spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?இந்த நிகழ்வுகள் பற்றி எல்லாம்... ஊடக விவாதம் இல்லாமல் போனது ஏன்?!

இந்த நிகழ்வுகள் பற்றி எல்லாம்… ஊடக விவாதம் இல்லாமல் போனது ஏன்?!

- Advertisement -

கடந்த இரு நாட்களாக தமிழக தொலைக்காட்சிகளின் விவாதங்களில் பாஜகவினர் பங்கெடுக்காது இருப்பது குறித்து பல நண்பர்கள், ஆதரவாளர்கள் வினா எழுப்பி கொண்டிருக்கிறார்கள். பொதுவாக அன்றைய பரபரப்பான, முக்கிய நிகழ்வுகள் குறித்தே தமிழக ஊடகங்கள் விவாதங்களை முன்னெடுப்பதாக சொல்லப்படுகிறது.

கடந்த 22/01/2020 அன்று சென்னை அண்ணா சாலை, ரிச்சி தெருவில் உள்ள ஒரு கடையில் குடியுரிமை சட்ட திருத்தத்தை ஆதரிப்பதாக பதிவு செய்யப்பட்ட பேனாக்களை விற்பதாக, அந்த கடைக்கு முன் மிக பெரிய போராட்டத்தை சட்ட விரோதமாக சில இஸ்லாமிய அமைப்புகள் நடத்தின. அந்த கடையின் உரிமையாளர் மிரட்டப்பட்டார். புகார்கள் கொடுக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை.

26/01/2020, ஞாயிறன்று அந்த கடை தாக்கப்படுகிறது. இது குறித்த புகாரின் அடிப்படையில் சிலர் கைது செய்யப்படுகிறார்கள். கைது செய்யப்பட்டவர்களை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் அழைத்து சென்று விசாரித்து கொண்டிருந்த போது, 2000 திற்கும் அதிகமான இஸ்லாமியர்கள், இரவு 10 மணிக்கு மேல் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு கைது செய்யப்பட்டோரை விடுதலை செய்யுமாறு ரகளையில் ஈடுபடுகிறார்கள். காவல்துறையை மிரட்டும் தொனியில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மத கலவரத்தை தூண்டும் வகையில் பிரச்சாரம் செய்யப்பட்டன, அந்த பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோரை திரட்டி அரசுக்கு எதிராக, ஹிந்து
மதத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஞாயிறன்று காலையில் துக்ளக் ஆசிரியர் திரு.குருமூர்த்தி அவர்களின் வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீச முயற்சித்த சில பொறுக்கிகளின், தீய சக்திகளின் முயற்சி மு றியடிக்கப்பட்டது.இந்த தீவிரவாத செயலில் ஈடுபட 8 பேரை காவல்துறை கைது செய்தது.

27/01/2020, திங்களன்று திருச்சியில் பாஜக நிர்வாகி விஜயரகு முகமது பாபு என்ற நபரால் வெட்டி கொல்லப்படுகிறார்.

துக்ளக் 50 வது ஆண்டு விழாவில், 1971 ஈ. வெ.ரா வின் ஊர்வலம் குறித்து ரஜினி காந்த் அவர்கள் பேசியதை, ஒரு வாரமாக விவாதித்து, விமர்சித்து கொண்டிருந்த ஊடகங்கள், 28/01/2020 செவ்வாயன்று துக்ளக் இதழில் ரஜினி அவர்கள் பேசியதற்காக ஆதாரத்தை வெளியிட்டது குறித்து வாய் மூடி மெளனமாக உள்ளன.

6.செவ்வாய் கிழமை 28/01/2020 அன்று மாலை அலங்காநல்லூரில் பாஜகவின் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்த நிர்வாகிகள் தாக்குதலை நடத்தியதில் பாஜக நிர்வாகிகள் காயமடைந்தனர். அந்த கூட்டத்தில் திருமாவளவன் பெயரை சொல்லக்கூடாது என்று காவல்துறையினரால், வி சி க வினராலும் நிர்பந்திக்கப்பட்டிருக்கின்றனர்.

கடந்த சில நாட்களில் நடை பெற்ற, மேலே குறிப்பிடப்பட்ட நிகழ்வுகளை ஊடகங்கள் மறந்து விட்டனவா? மறைத்து விட்டனவா? இது குறித்து பேசுவதற்கு அச்சப்படுகின்றனவா? தமிழக அரசியல் கட்சிகள், திரு.குருமூர்த்தி அவர்களின் மீதான தாக்குதல் குறித்தும், காவல் நிலைய முற்றுகை குறித்தும், திருச்சி படு கொலை குறித்தும், பாஜக பொது கூட்டத்தில் நடைபெற்ற தாக்குதல் குறித்தும் கண்டனம் தெரிவிக்காது இருப்பது ஏன்? ஊடகங்கள் இது குறித்து விவாதிக்க மறந்தது ஏன்? மத அடிப்படைவாதிகளின் மீதான அச்சமா? அல்லது பாஜக வளர்ந்து வருகிறதே என்ற அச்சமா? அல்லது தி மு கவின் மீதான பாசமா?

மேலே குறிப்பிட்ட 6 சம்பவங்கள் குறித்தும் தமிழக ஊடகங்கள் உரிய முக்கியத்துவத்தோடு விவாதம் செய்வதே ஊடக பொறுப்புணர்ச்சியை மேம்படுத்தும். ஒருவேளை, ஊடகங்களுக்கு அச்சம் இருப்பின் மாநில காவல்துறையிடம் உரிய பாதுகாப்பை பெற்று கொண்டு விவாதம் செய்வது சிறப்பை தரும்.

நாட்டு மக்களின் பாதுகாப்பு, மதசார்பற்ற தன்மை, கருத்து சுதந்திரம், ஜனநாயகம் பாதிக்கப்படும்போது பொங்கியெழ வேண்டிய ஊடகங்கள் இது குறித்து விவாதம் செய்ய மறந்து போன நிலையில், மறுக்கும் நிலையில், இந்த சம்பவங்கள் குறித்து விவாதங்களை செய்து விட்டு மற்ற விவகாரங்களை அலசலாம் என அனைத்து ஊடகங்களுக்கும் தெரிவித்துள்ள நிலையில், விரைவில் தமிழக ஊடகங்கள் இது குறித்து விவாதம் செய்து தங்கள் ஊடக தர்மத்தை நிலை நாட்டும் என்று நம்புவோம்.

  • நாராயணன் திருப்பதி. (பாஜக., செய்தித் தொடர்பாளர்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe