ஏப்ரல் 23, 2021, 7:33 காலை வெள்ளிக்கிழமை
More

  முதலமைச்சர் கனவுக்கு சாபக்கேடாக… கரூரில் ஒரு கல்வி அதிகாரி!

  தமிழக முதல்வரும், உயர்கல்வித்துறையும் ஒன்றிணைந்து கூட்டு நடவடிக்கையாக ஏதேனும் நடவடிக்கை எடுத்து

  karur-college
  karur-college
  • தமிழக முதல்வரின் உத்திரவையே உதாசீனப்படுத்தும் கரூர் அரசு கலைக்கல்லூரி முதல்வர்?
  • நடவடிக்கை எடுக்குமா உயர் கல்வித் துறை நிர்வாகம்?
  • இது கரூர் அரசு கலைக் கல்லூரியின் அரசியலா ?

  இந்திய அளவிலேயே தமிழகம் உயர்கல்வித்துறையில் மிகச்சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்றது. ஏழை, எளிய மாணவர்களின் நலன் கருதி தமிழகத்திலேயே 109 அரசு கலைக்கல்லூரிகள் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன.

  இந்த வருடம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மாணவர்களின் நலன் கருதி 7 அரசு கலைக்கல்லூரிகளை தமிழகத்தில் செயல்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டது.

  அதில், கரூர் மாவட்டம், தரகம்பட்டி புதிய அரசு கலைக்கல்லூரியைத் தவிர மற்ற 6 அரசு கலைக் கல்லூரிகளுக்கு சிறப்பு அதிகாரிகள் உடனடியாக அங்கு பணியில் சேர்ந்து அரசு ஆணையை மதித்தும், மாணவ, மாணவர்களின் எதிர்காலம் சிறக்க வேண்டி சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

  அதில், கரூர் மாவட்டத்திற்கு, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தரகம்பட்டி பகுதியில் புதிததாக அரசு கலைக்கல்லூரி தொடங்க ஆணை பிறப்பித்து, அரசின் உத்திரவை உயர்கல்வித்துறை நிர்வாகம் மதித்து உடனே மாணவர்கள் சேர்க்கையும் நடைபெற்று கொண்டிருக்கின்றது.

  இந்தப் புதிய அரசு கலைக்கல்லூரியின் சிறப்பு அதிகாரியாக செயல்பட, கரூர் அரசு கலைக்கல்லூரியிலிருந்து முனைவர் ராதாகிருஷ்ணன் என்பவரை அரசு நியமித்தது. இதற்கான பணி ஆணையை அவர் பெற்றுக் கொண்டுள்ளார்.

  இந்நிலையில், இவர், அங்கு சரியாக வேலைக்கு செல்வது கிடையாது. அந்தப் புதிய கல்லூரி அமைந்துள்ள பகுதியான தரகம்பட்டி பகுதிக்கு இவர் சரியாக வேலைக்கு வருவதில்லை என்று அங்குள்ள மக்களும், மாணவ, மாணவிகளின் பெற்றோர்களும் முகம் சுழிக்கின்றனர்.

  இவர் தற்போது வரை, கரூர் அரசு கலைக் கல்லூரியிலிருந்து செல்லாமல், ரீலிவிங் ஆர்டர் வாங்காமல், நான் செல்ல மாட்டேன் என்று கூறி கரூர் அரசு கலைக் கல்லூரியிலேயே டெரா போட்டு விட்டதாக அரசு கல்லூரி மாணவர்களின் வட்டாரங்களும் தகவல் தெரிவித்துள்ளன.

  ஆனால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் முத்தான அறிவிப்பாக விளங்கும் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தரகம்பட்டி பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு கலைக்கல்லூரி நியமித்ததை உதாசினப்படுத்தும் நோக்கில் கரூர் அரசு கலைக்கல்லூரியை சார்ந்த முனைவர் ராதாகிருஷ்ணன் செயல்படுவதாக அ.தி.மு.க கட்சியினரே குற்றம் சாட்டி வருகின்றனர்.

  ஆகவே, தமிழக முதல்வரும், உயர்கல்வித்துறையும் ஒன்றிணைந்து கூட்டு நடவடிக்கையாக ஏதேனும் நடவடிக்கை எடுத்து மாணவ, மாணவிகளின் நலனை காக்க வேண்டுமென்கின்றனர் இப்பகுதியினை சார்ந்த நடுநிலையாளர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்களும் !

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,233FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »