22/09/2020 9:23 AM

பிக்பாஸ் வீட்டுக்குள் புகுந்து… வனிதாவை கட்டம் கட்டிய போலீஸ்!

இதை அடுத்து வனிதாவைக் கைது செய்ய பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கும் வீட்டுக்கு தெலங்கானா மாநில போலீசார் வந்ததாகக் கூறப் படுகிறது.

சற்றுமுன்...

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

கொரோனா கொடூர பரவலுக்கு தப்ளிக் ஜமாஅத் காரணம்: உறுதிப் படுத்திய உள்துறை அமைச்சகம் !

காவல்துறையினர் 233 தப்லீகி ஜமாஅத் உறுப்பினர்களை கைது செய்ததாகவும், மார்ச் 29 முதல் 2,361 பேர் அமைப்பின் தலைமை

திருப்பதி பிரமோத்ஸவம்: ஆண்டாள் கோயில் மாலை, கிளி, பரிவட்டம் அனுப்பி வைப்பு!

மாலை நேற்று மாலை முதல் கோவில் வளாகத்திலேயே வைத்து மனோரஞ்சிதம் உள்ளிட்ட அரிய வகை மலர்களால் தயாரிக்கப்பட்டது.

விவசாய மசோதாவை ஆதரிப்பதுதான் எங்கள் நிலைப்பாடு: ஆர்.பி.உதயகுமார்!

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோட்டையில் தேசியக்கொடி தான் பறக்கும் என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார்

விவசாயிகளுக்கு பெருமளவு லாபம் தரும் சட்டம்: தமிழக பாஜக., தலைவர்!

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அவரின் நடவடிக்கைகள் தெரியவரும்" என கூறினார்.

vanitha biggboss இரண்டாவது கணவரின் மகளைக் கடத்தி வந்ததாக நடிகை வனிதா விஜயகுமார் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது தெலங்கானா மாநில காவல் துறை! இதை அடுத்து வனிதாவைக் கைது செய்ய பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கும் வீட்டுக்கு தெலங்கானா மாநில போலீசார் வந்ததாகக் கூறப் படுகிறது.

இது குறித்து விஜய் டிவி.,யும் உறுதிப் படுத்தியுள்ளது. மேலும், வனிதா விஜயகுமாரிடம் வழக்கமான விசாரணை நடத்ததான் போலீஸார் வந்ததாகவும் கூறியது. இருப்பினும், இதுவரை எந்த முடிவும் எடுக்கப் படவில்லை என்றும், அவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றுவதற்கான எந்த முடிவும் டிவி நிர்வாகத்தால் எடுக்கப் படவில்லை, இப்போதும் பேச்சுதான் நடந்து கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளனர் டிவி தரப்பினர். இதே போல் இன்னொரு பங்கேற்பாளர் மீதும் ஒரு மோசடி வழக்கு இருப்பதாகவும், சென்னை போலீசார் இது குறித்து விசாரித்து வருவதாகவும் டிவி.,தரப்பில் கூறப்பட்டது.

நடிகர் விஜயகுமார் – மஞ்சுளா தம்பதியரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார்! இவருக்கு முன்னாள் கணவர்கள் 2 பேர். முதல் கணவர் நடிகர் ஆகாஷுக்கு ஒரு மகன் உள்ளார். வனிதாவின் இரண்டாவது கணவர் தொழில் அதிபர் ஆனந்தராஜூக்கு 10 வயதில் ஒரு மகள் உள்ளார். அவரை பிரிந்து 3-வதாக நடன இயக்குனர் ராபர்ட் உடன் வாழ்ந்து வந்தார்.

vanitha vijayakumarதற்போது, விஜய் டிவி,யில் நடத்தப் பட்டு வரும் பிக்பாஸ் என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராகப் பங்கேற்றுள்ளார் வனிதா விஜயகுமார்.

இவர், இரண்டாவது கணவரை பிரிந்தபோது, அவர்களது மகள் தனது தந்தையுடன் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சில மாதங்களுக்கு முன்பு தனது மகளைப் பார்க்க ஐதராபாத் சென்ற வனிதா, கணவர் ஆனந்தராஜுக்குத் தெரியாமல் மகளை சென்னைக்கு அழைத்து வந்துவிட்டாராம். இது குறித்து ஆனந்தராஜ் அளித்த புகாரின் பேரில், தெலங்கானா காவல்துறையினர் கடத்தல் வழக்குப் பதிவு செய்து வனிதாவை தேடி சென்னை வந்தனர். வனிதா தலைமறைவாக உள்ளார் என்று கூறி வழக்கை விசாரிக்காமல் கிடப்பில் போட்டனர்.

இந்நிலையில் வனிதா, விஜய் டிவி.,யின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதால், அவர் தலைமறைவாகவில்லை என்பது உறுதியானது. இதை அடுத்து ஆனந்தராஜ், மீண்டும் தெலங்கானா காவல்துறைக்கு தகவல் அளித்தார். இந்நிலையில், கடத்தல் வழக்கில் தொடர்புடைய வனிதா விஜயகுமாரை கைது செய்வதற்காக தெலங்கானா காவல்துறையினர் சென்னை வந்தனர். பூந்தமல்லியில் பிக்பாஸ் அரங்கம் அமைக்கப்பட்டுள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

வனிதாவை கைது செய்ய ஒத்துழைக்குமாறு, டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளரிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் முடிவு எட்டப்படவில்லை. இதனால் அவர்கள் நசரத்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று தமிழக போலீஸிடம் உதவி கோரினர். போலீசார் டிவி நிகழ்ச்சித் தயாரிப்பாளரை அழைத்து வனிதாவையும், கடத்தப்பட்டதாகக்கூறப் பட்ட சிறுமியையும் போலீசிடம் ஒப்படைக்க அறிவுறுத்தினர்.

மேலும், கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட நடிகை வனிதாவை ஒப்படைக்க மறுக்கும் பட்சத்தில், பிக்பாஸ் அரங்கத்திற்குள் புகுந்து வனிதாவை கைது செய்து அழைத்துச் சென்று குழந்தையை மீட்போம் என்று போலீஸார் கூறினராம்.

இந்நிலையில், கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்கள் பதுங்கும் இடமாகவும் அவர்களைப் பாதுகாக்கும் இடமாகவும் பிக்பாஸ் வீடு உள்ளது என்று தெலங்கானா போலீஸார் கூறியுள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

விளம்பரம்… வளரும் குழந்தைகளிடம் மூட நம்பிக்கையை வளர்க்கலாமா?

வளரும் பிள்ளைகளிடம் மூடநம்பிக்கையை வளர்க்கலாமா விளம்பரம்?

சமையல் புதிது.. :

சினிமா...

இந்த கல்யாண வேலைல… இப்ப சமந்தா ரொம்ப பிஸி!

ரகசியமாக அகில் திருமணம். நிச்சயம் செய்த அக்கினேனி ஃபேமிலி. திருமண விஷயத்தில் சுறுசுறுப்பாக சமந்தா.

Source: Vellithirai News

என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்:  நடிகர் அஜித் எச்சரிக்கை!

தன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

Source: Vellithirai News

சூரரைப் போற்று … நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு!

சூரரைப் போற்று திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source: Vellithirai News

நீட் சூர்யாவிடம்… கேள்விகளை நீட்டாக நீட்டிய மாணவர்கள்! பதில் சொல்லுங்க சார்..!

சூர்யா அவர்கள், பல்வேறு வினாவை “நீட் தேர்வு” சம்பந்தமாக எழுப்பியுள்ளார். அவருடைய கேள்விகளுக்கு பதில்கள்... அடுத்து மாணவர்கள் கேட்கும் சில கேள்விகள்!  Source: Vellithirai News

அப்பா உடற்பயிற்சி செய்கிறார்: எஸ்பிபி சரண்!

பாலு விரைவில் நலமடைந்து வீட்டுக்கு திரும்ப வர வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோ இதோ!

செய்திகள்... மேலும் ...

Translate »