கமலும், வைரமுத்துவும் குடிக்க மாட்டார்கள் என்று நிரூபிக்க முடியுமா? : கவிஞர் சவால்

கவிஞரும், சினிமா பாடலாசிரியருமான நா.முத்துகுமார் உடல்நலக்குறைவு காரணமாக சமீபத்தில் மரணம் அடைந்தார். அவரின் மரணத்திற்கு காரணம், அதிகப்படியான மதுப்பழக்கம் என்றும், மஞ்சள் காமாலை என்றும், திடீரெனெ அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பே காரணம் என்றும் பல்வேறு தகவல் கூறப்படுகிறது. முத்துக்குமாரின் மரணம் பற்றி கவிஞர் வைரமுத்து கருத்து கூறியிருந்த போது “படைப்பாளிகளே தங்களின் நீண்ட வாழ்க்கைக்கு அர்ப்பணிப்பதில்லை” என்று கூறியிருந்தார்.
நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்த போது “நா.முத்துக்குமார் மிக மெதுவாய் செய்த தன் நலம் பேணாத தற்கொலை” என்று கூறியிருந்தார்.
இதுபற்றி கருத்து தெரிவித்த, முத்துக்குமாருக்கு மிகவும் நெருக்கமான அந்த அறிவு கவிஞர் “சமீபத்தில் கவிஞர் ஞானக்கூத்தன் இறந்த போது, தமிழுக்கு அவர் செய்த பங்களிப்பு பற்றிதான் பேசினார்கள். முத்துக்குமாரை மட்டும் ஏன் இப்படி பேசுகிறார்கள்?. கமலும், வைரமுத்துவும் இப்படி பேசியுள்ளனர். கமலுக்கு எப்படி கால் உடைஞ்சதுனு தெரியுமா?. வைரமுத்துவிற்கு குடிப்பழக்கம் இல்லை என்று அவரால் நிரூபிக்க முடியுமா?
இங்கே எல்லோரும்தான் குடிக்கிறார்கள். ஏன் முத்துக்குமாரை மட்டும் கொச்சை படுத்துகிறார்கள்?. அவனின் பிள்ளைகள் வளர்த்து எதிர்காலத்தில் “என் தகப்பனை இந்த சமூகம் குடிகாரன் என்றுதான் நினைவில் வைத்துள்ளது” என்று நினைக்க மாட்டார்களா? என்று கொந்தளித்து விட்டாராம் அந்த கவிஞர்.