17/09/2020 1:41 PM

கொரோனா கொள்ளை! அதிர வைத்த மின் கட்டணம்… அதிர்ச்சியில் மக்கள்!

தாங்கள் ரீடிங் எடுக்க வரும் போது ஏன் அட்டையில் பயனீட்டு அளவு மற்றும் தொகை குறிப்பிடவில்லை என்று கேட்டால் மின் அட்டை மூலம் அவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி விடுவாராம்.

சற்றுமுன்...

மோடி பிறந்தநாள்: விவசாய அணி சார்பில் மரக்கன்று நடல்!

மோடி பிறந்த தின விழா பாஜக விவசாய அணி சார்பாக மரக்கன்று நட்டு இனிப்பு வழங்கினர்

மகாளய அமாவாசை தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களை விரட்டியடித்த போலீசார்!

டாஸ்மாக் பார்களுடன் பிராந்தி கடை போன்ற மக்கள் நல விரோதக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன!

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கற்கத் தரும் வாழ்க்கை ரகசியம் என்ன?!

ஹாப்பி பர்த்டே நரேந்திர மோடி ஜி! இந்தியப் பிரதம மந்திரி நரேந்திர மோடி செப்டம்பர் 17ஆம் தேதி 1950ம் ஆண்டு பிறந்தார்.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

எஸ்பிஐ., ஏடிஎம்மில் பணம் எடுக்க… இனி ஓடிபி கட்டாயம்!

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் இனி ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு ஓடிபி கட்டாயம் என்று பாரத ஸ்டேடட் வங்கி அறிவித்துள்ளது.
eb card

கொரோனாவை காரணமாக வைத்துக் கொண்டு அரசு மக்களை அச்சுறுத்தும் வகையில் தான் நடத்துகிறது. குறிப்பாக மின் துறை கடந்த 2 மாதங்களாக வீடுகளுக்கான மின் உபயோக கணக்கீட்டிற்க்காக ரீடிங் எடுக்க வரும் கணக்காளர்கள் அதற்கான அட்டையில் பயனீட்டு யூனிட் மற்றும் தொகையைக் குறிப்பிடுவதில்லை. மாறாக குறிப்பிட்ட தேதிக்குள் மின் கட்டண வசூல் மையத்தில் சென்று கேட்டு மின் கட்டணத்தைச் செலுத்தச் சொல்லுகிறார்கள்.

அதன்படி மின்கட்டண வசூல் மையம் சென்றால் அதிர்ச்சியடையும் வகையில் மிரட்டுகிறார்கள். உதாரணமாக கடந்த ஜனவரி மாதம் மின் கட்டணம் ரூ390, மார்ச் மாதம் ரூ.420 மின் கட்டணம் செலுத்திய பெத்தானியா புரத்தைச் சேர்ந்த ராஜன் என்பவருக்கு இந்த மாதத்திற்கான மின் கட்டணம் ரூ.2200 செலுத்த வேண்டும் என அதிர்ச்சியூட்டும் தொகையை கூறியுள்ளார்கள்.

அதிர்ச்சியடைந்த அவர் சார் கடந்த ஒன்றரை வருடங்களாக அதிக பட்சம் ரூ.500 வரை செலுத்தியுள்ளேன் தற்போது எப்படி ரூ.2200 என்று கேட்டால் அது தான் உங்களுக்கான மின் கட்டண தொகை என்று அதிரடியாக கூறுகிறார்.

ebcard2

தாங்கள் ரீடிங் எடுக்க வரும் போது ஏன் அட்டையில் பயனீட்டு அளவு மற்றும் தொகை குறிப்பிடவில்லை என்று கேட்டால் மின் அட்டை மூலம் அவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி விடுவாராம்.

அப்படியானால் நூற்றுக்கணக்கான வீடுகளுக்குச் சென்று ரீடிங் எடுப்பதால் மட்டும் இவருக்கு கொரோனா தொற்று ஏற்படாதா? கொரோனாவை காரணமாக வைத்து இவர்கள் மக்களிடமிருந்து கொள்ளையடிப்பதையே நோக்கமாக கொண்டுள்ளனர்.

ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டிலேயே இருப்பதனால் மின் கட்டணம் சற்று உயரலாம் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது தான். ஆனால் இப்படி 4 மடங்கு உயர்வது என்பது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. இவர்கள் மின் பயனீட்டு அட்டையில் கடந்த முறை எடுத்த ரீடிங், இந்த முறை உள்ள ரீடிங் இவற்றை கணக்கில் கொண்டு தான் பயனீட்டு அளவு, தொகை இவற்றை அட்டையில் குறிப்பிட வேண்டும்.

ebcard3

இவை எதையும் மேற்கொள்ளாமல் இவர்கள் சொல்லும் தொகையை செலுத்த வேண்டும் என்று கூறினால் எந்த அடிப்படையில் நியாயம். கேட்டால் மக்களுக்கான அரசு என்று பிதற்றுகிறார்கள். மக்களிடமிருந்து கொள்ளையடிப்பது தான் மக்களுக்கான அரசா?

அட்டையில் உள்ளபடி ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தபட்ச தொகையே கடந்த மாதங்களில் வந்துள்ளது ஆனால் வில்லியம் என்பவருக்கு ரூ.4800ம், சாரதாம்பாள் என்பவர் வீட்டிற்கு 2400 மின்கட்டண தொகையாக வந்துள்ளது. இதனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்!

  • செய்திக் கட்டுரை: ரவிச்சந்திரன், மதுரை

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

திமுக Vs அதிமுக: ‘நீட்’டுக்குக் காரணம் யார்? நீளும் வார்த்தைப் போரின் பின்னணி!

அவர் இது சட்டரீதியாக செல்லுபடியாகாது என்று அறிவுறுத்தியதன் பேரில் அது மேலே தொடரப்படவில்லை...

சமையல் புதிது.. :

ஆரோக்கிய சமையல்: வெங்காய பீர்க்கங்காய் மசியல்!

வெங்காய பீர்க்கங்காய் மசியல்தேவையான பொருட்கள்வெங்காயம். 200 கிராம்பீர்க்கங்காய். 200 கிராம்காய்ந்த மிளகாய்-6புளி....

சினிமா...

அப்பா உடற்பயிற்சி செய்கிறார்: எஸ்பிபி சரண்!

பாலு விரைவில் நலமடைந்து வீட்டுக்கு திரும்ப வர வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோ இதோ!

ஒரு ஸ்மைல்… அழகாய் புடைவை கட்டி… கலக்கும் வாணி போஜன்!

இப்போது வலைத்தளங்களில் தன் புகைப்படங்களை உலவ விட்டு, ரசிகர்கள் தன்னை மறக்காத வகையில் எப்போதும் ‘டச்’சில்  வைத்துக் கொண்டிருக்கிறார். Source: Vellithirai News

தல சம்மதித்து விட்டாராம்.. வலிமை ஷூட்டிங் தொடங்குகிறதா?

வலிமை படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் ஆரம்பமாகும் என புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

படப்பிடிப்பின் போது நீரில் மூழ்கி பாறையின் இடையில் சிக்கிய ஜாக்கி சான்!

பதறிப்போன படக்குழுவினர் உடனடியாகத் தண்ணீரில் இறங்கி அவரைத் தேடினர்.

சினிமா பேனரால் மரணம் நிகழ்ந்தால் சினிமாவை நிறுத்தி விடுவீர்களா? சூர்யாவிற்கு பதிலடி தந்த காயத்ரி ரகுராம்!

தேர்வுகளை மாணவர்கள் தைரியமாக எதிர்கொள்வதற்கு ஊக்கப்படுத்துங்கள்.. மருத்துவர்கள் ஒவ்வொரு நாளும் நோயாளிகளைப் பார்ப்பதும் கூட தினந்தோறும் தேர்வு எழுவதைப் போலத்தான் என்று கூறியிருக்கிறார்.

செய்திகள்... மேலும் ...

Translate »