07/07/2020 2:35 PM
29 C
Chennai

திரைவிமர்சனம் – யு டர்ன்: நாயகிக்கு முக்கியத்துவம் தந்து…

யு டர்ன் செய்த ஒருவரை பேட்டி எடுக்கச் செல்லும்போது, அவர் மர்மமான முறையில் இறந்துப்போக, அதில் சமந்தா சம்மந்தமில்லாமல் குற்றவாளியாக மாட்டிக்கொள்கிறார்.

சற்றுமுன்...

கொரோனா தீவிரம்: நாளை மத்தியக்குழு தமிழகம் வருகை!

மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலர் ஆர்த்தி அகுஜா இந்த குழுவின் தலைவராக இருக்கிறார்.

கொரோனா: முககவசம் அணியாதவருக்கு மத்தியபிரதேசத்தில் நூதன தண்டனை!

மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியார் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியில் வருபவர்களுக்கு தண்டனையாக கொரோனா மருத்துவமனைகள்...

குளத்தை தூர்வாரும் போது கிடைத்த பழமையான மகாவிஷ்ணு சிலை!

4 அடி உயரத்தில் உள்ள மகாவிஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டது.

கொரோனா: எம் எஸ் யூனிவர்சிட்டி ஊழியருக்கு தொற்று!

இதனால் 3 நாட்களுக்கு பல்கலைக் கழகத்தை மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டதன் பேரில், கல்லூரி மூடப்பட்டுள்ளது

கொரோனா: நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் மூலிகை மைசூர் பாகு!

இதனை சாப்பிட்டவர்கள் கொரோனா நோயிலிருந்து குணமாகியிருப்பதாக கூறி உரிமையாளர் வியக்க வைக்கிறார்.
U Turn Samantha Akkineni Aadhi Pinisetti Bhumika Rahul Pawan Kumar திரைவிமர்சனம் - யு டர்ன்: நாயகிக்கு முக்கியத்துவம் தந்து...

‘யு டர்ன்’ – நாயகியின் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட திரைப்படம்.

த்ரில்லர் ரகத் திரைக்கதையை ஒரு சமூகப் பொறுப்புணர்வுடன் இயக்கி விழிப்புணர்வை கொடுக்க முடியுமா எனவும் வியக்க வைத்தது.

தினந்தோறும் சாலைவிதிகளை மீறி சட்டத்துக்குப் புறம்பாக நடக்கும் ஒருசில நபர்களால், அதற்கு சம்மந்தமே இல்லாத பயணிகள் விபத்தில் சிக்கி சின்னா பின்னமாகிறார்கள். இதனைத் தடுக்க ‘சாலை விதிகளை பின்பற்றுங்கள்…’ என அறிவுரை போல சொல்லாமல் திரைக்கதையில் மிரட்டலாகச் சொல்லியுள்ளார் இயக்குனர்.

பாடல்கள், விரசக் காட்சிகள், ஆழமான காதல், தீவிரமான நட்பு, அதீதமான பாசம், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என இவை ஏதுமில்லாமல் ஒரு சினிமா, பார்வையாளர்களை அசையாமல் உட்காரவைக்க முடியுமா என ஆச்சர்யப் படுத்தியுள்ளது ‘யு டர்ன்’.

இன்ஜினியரிங் படித்து அதில் வேலையைத் தொடராமல் பத்திரிகைத் துறையில் பயணிக்க விரும்பும் ஒரு நாயகியின் நடிப்பில் கதையின் களம் அமைந்துள்ளது.

விருப்பமான துறையில் பணியைத் தேர்ந்தெடுக்கும் தைரியம், தன்னம்பிக்கை, சமூக பொறுப்புணர்வு என பெண்களுக்கு அவசியம் தேவைப்படும் குணநலன்களுடன் சமந்தா…

சென்னை, வேளச்சேரி பாலத்தில் சட்டத்திற்கு புறம்பாக, சென்டர் மீடியன் கற்களை நகர்த்தி வைத்துவிட்டு ‘யு டர்ன்’ எடுப்பவர்களால் ஏகப்பட்டவிபத்துகள் ஏற்படுகிறது.

சாலை விதிமுறைகளை பின்பற்ற விழிப்புணர்வு ஏற்படுத்த பத்திரிகை நிருபராக வரும் சமந்தா ஒரு கட்டுரை எழுத ஆய்வில் இறங்குகிறார்.

மேம்பாலத்தில் நடுவில் சாலை விதிகளை மீறி கற்களை நகர்த்திவிட்டு யு டர்ன் செய்பவர்களை பேட்டி கண்டு எடுக்கும்விதமாக அவரது ஆய்வு அமைந்துள்ளது.

யார் யாரெல்லாம் யு டர்ன் செய்கிறார்களோ அவர்கள் தொடர்ச்சியாக மர்மமான முறையில் இறந்து போவதாக கதை நகர்கிறது.

யு டர்ன் செய்த ஒருவரை பேட்டி எடுக்கச் செல்லும்போது, அவர் மர்மமான முறையில் இறந்து போக, அதில் சமந்தா சம்பந்தமில்லாமல் குற்றவாளியாக மாட்டிக் கொள்கிறார்.

அவர் எப்படி அந்த கேஸில் இருந்து வெளிவருகிறார்… மர்மமான முறையில் இறப்புகள் நடைபெறுவது ஏன்… எப்படி… என துவக்கம் முதல் இறுதிவரை கதை வேகத்துடனும் மர்மத்துடனும் செல்கிறது.

பல திருப்பங்களுடன் ஒரு நிறைவான க்ளைமேக்ஸுடன் சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் பவன் குமார்.

‘லூசியா’ என்ற சிறிய பட்ஜெட் படத்தை கன்னடத்தில் எடுத்து பிரபலமாக அறியப்பட்ட இயக்குனர் பவன் குமாரின் அடுத்த கன்னட படைப்பான ‘யு டர்ன்’ படத்தின் தமிழ் ரிமேக்.

விமர்சனம்: காம்கேர் கே. புவனேஸ்வரி 

u turn cine review திரைவிமர்சனம் - யு டர்ன்: நாயகிக்கு முக்கியத்துவம் தந்து...

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad திரைவிமர்சனம் - யு டர்ன்: நாயகிக்கு முக்கியத்துவம் தந்து...

பின் தொடர்க

17,870FansLike
78FollowersFollow
70FollowersFollow
906FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

கைபரு… போலனு… ஆரியனு… வுட்ட கதையும் உடாத உண்மையும்!

கைபர் போலன் கணவாய் வழியாக வந்த ஆரிய பிராமணர்கள், இங்கு மனு தர்மப்படி மனிதர்களை பிரித்து, அவர்கள் மட்டும் கல்வி கற்கும்படி செய்துவிட்டார்கள்

சமையல் புதிது.. :

சினிமா...

அஜித் கொடுத்த வாழ்வு: நெகிழும் பிரபல இயக்குநர்!

அஜித் அவர்கள் புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களுக்கும் நம்பிக்கையை தருபவர்.

பிரபல இயக்குநர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு!

தந்தை மாருதி ராவ் ஆகியோரை அடிப்படையாக வைத்து கதை இருக்கும் என்றும் பர்ஸ்ட் லுக்கை ராம் கோபால் வர்மா வெளியிட்டார்

விஜய்யால் என் வாழ்க்கையே போனது: பிரபல இயக்குநர் வேதனை!

பிரபல இயக்குனர் ஒருவர் கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

விளாசி தள்ளிய வனிதா.. மன்னிப்புக் கேட்ட சீனியர் நடிகை!

உங்களுடைய சேனலில் சினிமா நட்சத்திரங்கள் பற்றி கிசுகிசு பேசாதீர்கள். ஒரிஜினல் கண்டெண்ட் மட்டுமே கொடுங்கள்

நான் நல்லவன் இல்லை: உண்மையை ஒத்துக் கொண்ட விஜய் சேதுபதி!

. கொஞ்சம் கூட நல்லவன் கிடையாது என கூறியுள்ளார்.

செய்திகள்... மேலும் ...