Homeஉரத்த சிந்தனைஅரசு பணத்தில் 'இஸ்லாமிய தலைநகர்' கல்வெட்டா?

அரசு பணத்தில் ‘இஸ்லாமிய தலைநகர்’ கல்வெட்டா?

periyapattinam-katvettu
periyapattinam-katvettu

ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் புதிதாக திறக்கப்பட இருக்கும் பஞ்சாயத்து கட்டட அலுவலகத்தில் இஸ்லாமியர்களின் முதல் தலைநகரம் பெரியபட்டினம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களின் வரிப்பணத்தில் அரசு சார்பில் கட்டப்படும் கட்டிடத்தில் இஸ்லாமிய தலைநகரம் என குறிப்பிடுவது எப்படி அரசு அனுமதிக்கிறது.. கல்வெட்டு வைப்பதில் உள்ள பின்னணி உள்நோக்கத்தை உளவுத்துறை விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி ராமநாதபுரம் மாவட்ட பொதுச்செயலர் ராமமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்து மன்னர்கள் ஆட்சி குறித்து தமிழக அரசு கல்வெட்டு வைக்க அனுமதிக்குமா? மதசார்பற்ற அரசு என்பது உதட்டளவிலா? உண்மையிலா? என்று இந்து தமிழர் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் ராம.ரவிக்குமார் இது குறித்து குறிப்பிட்ட போது…


இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் #நவாஸ்கனி தலைமையில் புதிதாக திறக்கப்பட இருக்கும் #பஞ்சாயத்துகட்டிட அலுவலகத்தில் இஸ்லாமியர்களின் முதல் தலைநகரம் பெரியபட்டினம் என குறிப்பிடப்பட்டுள்ளது..
இந்து தமிழர் கட்சியின் சார்பில் கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறோம்.

அனைத்து சமுதாய மக்களின் வாக்குகளை பெற்று மக்களின் வரிப்பணத்தில் அரசு சார்பில் கட்டப்படும் கட்டிடத்தில் இஸ்லாமிய தலைநகரம் என குறிப்பிடுவது எப்படி அரசு அனுமதிக்கிறது.?

மதசார்பற்ற அரசு என்று சொல்லி மக்களிடம் மாய்மாலம் பேசக் கூடிய அரசியல் தலைவர்கள் இதுகுறித்து அமைதியாக இருப்பதன் பின்னணி என்ன?

இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை ஆண்ட இந்து மன்னர்கள் குறித்து கல்வெட்டுக்களை ஒவ்வொரு பகுதியிலும் அரசாங்கம் திறக்க முன்வருமா அனுமதிக்குமா என்பது குறித்து நடுநிலையாளர்கள் யோசிக்க வேண்டும்?

இந்தியாவில் படை எடுத்து வந்து நம்மை அடிமைப்படுத்தி மதமாற்றம் செய்து ஆலயங்களை அழித்து அட்டூழியங்களை செய்து அயோக்கிய வரலாறுகள் பல இருக்கிறது அதையெல்லாம் அரசாங்கம் ஆவணப்படுத்தி கல்வெட்டு வைக்க அனுமதிக்குமா?

இந்துக்கள் சிறுபான்மை யாகி இந்து அல்லாதவர்கள் பெரும்பான்மை ஆனால் அந்தப்பகுதி என்ன ஆகும் என்பதற்குஇது உதாரணம்!

தமிழக அரசு உடனடியாக இந்த கல்வெட்டை அகற்றவேண்டும்இல்லை எனில் இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக அரசு செயல்படுவதாக ஆகிவிடும்.

அனைவருக்கும் பொதுவான அரசு அனைத்து மக்களிடமும் வரிப்பணம் வாங்கும் அரசு ஒரு சார்பாக செயல்படுவது முறையல்ல !! இதற்கு வன்மையான கண்டனங்கள். தேசபக்தர்கள் நடுநிலையாளர்கள் இந்த விஷயத்தை தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல உதவ வேண்டும். ஊடகங்கள் இது குறித்து விவாதிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை இந்து தமிழர் கட்சி சார்பில் முன்வைக்கிறோம்! என்று ராம. ரவிக்குமார் கூறியுள்ளார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

Follow Dhinasari on Social Media

19,140FansLike
376FollowersFollow
65FollowersFollow
74FollowersFollow
2,795FollowersFollow
17,300SubscribersSubscribe

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் நடிகர் பாடகர் விஜய்..

தமிழ் சினிமா மட்டுமில்லாது தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் தமிழ் சினிமா குடும்பத்தில்...

நாளை‌ நடிகர் விஜய் பிறந்தநாள்-ரசிகர்களுக்கு விருந்து..

நாளை‌ நடிகர் விஜய் பிறந்தநாள் கொண்டப்படுவதை ஒட்டி படத்தின் பெயர் இன்று வெளியாகியுள்ளது....

ரூ. 300 கோடி வரை வசூல் செய்துள்ள்ள விக்ரம்.. நன்றி தெரிவித்த கமல்..

உலகம் முழுவதும் விக்ரம் ரூ. 300 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது....

பிரபலமாகி வரும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணப் புகைப்படங்கள் ..

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பிரபலமாகி வருகிறது. நடிகர், பாடலாசிரியர், இயக்குனர்...

Latest News : Read Now...

Exit mobile version