மதுரை லீலாவதி… திருச்சி ராமஜயம்… ஆலடி அருணா… நினைவூட்டும் திமுக., புள்ளிகள்!

கருத்துச் சுதந்திரம் என்பது திராவிட இயக்கங்களுக்கும் அதன் ஆதரவு ஊடகங்களும், குறிப்பாக திமுக.,வினருக்கும் மட்டுமே உரித்தானது என்பதைப் போல் திமுக.,வினரும் ஆதரவு ஊடகங்களும் இயங்கி வருகின்றன.

சமூக ஆர்வலராக தன்னை வெளிக்காட்டிக் கொண்ட மாரிதாஸ், அண்மைக் காலமாக பொதுவெளியில் திமுக., குறித்த உண்மைகளை மக்கள் மத்தியில் பரப்பிக் கொண்டு வருகிறார். குறிப்பாக, சமூக வலைத்தளங்களில், வீடியோக்களை வெளியிட்டு, மக்களிடம் திமுக., குறித்த பின்னணிகளை, அதன் செயல்பாடுகளை வெளிக்காட்டி வருகிறார். அவரது கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலாமல், கருத்துச் சுதந்திரம் என்பது திராவிட இயக்கங்களுக்கும் அதன் ஆதரவு ஊடகங்களும், குறிப்பாக திமுக.,வினருக்கும் மட்டுமே உரித்தானது என்பதைப் போல் திமுக.,வினரும் ஆதரவு ஊடகங்களும் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் தனக்கு சமூக வலைத்தளங்களில் மிரட்டல் விடுக்கும் திமுக., கட்சிக்காரர்கள், ஆதரவாளர்கள் குறித்த பதிவினை மாரிதாஸ் வெளியிட்டுள்ளார்.

அனைவருக்கும் வணக்கம் : திமுக என் மீது வழக்குப் பதிவு செய்ய கமிஷினர் ஆபிஸ் சென்று அலைக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். திமுக குண்டர்கள் மாரிதாஸ் எப்படித் தீர்த்துக் கட்டுவது என்று வெளிப்படையாகப் பொதுவெளியில் பேசி எனக்கு மறைமுக எச்சரிக்கை விடுகிறார்கள் என்பதை அறிந்தேன். என் நிலைப்பாடு “இந்த தேசத்திற்கும் , பாரத அன்னைக்கும் ஆதரவாக நிற்கிறேன் அதற்காக எதையும் எதிர்கொள்ளத் தயார். ஒரு ராணுவ வீரன் நாட்டின் எதிரியை எல்லையில் எதிர் கொள்கிறான், நான் நாட்டின் உள்ளே துரோகிகளை எதிர்கொள்கிறேன் தவிர என் போராட்டம் தேசத்திற்கானது என்ற வகையில் இந்த ஆபத்தை எதிர் கொள்ளத் தயக்கம் இல்லை”.

திமுக நிர்வாகிகளுக்கு நான் சொல்ல விரும்புவது… முடிந்தால் எனக்கு உங்கள் தலைவர் ஸ்டாலின், இல்லை உங்கள் கட்சி பட்டத்து இளவரசர் உதயநிதி என்று எவரையாது பதில் கொடுக்கச் சொல்லவும்.

போலீஸ் நிலையம் சென்று வழக்குப் போட வேலை செய்வதாக அறிந்தேன், அவசரம் வேண்டாம். இன்று மாலை திமுக – பாகிஸ்தான் இடையே தொடர்பு இருக்கிறதா? என்ற மக்கள் சந்தேகத்திற்கு வலு சேர்க்கும் முக்கிய ஆதாரத்தை இதுவரை எந்த செய்தி நிறுவனமும் வெளியிடாத ஆதாரத்தை வெளியிடுகிறேன்.

அதையும் எடுத்துக் கொண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கவும். நான் பேசிய எதற்கும் வருத்தமோ இல்லை மன்னிப்போ கேட்கப் போவது இல்லை. என் நோக்கம் தேச நலன் தானே ஒழிய வேறு இல்லை.

இந்த நேரத்தில் என் நலன் விரும்பிகள், நண்பர்கள், மாணவர்கள் அனைவருக்கும் நான் கேட்டுக்கொள்ள விரும்புவது எனக்கு உங்கள் முழு ஆதரவு மட்டுமே…

  • மாரிதாஸ்

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...