அத்திவரதர் … கல்வெட்டு அரசியல்! 1979ம்… 2019ம்… ம்ம்…!

பழைய கல்வெட்டுகளில் மிகவும் பொதுப்படையாக இந்த வைபவத்தை சொல்லி மிகவும் பொதுப்படையாகவே முடித்துவிட்டனர்!

நாற்பதாண்டுகளுக்கு முன்னர் வெளியில் எடுக்கப்பட்ட ஆதி அத்தி வரத பெருமானை மீண்டும் உள்ளே எழுந்தருள செய்யும் போது வைக்கப்பட்ட கல்வெட்டில் எந்த அரசியல்வாதிகள் அதிகாரிகள் பெயர்கள் பொறிக்கப்படவில்லை!

அதன் முந்தைய கல்வெட்டும் கூட அப்படித்தான் வைக்கப்பட்டிருக்கிறது! ஆகவே இப்போது வைத்த கல்வெட்டில் மட்டும் அரசியல்வாதிகள் அதிகாரிகள் பெயர்களை எதற்காக புகுத்த வேண்டும்!

பழைய கல்வெட்டுகளில் மிகவும் பொதுப்படையாக இந்த வைபவத்தை சொல்லி மிகவும் பொதுப்படையாகவே முடித்துவிட்டனர்! அதுவே ஒரு திருக்கோயில் நிகழ்வை ஆவணப்படுத்தும் அழகு! நல்ல செயல்பாடு!

சென்ற முறை 1979 இல் பெருமாள் வெளியே எழுந்தருளி மீண்டும் உள்ளே வைக்கப்பட்டது புரட்சித் தலைவர் எம்ஜியார் அவர்கள் ஆண்ட காலத்தில், அப்போது வைத்த கல்வெட்டில் கூட எந்த அரசியல்வாதிகள் அதிகாரிகள் பெயர்கள் இல்லையே! இப்போது மட்டும் எதற்கு? என்றே தர்மம் தெரிந்தவர்கள் யாரும் கேட்பார்கள்!

நாற்பது ஆண்டுகாலத்துக்கு ஒருமுறை திருக்கோயில் சம்பிரதாயப்படி வெளி எடுக்கப்பட்ட வரதருக்கு எதற்காக அமைச்சர் பெருமக்கள் சீர்மிகு வழிகாட்ட வேண்டும்!

மாவட்ட ஆட்சியருக்கு இதில் என்ன பங்கு வேண்டி கிடக்கிறது! பழைய கல்வெட்டுக்களில் இருக்கும் ஸ்தலத்து ஆச்சாரிய புருஷர்களான தாத்தாச்சாரிய சுவாமிகளின் திருநாமங்கள் இந்த புதிய கல்வெட்டில் எங்கே?

சுவாமி தாத்தாச்சாரியார்களின் திருநாமங்களையும் இந்த கல்வெட்டில் சேர்த்தே இருக்கவேண்டும்! பழைய கல்வெட்டில் இருக்கும் தாத்தாச்சாரிய சுவாமிகளின் திருநாமங்களையே கூட மீண்டும் அப்படியே போட்டிருக் கலாம்! தனி சுவாமிகளின் திருநாமங்கள் வேண்டாம் என்றாலும் கூட பொதுவில் சுவாமி வேதாந்த தேசிகன் மற்றும் சுவாமி ஸ்ரீமத் கல்யாணகோடி லக்ஷ்மி குமார தாத்த தேசிகன் நியமனம் என்றும் கூட போட்டிருக்கலாம்!

அதிகாரிகள் அரசியல்வாதிகள் பெயர்கள் இடம்பெற்றே ஆக வேண்டும் என்றால் கூட, பழைய முறையில் எப்படி உள்ளதோ அப்படியே புது கல்வெட்டு தயார் செய்து கூடுதலாக வேண்டுமானால் இவற்றை செய்யலாமே தவிர, மொத்தமாக இப்படி செய்வது நல்ல முறைமை இல்லையே!

கூடுதலாக வேண்டுமானால் காஞ்சிபுரம் வடகலை சம்பிரதாய திருக்கோயில் கைங்கர்யபரர்கள் என்றோ சுவாமி தாத்த தேசிக திருவம்சத்தார் சபை என்றோ பொதுவில் வடகலை சபை என்றோ கூட போட்டு முத்திரை இடப்பட்டிருக்கலாம்!

தெலுங்கு ரெட்டிகளின் பெயர் தமிழ்நாட்டு திருக்கச்சி கோயில் கல்வெட்டில் வரலாம் சுவாமி வேதாந்த தேசிகன் சுவாமி தாத்த தேசிகன் மற்றும் ஸ்தலத்து சுவாமிகளான தாத்தாச்சாரியார்களின் பெயர்கள் வரக்கூடாதா?

  • வி.முத்துகிருஷ்ணா (Chowkidar V Muthu Krishna)

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...