ஏப்ரல் 21, 2021, 7:11 மணி புதன்கிழமை
More

  திறனிழந்து போன தமிழக காவல் துறை!

  அனைத்து துறைகளிலும் கடைநிலை ஊழியர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை லஞ்ச ஊழலில் திளைத்து வருகிறார்கள்

  tnpolice
  tnpolice

  தமிழில் 1980-ஆம் ஆண்டு பில்லா என்ற திரைப்படம் ரஜினி நடிப்பில் வெளிவந்தது அதில் ரஜினி இரு வேடங்களில் நடித்திருப்பார் போதை பொருள் கடத்தல் மன்னன் பற்றிய கதை அது இந்தியில் வெளியான டான் படத்தின் ரீமேக் படம் அந்த படம் மீண்டும் 2012-ல் அஜீத் நடிக்க ரீமேக் செய்யபட்டது

  ரஜினி மற்றும் அஜீத் நடித்த இரு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்ற படங்கள்

  அஜீத் நடித்த பில்லா படத்தில் பிரபு காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பார் அதில் காவல்துறை வாகனங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதைபோல ஒரு காட்சி வரும் அதைபோலவே அதாவது நிஜ பில்லாவாக இலங்கை காவல்துறை வாகனத்தின் மீது ஏகே 47 துப்பாக்கியால் சுட்டு செயல்படுத்தி காட்டியவன் இலங்கை போதை மருந்து கடத்தல் மன்னன் அங்கட லொக்கா @ மத்துகமே லசந்தா சந்தன பெரேரா

  இலங்கையை சேர்ந்த சர்வதேச போதை மருந்து கடத்தல் மன்னனான அங்கட லொக்க மீது பல நாடுகளிலும் பல வழக்குகள் இருக்கிறது இலங்கையில் தேடபடும் முக்கிய குற்றவாளி

  ஆனால் கடந்த 4ந்தேதி கோவை பீளமேட்டில் வசித்து வந்த பிரதீப் சிங் என்பவர் மாரடைப்பால் காலமானதாக வழக்கறிஞர் சிவகாம சுந்தரி என்பவர் காவல்துறையில் புகார் அளித்து அதன் பேரில் சடலகூறாய்வு நடத்தபட்டு உடல் மேற்படி பிரதீப் சிங்கின் காதலி அமானி தான்ஜி யிடம் ஒப்படைக்கபட்டு மதுரைக்கு கொண்டு சென்று எரியூட்டபட்டது

  அதே வேளையில் இலங்கையில் தொலைகாட்சி செய்திகளில் போதை மருந்து கடத்தல் மன்னன் அங்கட லொக்க தமிழகத்தில் விஷம் வைத்து கொல்லபட்டதாக செய்தி வெளியானது

  அதன்பிறகே கண் விழித்த தமிழக காவல்துறை விசாரனை நடத்தியதில் இறந்துபோனது அங்கட லொக்கா என்றும் பிரதீப் சிங் என்ற போலி பெயரில் ஆதார் கார்ட் முதல் அனைத்து ஆவணங்களும் தயாரித்து கோவை பீளமேட்டில் வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது போலி ஆவணங்கள் வாங்கி கொடுத்த தியானேஸ்வரன் என்பவரும் கைது செய்யபட்டுள்ளார் அங்கட லொக்காவிற்கு எல்லா வகையிலும் சட்ட உதவி செய்து வந்த வழக்கறிஞர் சிவகாம சுந்தரி மற்றும் அங்கட லொக்காவின் காதலி அமனி தான்ஜி ஆகியோரும் கைது செய்யபட்டுள்ளனர்.

  பிற நாட்டு எல்லைகளுக்கு தரைமார்கமாக அருகேயுள்ல மாநிலங்களில் குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தில் ரோஹிங்கியர்கள் பங்களாதேசிகள் கஷ்மீரில் பக்கிஸ்தானியர் சட்டவிரோதமாக ஊடுறுவி மாநில அரசுகள் மற்றும் அரசு அதிகாரிகளின் துணையோடு இந்திய குடிமகன்களாக ஆவணங்கள் தயரித்துசொகுசாக வாழ்வது நெடுங்காலமாக நடப்பதுதான் ஆனால் தமிழகம் அப்படி இல்லை வேறு எந்த நாட்டின் எல்லையும் தரைமார்கமாக அணுகும் நிலை இல்லை ஆனால் ரோஹிங்கியன் முதல் பங்ளாதேசிகள் வரை இங்கும் பரவியிருப்பதாக செய்திகள் வருகிறது

  ஆனால் இலங்கையை சேர்ந்த போதைமருந்து கடத்தல் மன்னன் அங்கட லொக்க இங்கே ரேஷன் அட்டை முதல் ஆதார் வரை அனைத்து ஆவணங்களும் வாங்கி வைத்துகொண்டு சுதந்திரமாக வாழ்ந்து வந்ததும் சினிமாவில் மதுரைகாரனாக நடிக்க மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததும் தற்போது அம்பலமாகியுள்ளது

  அரசில் எந்த ஒரு துறையும் ஒரு வெளிநாட்டு குற்றவாளி இங்கே தங்கியிருப்பதை அறியும் திறன் பெற்றிருக்கவில்லை குறிப்பாக தமிழக காவல்துறை படுதோல்வி அடைந்துள்ளது என்பதையே அங்கட லொக்காவின் சரித்திரம் நிரூபிக்கிறது

  தமிழகத்தில் உளவுதுறை ஒன்று இருக்கிறதா செயல்படுகிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது வெளிநாட்டினர் தகவல்களை சேகரிக்க வேண்டிய மாவட்ட காவல் அலுவலகங்கள் அதை பற்றி சிந்திப்பதாகவே தெரியவில்லை

  அனைத்து துறைகளிலும் கடைநிலை ஊழியர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை லஞ்ச ஊழலில் திளைத்து வருகிறார்கள் எவருக்கும் நாட்டை பற்றின அக்கறை இல்லை தேசபக்தியும் இல்லை குறிப்பாக தமிழகத்தை ஆளுவோருக்கு துளியும் இல்லை என்பது இது போன்ற சம்பவங்கள் மூலம் அப்பட்டமாக தெரியவருகிறது

  இதற்கெல்லாம் விடிவு எப்போது என்று தெரியவில்லை

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »