
பிரதமர் மோடி இல்லத்தில் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு அவமானம் நிகழ்ந்ததா?
இந்தியத் திரைப்படத்துறை என்றால் பாலிவுட் மட்டும்தானா? தென்னிந்திய கலைஞர்களை அழைத்து அவமானப் படுத்தலாமா?
பிரதமரின் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்ற தனக்கு அங்கு நிகழ்ந்த அவமானத்தால் தலையையே எடுத்தது போல் ஆயிற்று என்று கான கந்தர்வ எஸ் பி பாலசுப்ரமணியம் மனவருத்தம் அடைந்ததாக கூறியுள்ளார்.
அவர் கூறும் விஷயங்கள் வியப்பை அளிக்கின்றன.
அக்டோபர் 29ஆம் தேதி டெல்லியில் பிரதமர் இல்லத்தில் சேன்ஞ் விதின் நிகழ்ச்சி நடந்தேறியது பிரதமர் மோடி யோடு பாலிவுட் பிரபலங்கள் உற்சாகத்தோடும் மகிழ்ச்சியோடும் செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். அவற்றைத் சமூக வளை தளங்களில் வெளியிட்டு மகிழ்ந்தார்கள். எல்லாம் வட இந்தியர்களே. தென்னிந்திய சினிமாவில் இருந்து யாரும் தென்படவில்லை. தெலுங்கு திரை துறையில் இருந்து தயாரிப்பாளர் தில்ராஜுவும் கானகந்தர்வர் பல்துறை வல்லுநர் எஸ் பி பாலுவும் பங்கேற்றனர்.
அங்கு ஏற்பட்ட அனுபவங்களை சமூக வலைதளம் மூலம் உலகத்தின் பார்வைக்கு எடுத்து வந்துள்ளார் பாலு.
மத்திய அரசின் நடவடிக்கை மீது தீவிரமாக தன் மன வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
வட இந்தியர்களுக்கே முக்கியத்துவம் அளித்து தென்னிந்திய கலைஞர்களை அவமானப்படுத்தி விட்டதாக தன் ஃபேஸ்புக்கில் எழுதியுள்ளார்.
மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை ஒட்டி சேன்ஞ் வித்தின் நிகழ்ச்சியை நடத்தினார் பிரதமர் மோடி.
நிகழ்ச்சியின் பெயரில் உள்ள அக்கறை நிர்வாகத்தில் குறைந்து விட்டதாக தெரிவித்துள்ளார் எஸ் பி பாலு.

தன்னை நடத்திய விதம் பற்றி எஸ் பி பாலசுப்ரமணியம் மனக் குமுறலை தெரிவித்தார்.
பாரத பிரதமரின் இல்லத்திற்குள் நுழைவதற்கு முன்பே கேட்டின் அருகிலேயே தன் செல்போன்களை எடுத்துக் கொண்டு விட்டார்கள் என்றார். பாதுகாப்பு கருதி அவ்வாறு செய்துள்ளார்கள் என்று நினைத்ததாகவும் ஆனால் பாலிவுட் பிரபலங்களின் கைகளிலிருந்த போன்களை பார்த்து வியப்படைந்ததாகவும் தெரிவித்துள்ளார். அந்த செல்போன்களால் தான் அவர்கள் பிரதமரோடு செல்ஃபிகள் எடுத்து கொண்டார்கள் என்று நினைவு படுத்தி உள்ளார் .
இது முறைதானா என்று பாலு கேட்டு மன வருத்தம் வெளிப்படுத்தியுள்ளார் . இச்செயல் தன்னை அவமானப்படுத்தி விட்டதாக ஃபேஸ்புக் பேஜில் எழுதியுள்ளார்.
சேன்ஞ் வித்தின் நிகழ்ச்சி நடந்த மறுநாள் காலையே விமர்சனங்கள் வரத் தொடங்கிவிட்டன.
சினிமா கலைஞர்கள் என்றால் வட இந்தியர் மட்டும் தானா என்பது சிலர் கேள்வி. தென்னிந்திய திரைதுறை கண்ணில் படவில்லையா என்று பிரதமர் அலுவலகத்தையே வினா எழுப்பினர். சிரஞ்சீவியின் மருமகள் உபாசனா கூட இதே கேள்வியை எழுப்பினார்.
தற்போது அழைப்பு விடுத்து பாரபட்சம் காட்டுவது முறையா என்று பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.