Home புகார் பெட்டி மின்கம்பி அறுந்து விழுந்து சோகம்; கை இழந்த இளம்பெண்! கண்டு கொள்ளாத அமைச்சர் ‘தங்கமணி’!

மின்கம்பி அறுந்து விழுந்து சோகம்; கை இழந்த இளம்பெண்! கண்டு கொள்ளாத அமைச்சர் ‘தங்கமணி’!

girl-admitting
girl admitting

ஒரு நாள் கரண்ட் பில் லேட்டா கட்டினால் கூட அபராதம் வசூலிக்கும் மின்சாரத்துறை அமைச்சர் வீட்டின் அருகே, மின் கம்பி அறுந்து விழுந்ததில் ஓர் இளம்பெண் தன் கையை இழந்துள்ளார். கேட்க நாதியில்லை.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், அதாவது மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தொகுதியில் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படிக்கும் ஹேமா என்ற இளம்பெண்ணின் மீது மின் கம்பி அறுந்து விழுந்தது. இதில் அவர் வலது கை பாதிப்பு அடைந்தது. கோவை கங்கா மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் பலன் இன்றி கையை எடுத்துவிட்டனர்.

விஷயம் கேள்விப்பட்டும் அமைச்சர் நேரில் சென்று ஆறுதலோ நிவாரணமோ வழங்கவில்லை. பாதிப்பு அடைந்த குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் சி.எஸ்.ஆர் காப்பி கூட கொடுக்க மறுக்கின்றனர்.

தொகுதியில் வலம் வந்து கொண்டிருக்கும் அமைச்சர் தங்கமணி அவர்களுக்கு வாழ்க்கையையே தொலைத்து நிற்கும் பெண்ணைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. இதுவே, ஒரு சிறுபான்மை இனத்தவருக்கோ, பட்டியல் இனத்தவருக்கோ நிகழ்ந்திருந்தால், ஓட்டு வங்கியை மனதில் வைத்து, கட்சி முழுவதும் விழுந்து அடித்து பல லட்சங்கள் நிவாரணமும், அரசு வேலையும் கொடுத்திருப்பார்கள். இது ஓபிசி இனம் தானே? கேட்க நாதியில்லை.

girl admitting1

மின்சாரத் துறையினால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அவர்களின் சொந்தத் தொகுதியிலேயே கூட நிவாரணம் கொடுக்க நேரமில்லையா இல்லை விருப்பம் இல்லையா? என்று தொகுதி மக்கள் கொந்தளித்து போய் இருக்கின்றனர்.

வரும் தேர்தலிலும் குமாரபாளையம் தொகுதியிலேயே போட்டியிடக் காத்திருக்கும் அமைச்சர் தங்கமணிக்கு சரியான பாடம் புகட்டுவோம் என்று தொகுதிவாசிகள் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.

1. பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை ஏற்று, சி.எஸ்.ஆர். காப்பி கொடுக்க வேண்டும்.
2. பாதிக்கப்பட்ட ஹேமாவிற்கு மருத்துவச் செலவு உட்பட நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.
3. வாழ்க்கையை இழந்து நிற்கும் பெண்ணுக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் போன்ற கோரிக்கையை வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கக் காத்திருக்கின்றனர்.

  • ஆனந்தன் அமிர்தன்

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version