2.0 படத்தை தமிழ் ராக்கர்ஸில் பார்த்தா எப்படி இருக்கும் தெரியுமா?!


2.0.. இது ரஜனிகாந்த் படம் என்பதாகச் சென்று பார்த்தேன்; ஆனால் இது முழுமையான இயக்குனர் சங்கர் படம்!

” A class of different story line…and out of the world making…” முதலில் கதை களம் .. மிக மிக புதுமை .. விஞ்ஞாமும் அதன் அதீத செயல்பாடுகளும் … களம் … செல்போன் அதன் கதிரியக்க கேடுகள் !

நிறைய விஷுவல் மிரட்டல் காட்சிகள் .. அக்ஷய் குமார் … பறவைகளை பேணும் ஒரு ஆர்வலராக அறிஞராக நடித்து, வாழ்ந்து இருக்கிறார் ..என சொல்லவேண்டும்! இப்படி இவரை நடிக்க வைத்திருப்பதை வட இந்திய ரசிகர்கள்… அதிர்வுடன் பார்ப்பது நிச்சயம்!

மார்ஷல் ஆர்ட்ஸ் தெரிந்த ஒரு புகழ் பெற்ற நடிகரை வயதான தோற்றத்துடன் பறவைகளுக்காக உயிர் விடுவது போல ஒரு சோக நடிப்பில் பயன்படுத்தி இருப்பது .. டைட்டில் ஓட்டுவதில் ஆரம்பிக்கும் முப்பரிமான மாயை நம்மை கடைசி வரை மூழ்கடித்துக் கொண்டு இருக்கிறது !

ஒரு எந்திரத்தின் உணர்ச்சிகள் தேவைபடாத வெள்ளையான முகம் .. எம்மி ஜாக்சன் … அவ்வளவுதான் …! விஞ்ஞானி வசீகரனாக ரஜினிகாந்த் சிட்டி ரோபோவாகவும் அவரே!

விஞ்ஞானி பாத்திரம் அமைதியாகவும், சிட்டி ரசிகர்கள் எதிர்பார்க்கும் படி பஞ்ச் வசனம் பேசி படம் நடுவில் பிச்சு எறியப்பட்டு புதுமையாக 2.0 வாக அவதாரம் எடுத்து அழகாக அவரின் நடையை நடந்து .. தியேட்டரில் அள்ளுது ரசிகர்களின் அனந்த சத்தம்!

கதை அம்சத்தில்…. ஒரு விஞ்ஞானமும் நமது மெய்ஞானத்தில் சொன்ன விசயமும் கலந்து அமைந்து இருக்கிறது!

இறந்து போன ஒரு மனிதனுடைய சூட்சும சரீரம் மற்றும் இறந்து போன பல பறவைகளின் சூட்சும சரீரமும் இணைந்து ஒரு கேடு விளைவிக்கும் ஒரு எதிர்மறை சக்தியாக உருமாறி .. விஞ்ஞான சக்தியை அழிக்க புறப்படுவது …!

செல்போன் கோபுரங்கள் கம்பெனிகள் … பணம் பண்ணும் வெறியால் பறவைகளின் மூளையில் பாதையை அறியும் தன்மைகளை அழிக்கக்கூடிய அளவிற்கு அதிகப்படியான கதிர் வீச்சை, பேஸ்மெண்ட்டில் செல்போன் எடுக்க வேண்டும் என்பதற்காக அதிகப்படுத்தி … அவைகளை இன்று அழித்து ஒழிக்கும் நிலை வந்து இருப்பதை காட்டி இருக்கிறார்!

இந்தப் பிசாசு சக்தியை தனது சிட்டி ரோபோ ரெண்டாம் பாகத்தின் மூலம் எப்படி அழிக்கிறார் என்பதை கிராபிக்சில் கலக்கி இருக்கிறார் சங்கர்! முப்பரிமாண மாய உலகைக் காட்டும், நம்மைச் சுற்றி நடக்கும் விஞ்ஞானத்தால் ஏற்படும் அடிமைத் தனத்தையும் காட்டும் படம் !

இந்தப் படத்தின் கதையை சங்கர் தனது 2007 சிவாஜி படத்தில் செல்போனைத் தூக்கி வீசிக் காட்டி விட்டார்! இன்று அது 500 கோடி படமாக வந்திருக்கிறது!

நிச்சயம் பார்க்க வேண்டிய படம் (ரசிகர்கள் மற்றும் இயற்கை பேணுவதில் ஆர்வலர்கள்) காட்சி பிரமிப்பிற்காக அனைவருமே பார்க்க வேண்டிய படம்தான்!

பின் குறிப்பு: இதை தமிழ் ராக்கரில் வழக்கமான ரெட்டை பரிமாணத்தில் பார்த்தால் பிரயோசனமில்லை! கலர் படத்தை கருப்பு வெள்ளையில் பார்ப்பதை போல இருக்கும்!

– விஜயராகவன் கிருஷ்ணன்

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...