spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

HomeReporters Diaryடிஎன்பிஎஸ்சி முறைகேடு: பிரிவினைவாதிகளின் புதிய அவதாரம்! அரசு அதிகாரத்தை குறுக்கு வழியில் பிடிக்கிறார்களாம்!

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: பிரிவினைவாதிகளின் புதிய அவதாரம்! அரசு அதிகாரத்தை குறுக்கு வழியில் பிடிக்கிறார்களாம்!

- Advertisement -
13 July31 TNPSC

இவங்களோட புது அவதாரம் இது. அதாவது அரசாங்கத்தின் அதிகாரத்தைக் குறுக்கு வழியில் பிடிக்கறாங்களாம்.. ????????
என்னடா நடக்குது..?
ரெயில்வே எக்ஸாமுக்கு பென்ச், சேர் உடைக்கறவங்க இதுக்கு குரல் கொடுப்பாங்களா?
அல்லாவின் அற்புதங்கள்!
தேர்வு மையத்தோட பெயர் இஸ்லாமியா பள்ளியான ராமநாதபுரம் மற்றும் கீழக்கரையாம்..! ???????????? – Durai Kolanjinathan என்பவர் செய்துள்ள பதிவு இது.

இது ஒரு சாம்பிள்தான்! இதைப் போல் பலரும் தங்களது உள்ளக் குமுறல்களை சமூகத் தளங்களில் கொட்டி வருகின்றார்கள். மாங்கு மாங்கு என்று ராப்பகலா கண்விழித்து, மூளையை கசக்கிப் பிழிந்து படித்து, தேர்வு எழுதி… இப்படியெல்லாம் ஒரு கூட்டம் தங்களை வருத்திக் கொண்டிருக்க… வேறொரு கூட்டமோ எப்படி எல்லாம் முறைகேடு செய்து வேலையை பெறலாம் என்று மூளையை கசக்கிப் பிழிந்து வேலை செய்திருக்கிறது.

டி.என்.பி.எஸ்.சி., நடத்திய குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரில் விசாரணை தொடங்கியுள்ளது.

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வு கடந்த 2019 செப்.1ஆம் தேதி நடந்தது. தமிழகம் முழுவதும் 5575 மையங்களில் நடந்த இந்த தேர்வை 16 லட்சத்து 865 பேர் எழுதினர்.

சில நாட்களுக்கு முன், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. பின்னர் தரவரிசை பட்டியல் வெளியானது. இதில், சில தேர்வர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தர வரிசைப் பட்டியலை ஆய்வு செய்த போது, முதல் 100 இடங்களை பிடித்தவர்களில் பெரும்பாலனவர்கள், ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிவர்களாக இருந்தனர்.

அதிலும், இந்த மையங்களில் தேர்வெழுதிய 19 பேர் முதலிடமும் பெற்றுள்ளனர். இதனால் இந்தத் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக மற்ற தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், 2017-18 ம் ஆண்டில் நடந்த குரூப் 2ஏ தேர்விலும் குறிப்பிட்ட தேர்வு மையங்களில் தேர்வெழுதிய 30க்கும் மேற்பட்டோர் 50 இடங்களுக்குள் வந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை தொடங்கியுள்ளது. மேலும், தேர்வர்களின் விடைத்தாள்களை ஆய்வு செய்து வருகிறோம் என டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.

10 May30 TNPSC

இந்த விவகாரத்தின் பின்னணியை விரிவாகப் பார்க்கலாம்..!

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், நில அளவை அலுவலர் உள்ளிட்ட 8 வெவ்வேறு பதவிகளில் காலியாக இருந்த 9,398 இடங்களுக்கு கடந்த 2019 செப்1ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற்று, நவம்பர் 12ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன.

16 லட்சம் பேர் எழுதிய தேர்வில் 12 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றதாக TNPSC அறிவித்தது. நடைபெற்று முடிந்த குரூப் – 4 தேர்வை, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய இரு மையங்களில் தேர்வெழுதிய தேர்வர்களில் 40 பேர் முதல் 100 இடங்களுக்குள் தேர்ச்சி பெற்றிருப்பதில் சந்தேகம் எழுவதாக பிற தேர்வர்கள் கூறியுள்ளனர்.

இரண்டு மையங்களிலும் தேர்வு எழுதியவர்களில் பெரும்பாலானோர் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் 15 பேர் மாநில அளவில் முதல் 15 இடங்களில் எவ்வாறு தேர்ச்சி பெற்றனர்? என்பது ஐயத்தை எழுப்புவதாகவும் தெரிவித்தனர். மேலும் 40 பேர் முதல் 100 இடங்களுக்குள் அவர்கள் அனைவருமே எப்படி தேர்வாகினர்? என்றும் பிற தேர்வர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

ஏற்கெனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் குரூப் – 4 தேர்வு நடைபெற்ற நேரத்தில் கமுதி வட்டாட்சியர் மீனலோசனம், கூடுதலாக வழங்கப்பட்ட OMR விடைத்தாள்களை அவருடைய அலுவலகத்தில் 10 நாட்கள் வரை பதுக்கி வைத்திருந்து, பிறகு TNPSC அலுவலகத்தில் ஒப்படைத்ததாக புகார் கூறப்பட்டது! இதுதொடர்பாக, டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வதாக சொல்லப்படுகிறது.

ஒரே மாவட்டத்தின் இரு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் மட்டும் மாநில அளவில் முதல் 100 இடங்களைப் பிடித்திருப்பதில் முறைகேடு நடைபெற்றதா? ஏன் 10 நாட்கள் வரை விடைத்தாள்களை வைத்திருந்தனர்? என்பது குறித்து TNPSC உரிய விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும் தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ராமேஸ்வரம் ஆகிய மையங்களில் குரூப்-4 தேர்வு எழுதியோரின் முடிவுகளில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக எழுந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த, அம்மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் உத்தரவிட்டுள்ளார்.

குரூப் 4 தேர்வினைத் தொடர்ந்து, குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தை மையப்படுத்தியே இந்த புகாரும் கூறப் படுகிறது. 2018 குரூப் 2ஏ தேர்வில், ராமேஸ்வரம் மையத்தில் தேர்வு எழுதியவர்களே முதல் 50 இடங்களை பிடித்ததை சுட்டிக்காட்டி, இது தொடர்கதை போல் இருப்பதால், இந்த சந்தேகமும் புகாரும் எழுந்துள்ளது.

2018ஆம் ஆண்டு, 1,953 காலிபணியிடங்களுக்கு நடைபெற்ற குரூப் 2ஏ தேர்விலும், ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் மாநில அளவில் முதல் 50 இடங்களை பிடித்தது குறித்து தற்போது சந்தேகம் எழுப்பப்படுகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 2,500 தேர்வு மையங்களில் ஏழரை லட்சம் பேர் தேர்வு எழுதியிருந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட தேர்வு மையத்தில் இருந்து மாநில அளவில் முதல் 50 இடங்களை பிடித்தது எப்படி என சந்தேகம் எழுப்பப்படுகிறது.

இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் பணி ஆணை வழங்கப்பட்டு அவர்கள் ஏறக்குறைய ஓராண்டு சம்பளமும் பெற்றுவிட்ட நிலையில் இந்த புகார் எழுந்துள்ளது. மேலும் ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய 2 தேர்வு மையங்களில் இதுபோன்று பல்வேறு காலகட்டங்களில் தொடர்ச்சியாக இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற்று இருக்கலாம் என்ற கோணத்திலும் தேர்வர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். இந்த புகார்கள் குறித்து டிஎன்பிஎஸ்சி இதுவரை விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகளில் முறைகேடு நடைபெற்றிருக்கலாம் என்ற புகார், பல ஆண்டுகளாக தேர்வுக்கு தயாராகி வரும் எத்தனையோ லட்சம் இளைஞர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதுகுறித்து விரிவான அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி தேர்வு சர்ச்சை – பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் டுவிட்டர் பதிவுகள்

டி.என்.பி.எஸ்.சி தொகுதி-4 தேர்வுகளில் இராமேஸ்வரம், கீழக்கரையில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முதல் 100 இடங்களில் 40 இடங்களை பிடித்து இருப்பது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விரிவான விசாரணைக்கு ஆணையிட வேண்டும்!

2017-18 ஆம் ஆண்டு நடைபெற்ற தொகுதி 2ஏ தேர்வுகளில் முதல் 50 இடங்களைப் பிடித்தவர்களில் 30 பேர் இந்த மையங்களைச் சேர்ந்தவர்கள் என்பது ஐயத்தை அதிகப் படுத்தியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கமளிக்க வேண்டும்!

அதிகம் பேர் முதலிடம் பெற்ற தேர்வு மையங்களில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தேடி வந்து தேர்வு எழுதியிருப்பது இயல்பாக நடந்த ஒன்றா? திட்டமிட்டு செய்யப்பட்ட ஏற்பாடா? என்பது குறித்து விளக்கம் தேவை. இதில் முறைகேடு நடந்திருந்தால் அதில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe