சினிமா விமர்சனம் விமர்சனம்: கைதி - KAITHI - காவலன் ...!

விமர்சனம்: கைதி – KAITHI – காவலன் …!

நல்ல கதை , திரைக்கதையோடு மாஸ் ஹீரோவையும் இயக்குனர் கச்சிதமாக பயன்படுத்தியிருக்கும் விதத்தில் இந்த கைதி ரசிகர்களுக்கும் , தயாரிப்பாளருக்கும் ஒரு நல்ல காவலன்

-

- Advertisment -

சினிமா:

முதல்வரை காணச் சென்ற பாரதிராஜா! காணாமலே திரும்பினார்.. காரணம்?

தமிழ் சினிமாவில் தனது இசை மூலம் தமிழ் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பரப்பி வளர்த்ததோடு அதை உலகறியச் செய்த இளையராஜாவை தமிழக அரசு கௌரவிக்கும் வகையில் அரசாங்கத்தின் சார்பில் சென்னையில் இளையராஜாவுக்கு ஒரு காலி இடத்தை கொடுத்து அதில் அவர் ஸ்டுடியோ கட்டிக்கொள்ள அனுமதிக்க வேண்டும்

சிரஞ்சிவிக்கு ‘நோ’ கௌதம் மேனனுக்கு ‘ஓகே’ சொன்ன அனுஷ்கா!

அதோடு, நிசப்தம் படப்பிடிப்பை முடித்த பிறகு சில டைரக்டர்களிடம் கதை கேட்டு வந்த அனுஷ்கா, அந்த படங்களில் ஒரு படத்தைக்கூட ஓகே பண்ணவில்லையாம்.

ஹரிஸ் கல்யாணை டேட்டிங் செய்ய எப்படி அழைப்பது? ரைசா!

உண்மையாக நான் இதை இதற்கு முன் செய்ததில்லை. இதை எப்படி செய்வது என்று கூட எனக்குத் தெரியாது. ஒருவரை வெளியே அழைப்பது எப்படி

சர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 படங்கள்..!

தேவி, தேவிபாலா, அண்ணா திரையரங்கம், கேசினோ, ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம், தாகூர் பிலிம் சென்டர்.
-Advertisement-

அறநிலையத் துறையில் ‘கிறிப்டோ கிறிஸ்துவர்’! என்ன நாசவேலை நடக்குது பாருங்க..!

இந்து அறநிலைத் துறையில் துணை ஆணையராக வேலை செய்கிறேன்! வேலை பார்க்கும் இடம், நாமக்கல் ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில். சர்டிஃபிகேட் படி நான் ஹிந்து தான். உங்களால என்னைப் போன்றவர்களை ஒன்னும் செய்ய முடியாது.

சாரி… சிதம்பரம் பிரஸ்மீட்ல இந்தக் கேள்விய எல்லாம் கேட்க முடியல… அதுக்காக மன்னிச்சிருங்க!

கேள்விகளை எல்லாம் அவர் முன் வைத்து கேட்க வேண்டும் என்ற ஆசைதான்! ஆனால் என்னைச் சுற்றிலும் இருக்கும் ஜால்ரா ஊடகப் பெருமக்கள் என்னை கீழே அழுத்தி ஏறி மிதித்து என் குரல்வளையை நெரித்து, பத்திரிகை சுதந்திர மற்றும் ஜனநாயக முறைப்படி நெறிமுற தவறாமல் பத்திரிகையாளர் சந்திப்பை ஆக்கிவிட்டதால்...

என்கவுண்டரில் நீதி கிடைக்காது: வரங்கல் ஆசிட் வீச்சில் பாதிக்கப் பட்ட பெண் கருத்து!

தவறு செய்தாலும் தம்மை யாரும் பிடிக்க மாட்டார்கள். ஒருவேளை பிடிபட்டாலும் பெயிலில் வெளியே வந்துவிடலாம் என்ற குருட்டு தைரியத்தில் தான் நிறைய பேர் குற்றம் செய்ய முன் வருகிறார்கள் என்று கருத்துக் கூறினார் பிரணிதா.

போலீஸின் ‘பார்வை’ பலாத்காரத்திலும்… ஊடகங்களின் கொச்சை ‘கேள்வி’ பலாத்காரத்திலும்… சின்னாபின்னமாகும் மகளிர் மாண்பு!

"நீங்கள் ஏன் உடனே அந்த கான்ஸ்டபிளை "டேய்! ஏண்டா என் மார்பை உறுத்துப் பார்க்கிறாய்?" என்று கேட்டிருப்பது தானே மேடம்?" என்று ஒரு டிவி ரிப்போர்ட்டர் அவரிடம் கேட்டுள்ளார்!

வெளிநாட்டுலேந்து வந்தா வெள்ளையா தானே இருக்கும்.. இதென்ன கருப்பா இருக்கு..வெங்காயத்தை ஒதுக்கும் மக்கள்!

வெங்காயம் பார்க்க நிறம் மட்டும்தான் கருப்பாக இருக்கிறது. ஆனால், நம்ம ஊர் வெங்காயம் போலவேதான் இதுவும் என்று வணிகர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள்.

சாரி… சிதம்பரம் பிரஸ்மீட்ல இந்தக் கேள்விய எல்லாம் கேட்க முடியல… அதுக்காக மன்னிச்சிருங்க!

கேள்விகளை எல்லாம் அவர் முன் வைத்து கேட்க வேண்டும் என்ற ஆசைதான்! ஆனால் என்னைச் சுற்றிலும் இருக்கும் ஜால்ரா ஊடகப் பெருமக்கள் என்னை கீழே அழுத்தி ஏறி மிதித்து என் குரல்வளையை நெரித்து, பத்திரிகை சுதந்திர மற்றும் ஜனநாயக முறைப்படி நெறிமுற தவறாமல் பத்திரிகையாளர் சந்திப்பை ஆக்கிவிட்டதால்...

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல்: மக்களவையில் 293 பேர் ஆதரவு!

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் சட்ட மற்றும் அரசியலமைப்பு தகுதி குறித்த தீவிர விவாதத்திற்குப் பிறகு, மக்களவை மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவாக 293 பேர் வாக்களித்துள்ளனர்.

குற்றவியல் நடைமுறை சட்டத்தில் திருத்தம்; மத்திய அரசு அதிரடி.!

இப்பொழுது இருக்கும் ஜனநாயக கட்டமைப்பிலேயே நாட்டுக்கு ஏற்ற வகையில் இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் உள்ளிட்டவற்றில் திருத்தம் செய்ய மோடி தலைமையிலான அரசு உறுதி கொண்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான அட்டூழியங்கள் நிறுத்தப்பட அனைவரும் சபதம் எடுக்க வேண்டும்; வெங்கையாநாயுடு.!

நம் நாட்டை நாமே இழிவுபடுத்தக்கூடாது. இதுபோன்ற சம்பவங்களை வைத்து அரசியல் செய்யக்கூடாது' என்றும் அவர் கூறினார்.

கார்த்திகை தீபத்துக்கு… மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது கொப்பரை!

கார்த்திகை மகாதீபம் திருவிழாவை முன்னிட்டு, மலை உச்சிக்கு கொப்பரை கொண்டு செல்லப்பட்டது!

குழந்தை இல்லையே ரஜினிமுருகன் எடுத்த விபரீத முடிவு.!

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழில் பெயர்ப் பலகை- அரசாணையை மிகத் தீவிரமாக செயல்படுத்த வேண்டும்: ராமதாஸ்!

கடைகளின் பெயர்ப்பலகைகள் தமிழில் எழுதப்பட வேண்டும் என்ற அரசாணை 42 ஆண்டுகளாகியும் செயல்படுத்தப்படாதது வருத்தமளிக்கிறது.

கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்கிறார் முதலமைச்சர் எடியூரப்பா!

15 தொகுதி இடைத்தேர்தலில் 5ல் வென்று, 6 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது பாஜக.,

ஐஎன்எக்ஸ் நிதிமோசடியில் சிதம்பரம் பற்றி டிவிட்டரில் பதிந்த நபரை மிரட்டிய கார்த்தி! எப்படின்னு பாருங்க!

அதனை இப்போது மிரட்டல்களின் மூலம் மெய்ப்பித்து வருகிறார் கார்த்தி சிதம்பரம் என்று டிவிட்டர்வாசிகள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டி கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றார்கள்.
- Advertisement -
- Advertisement -

கைதி – KAITHI – காவலன் …

முதல் படத்திலேயே முத்திரை பதித்த இளம் இயக்குனர்கள் அடுத்த படங்களில் பெரிய ஹீரோக்களுடன் வேலை பாடர்க்கும் போது நிறைய காம்ப்ரமைஸ் செய்து கொண்டு தங்களது தனித்திறமையை இழந்து விடுவார்கள் .

அப்படி மாஸ் ஹீரோவிடம் முழுவதுமாக சரண்டர் ஆகாமல் தங்களது தனித்துவத்துடன் வெற்றிப்பயணத்தை தொடரும் சில இயக்குனர்களில் ஒருவராக மாறியிருக்கிறார் மாநகரம் இயக்குனர் லோகேஷ்கனகராஜ் . ( அடுத்த படத்தில் விஜய்யுடன் இதே பயணத்தை தொடர முடியுமா என்பது சந்தேகமே! ) …

பொது மக்களை காப்பாற்றும் காவலர்களை போதை மருந்து கடத்தல் கும்பலிடமிருந்து  ஒரு கைதி காப்பற்றுவதே கதை . 

பத்து வருட தண்டனைக்கு பிறகு தனது மகளை பார்க்க பரோலில் வெளியே வரும் டில்லி ( கார்த்தி ) , பல நூறு கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை மடக்கியிருக்கும் பிஜாய் & கோ ( நரேன் ) வையும் , போலீஸ்காரர் நெப்போலியன் ( மரியான் ) உதவியுடன் கமிசனர்  ஆஃபீசில் அடைபட்டிருக்கும் மாணவர் களையும்  அடைக்கலராஜின் ( ஹரிஷ் உத்தமன் ) மாஃபியா கேங்கிடமிருந்து எப்படி காப்பாற்றுகிறார் என்பதை முதல் பாதி த்ரில்லிங் திரைக்கதையாலும் , இரண்டாம் பாதி  ஹீரோயிச ஆக்ஸன்களாலும் விறுவிறுவென சொல்லி முடிக்கிறது படம் …

சாக்லேட் பாய் கேரக்டரில் நடித்த தேவ் அட்டர் ஃப்ளாப்பான பிறகு ரஃப் & டஃ ப் பருத்திவீரன் ரூட்டுக்கு திரும்பி யிருக்கும் கார்த்தி க்கு இந்த படம் கை கொடுத்திருக்கிறது .

சிறிய  தாமதத்திற்கு பிறகு அறிமுகமானாலும் வந்ததிலிருந்து  கவனம் முழுவதையும் தன் மேல் திரும்ப வைக்கிறார் . ஐஜி வீட்டில் நடக்கும் அமளிதுமளியை கண்டுகொள்ளாமல் வாளி  பிரியாணியை முழுங்குவது , ” பத்து வருஷம் உள்ள இருந்தேன்னு தெரியும் ஆனா என்ன பண்ணிட்டு உள்ள போனேன்னு தெரியாதுல்ல சார் ” என்று நரேனை பார்த்து சொல்வது , ஒரே டேக்கில் தனது தனது ஃப்ளாஸ்பேக்கை சொல்லி முடிப்பது , தன் மகளை பார்த்தவுடன் மருகுவது என கார்த்தி பல நடிகர்கள் இருந்தாலும் படம் முழுவதும் வியாபித்திருக்கிறார் …

முகமூடி க்கு பிறகு நரேனுக்கு நல்ல ரோல் . கையருந்த நிலையில் கைதியின் உதவியுடன் சக காவலர்களை காப்பாற்றும் போலீஸ் அதிகாரியாக பெர் ஃபெக்டராக இருக்கிறது அவர் நடிப்பு

 ரமணா இத்தனை வருடங்கள்  அப்படியே இருப்பது ஆச்சர்யம் , கார்த்தியோடு ஒரு ஃபைட் வைத்து அவர் கதையை முடித்து விடுகிறார்கள் . ஐயா ஐயா என்று ஃபோனில் விறைப்பாக பேசும் மரியான்  நடிப்பால் நிமிர வைக்கிறார் .

சிறையில் இருக்கும் மெயின் வில்லன் ஹரிஷ் உத்தமனை கடைசி வரை கத்துவது தவிர எதுவும் செய்ய விடாமல் வீணடித்திருக்கிறார்கள் . போலீஸ் கருப்பாடாக வரும் டிப்ஸ் கடைசியில் முதுகில் குத்தப்பட்டு இறப்பது நல்ல முடிவு …

படத்தில் ஹீரோயின் இல்லை , சாங்க்ஸ் இல்லை , தனி காமெடி டிராக் இல்லை , குறிப்பாக ஆக்ஸன் படத்தில் மாஸ் ஹீரோ பேசும் பன்ச் டயலாக் இல்லை இப்படி நிறைய இல்லைகள் இருந்தும் அதை தொல்லையில்லாத க்ரிப்பான திரைக்கதையால் கட்டிப்போடுகிறார் இயக்குனர் .

முதல் 15 நிமிடங்களுக்குள் எல்லா மெயின் கேரக்டர்களையும் படத்திற்கான  ப்ளாட்டையும் அறிமுகம் செய்து ஹீரோவின் வருகைக்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஆரம்பத்திலேயே அதகளத்துடன் ஆரம்பிக்கும் படம் இண்டெர்வெல் வரை ஒன் வேயில் டாப் கியரில் பறக்கிறது .

சாவதற்கு முன் ஸ்டூடெண்ட்டுக்குள் நடக்கும் காதல் ஸ்வீட்  ஹைக்கூ . 

சாம் எஸ்ஸின் பின்னணி இசை , சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு , பிலோமின் ராஜின் எடிட்டிங் எல்லாமே படத்துக்கு பக்க பலம் .

லாரி சேஸிங் ஸ்டண்ட் காட்சிகளை திறம்பட எடுத்திருக்கிறார்கள் . அதுவும் நெற்றியில் பட்டையை அடித்துக்கொண்டு எதிரிகளை அடித்து பட்டையை கிளப்பும் கார்த்தி தனி அழகு …

ப்ளாஷ்பேக்கில் நேரத்தை வீணடிக்கா விட்டாலும் ” நான் என்ன செஞ்சுட்டு உள்ள போனேன்னு தெரியுமா ” என்று ஒரு பில்டப் கொடுத்ததால்  ஏற்படும் எதிர்பார்ப்பு கார்த்தி ஒரே டேக்கில் தன்  கதையை சொல்லி முடிக்கும் போது சப்பென்று ஆகி விடுகிறது .

அத்தனை பெரிய கமிஷனர் ஆஃபீஸில் கத்தி அரிவாளுடன் தாக்க வரும் கும்பலை சமாளிக்க ஒரு துப்பாக்கி கூட இல்லாமலிருப்பது , ரூட்டை மாற்றிப் போனாலும் சரியாக அந்த இடத்துக்கு கும்பல் வந்துவிடுகிறதே என்பதை நரேன் யோசிக்காமலேயே இருப்பது , போலீஸ் உளவாளி சீன்கள் குருதிப்புனலை நியாபகப்படுத்துவது ,கத்திக்குத்து , கல்லடி எல்லாம் வாங்கி குற்றுயிரும் , கொலையுயிருமாக இருக்கும் கார்த்தி மகளுக்கு வாங்கிய ஜிமிக்கியை ரமணா மிதித்தவுடன் பொங்கியெழுந்து பத்து நிமிடம் சண்டை போடுவதெல்லாம் தரமான படத்துக்கு வைக்கப்பட்ட  திருஷ்டிப்பொட்டு .

பலகோடி பட்ஜெட் , பெரிய விளம்பரம் எல்லாம் செய்து கதையை நம்பாமல் வெறும் ஹீரோவின் மார்க்கெட்டை மட்டும் நம்பி எடுக்கப்படும் படங்களுக்கு மத்தியில் நல்ல கதை , திரைக்கதையோடு மாஸ் ஹீரோவையும் இயக்குனர் கச்சிதமாக பயன்படுத்தியிருக்கும் விதத்தில் இந்த கைதி ரசிகர்களுக்கும் , தயாரிப்பாளருக்கும் ஒரு நல்ல காவலன் …

ரேட்டிங் : 3.5 * / 5 *
ஸ்கோர் கார்ட் : 45

  • அனந்து (http://pesalamblogalam.blogspot.com)
Sponsors
Sponsors

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,942FansLike
175FollowersFollow
724FollowersFollow
14,600SubscribersSubscribe

சமையல் புதிது :

ஆரோக்கிய சமையல்: டேட்ஸ் எள்ளு உருண்டை!

நெய், தேன் சேர்த்து நன்கு பிசையவும். இதில் வறுத்த எள்ளு, பொடித்த முந்திரி, சேர்த்து நன்கு பிசைந்து, உருண்டைகளாக உருட்டி பரிமாறவும்.

தள்ளிப் போடாம உடனே பண்ணுங்க தால் வெஜ் கத்லி!

பிறகு பால் பவுடர் சேர்த்து நன்றாகக் கிளறி, கடைசியாக வெனிலா எசன்ஸ் சேர்த்துக் கிளறி, ஒரு தட்டில் கலவையைக் கொட்டி, ஆறியதும் விருப்பமான வடிவங்கள் செய்து, நட்ஸ் வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.

குழந்தைகள் விரும்பும் ஆரோக்கிய சிற்றுண்டி!

ஒரு வாணலில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் டைகள் மாதிரியோ அல்லது கொஞ்சம் கொஞ்சமாகக் கிள்ளிப்போட்டு பகோடா மாதிரியோ எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |