தில், கோவை சரளா ஆகிய 3 பேரின் நகைச்சுவை காட்சிகள் இப்போதும் ரசிக்கப்பட்டு வருகின்றன. அதிலும் அந்த வாழைப்பழ காமெடியை இன்றுவரை யாராலும் அடித்துக் கொள்ள முடியவில்லை.

அப்படம் ஓடிய அரங்குகள் இன்று பாழடைந்துவிட்டன. படத்தில் இடம்பெற்ற காந்திமதி, சண்முகசுந்தரம் போன்ற கலைஞர்கள் பலர் இன்றில்லை. மீதமுள்ளவர்களில் பலர் ஓய்வு பெற்றுவிட்டார்கள். ஆனால், கரகாட்டக்காரனைப் பார்ப்பதற்கு இப்போதும் மக்கள் இருக்கிறார்கள். போக்குவரத்து நெரிசலில் நிற்கும் ஏதோ ஒரு வண்டி “மாங்குயிலே பூங்குயிலே” என்கிறது. பண்பலைகளில் இரவு நேரத்தில் “குடகுமலைக் காற்று” வருகிறது. சேந்தம்பட்டி முத்தையனும் காமாட்சியும் நம் நினைவை விட்டு என்றும் அகலமாட்டார்கள். வெகுமக்களுக்கான கலையால் வாழ்வது என்பது இதுதான்…

  • படித்ததில் பிடித்தது.. பகிர்ந்தது… – நெல்லை சுரேஷ்
Sponsors

- Advertisement -
- Donate via PayTM -
Tamil Dhinasari News..! We are in the path of protecting our Hindu dharma! Please consider supporting us to run this Tamil web portal continuously.

1 கருத்து

-Advertisement-

சினிமா:

-Advertisement-
-Advertisement-
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you

%d bloggers like this: