ச்சீ.. உங்க கருத்து சுதந்திரம் இவ்ளோதானா? திமுக.,வின் ‘கோர’ முகம்!

பேச்சு சுதந்திரம் என்று கூவிக் கொண்டிருந்தவர்கள், இப்போது  கருத்து சுதந்திரத்தை நசுக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள். 

செய்திகள் மூலம் தொடர் பொய்களைப் பரப்பி வரும் திமுக., அதற்காகவே தொடக்க காலத்தில் பத்திரிகை, நாடகம், சினிமா ஆகியவற்றை நாடியது. சினிமாவில் உள்ள வசனங்கள் மூலமும், நாயகர்களின் பேச்சுகள் மூலமுமே தங்களை உத்தமர்கள் போல் காட்டி வளர்ந்த திமுக.,வின் தந்திரம் இப்போது சாயம் போய் விட்டிருக்கிறது.

பேச்சு சுதந்திரம் என்று கூவிக் கொண்டிருந்தவர்கள், இப்போது  கருத்து சுதந்திரத்தை நசுக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள்.

தொடக்க காலத்தில் சுமங்கலி கேபிள் விஷன் மூலம், தமிழகத்தின் அனைத்து வீடுகளுக்கும் கேபிள் டிவி மூலம் சென்றடைந்தவர்கள், பின்னர் சன் டிவி., கலைஞர் டிவி என கட்சியின் பிரசாரதளத்தை வலுப்படுத்திக் கொண்டார்கள்.

எஸ்சிவி எனப்படும் சுமங்கலி கேபிள் விஷன் மூலம், தாங்கள் நினைத்த சேனலை மட்டுமே வாடிக்கையாளர்களிடம் சேர்க்க முடியும் என்ற நிலையை உருவாக்கினார்கள். ஜெயலலிதா வீட்டு செருப்புகளையும் புடவைகளையும் மீண்டும் மீண்டும் காட்டியே 96 தேர்தலில் வெற்றி பெற்றது திமுக.,

இப்போதும் அதே பொய்களைப் பரப்பிக் கொண்டிருக்கும் திமுக., தற்போது சமூக ஊடகத் தளங்களின் காலத்தில் சிக்கித் திணறி வருகிறது. அந்தப் பொய்களுக்கு எல்லாம் பதில் கொடுக்கும் வகையில் சோஷியல் மீடியாக்கள் விழிப்புடன் இருந்து வருகின்றன.

தற்போது, காஷ்மீர் விவகாரத்தில், தேச விரோதக் கருத்துகளுடன் உலவும் திமுக.,வுக்கு நெருக்கடி எழுந்துள்ளது. அதற்குக் காரணம், அக்கட்சியின் செய்தித்தொடர்பாளரும் வழக்கறிஞருமான சரவணன்.

சரவணன் ரிபப்ளிக் டிவி நிகழ்ச்சியில் காஷ்மீர் பிரச்னையை தவறாக கையாண்டதால் ரிபப்ளிக் டிவி சரவணனை வெளுத்து வாங்கியது.

அதற்கு பழிவாங்கும் விதமாக சன் டைரக்ட் டில் ரிபப்ளிக் டிவி நீக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து, இவ்வளவுதான் இவனுக கருத்து சுதந்திரம் எல்லாம்!! .. என்று கேலி செய்தும் கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர் சமூக ஆர்வலர்கள்!

அரசுப் பணத்தை எடுத்து செலவு செய்து, அனைத்து வீடுகளுக்கும் இலவச டிவி., கொடுத்து, அதில் ஒரு கமிஷனையும் பார்த்து, தன் குடும்ப கேபிளான எஸ்.சி.வி., மூலம் வீட்டுக்கு வீடு கலெக்சனையும் பார்த்தவர் கருணாநிதி என்று கலாய்க்கிறார்கள் நெட்டிசன்ஸ்.

1996ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை மனதில் கொண்டு தான் ஜெயலலிதா அரசு கேபிளுக்கு விதை போட்டார். ஒரு கட்சியின் கையில் ஊடகமும், கேபிள் நெட்வொர்கும் இருந்தால் என்ன ஆகும் என்பது இந்த விவகாரத்தில் வெளித் தெரிந்திருப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...