உலகமெங்கும் கொரோனாவின் வைரஸ் தாக்கத்தால் நிலை குலைந்து போயிருக்கும் சூழலிலும் தமிழகத்தில் படிப்படியாக மக்களின் தேவைகளையும், தினக்கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையிலும் ஒருசில தளர்வுகளை ஏற்படுத்தி விமானம், ரயில்,பேருந்து, வேன்,கார் என முதலாளித்துவ சிந்தனையோடு இயக்க அனுமதித்த தமிழக அரசு ஆட்டோக்களை மட்டும் இயக்க அனுமதிக்காதது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவதற்கு சமமாக நடந்துகொள்கிறது.
கடந்த இரண்டு மாதங்களாக கொரோனோவின் பாதிப்பு ஏற்படாதவண்ணம் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது குடும்பத்துடன் பசி,பட்டினி போன்ற பல்வேறு துண்பங்களுக்கு ஆளாகிவரும் வேலையில் எல்லாவித வாகணங்களும் இயக்க அனுமதித்த தமிழக அரசு ஆட்டோக்களை மட்டும் ஏன் நிறுத்தி வைக்கவேண்டும்?
கேட்க நாதியற்று போன ஆட்டோ ஓட்டுநர்கள்.. தமிழக அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் சார்ந்த தொழிலாளர்கள் மத்தியில் எத்தனை எத்தனை சங்கங்கள்? அதிமுக,திமுக,காங், என கட்சிக்கும்,சாதிக்கும், மதத்திற்கும் எத்தனை தொழிற்சங்கங்கள்?
தமிழகத்தில் ஓடும் ஆட்டோ தொழிலாளர்கள் இவர்களின் ஒரு சங்கத்தில் கூட பதிவு செய்யவில்லையா? பிறகு ஏன் இந்த கள்ளமௌனம் சங்கத்தை வழிநடத்வோர் களுக்கு!
ஆசைவார்த்தைகளை கூறி ஆட்டோ ஓட்டுநர்களின் குடும்ப ஓட்டுகளை அபகரிக்க தெரிந்த அரசியல்வாதிகள் இன்று ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்வாதாரத்தை இழந்துநிற்கும் போது கையேந்தவிடுவது நியாயம் தானா?
கொரோனோவின் தாக்கம் உச்சத்தில் இருந்தபோதுகூட அரசு ஊழியர்கள் கூட வேலைக்கே போகாமல் மாத ஊதியம் பெற்ற போது அப்போதும் யாரிடமும் கையேந்தாமல் இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள், அவர்களின் உழைப்பையும் பிடுங்குவது நியாயம் தானா?
அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தினால் ஆட்டோக்களை இயக்கக்கூடாது!
பெட்ரோல் விலையை மத்திய மாநில அரசுகள் ஏற்றினால் ஆட்டோக்களை நிறுத்தி போராட்டம் செய்யனும்!
தலைவர்கள் இறந்தால் ஆட்டோக்கள் ஓடக்கூடாது!
வர்த்தகர்கள் கடையடைப்பு செய்தால் ஆட்டோக்கள் ஓடக்கூடாது!
பிரசவத்திற்கு இலவசமாய் வரணும்!
பிற சவத்திற்கும் இலவசமாய் வரணும்!
ஆனால்!ஆட்டோ ஓட்டுநர்கள் வீட்டில் அடுப்பு எறியக்கூடாது!?
- A.குமரவேல், சமூக ஆர்வலர், கடலூர் மாவட்டம்.