- Ads -
Home புகார் பெட்டி மின் கட்டண உயர்வு; அரசின் மிகப் பெரும் சுரண்டல்!

மின் கட்டண உயர்வு; அரசின் மிகப் பெரும் சுரண்டல்!

ஆகவே இந்த அநியாயத்திற்கெதிராக குரல் கொடுக்க வேண்டியது மட்டுமல்ல போராடவும் முன்வர வேண்டும்.! தயார் ஆவீர் மக்களே!!

அரசே மிகப்பெரிய சுரண்டலில் ஈடுபடுகிறது- மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்! தயவு செய்து இதைப் புரிந்து கொள்ளுங்கள்.

தற்போதைய TNEB மின் கட்டணம்:

500 யூனிட் பயன்படுத்தினால் ரூ. 1330/-
501 யூனிட் பயன்படுத்தினால் ரூ. 2127/-
1 யூனிட் அதிகமாக இருந்தால் ரூ.797/- கூடுதலாக செலுத்த வேண்டும்

இந்த முறையை மாற்றி, மாதாந்திர மீட்டர் ரீடிங் செய்ய வேண்டும்.
தயவு செய்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும்.
நீங்கள் 1000 யூனிட்களை 2 மாதங்களுக்கு பயன்படுத்தினால், நாங்கள் ரூ.5420/- செலுத்த வேண்டும்.
ஆனால், மாதாந்திர முறை அமல்படுத்தப்பட்டதால், மாதம் ரூ.1330/- மட்டுமே செலுத்த வேண்டும்.
எனவே, இரண்டு மாத கட்டணம் ரூ.2660/- மட்டுமே.
இரண்டு மாதங்களுக்கு ரூ.2760/- சேமிக்க முடியும்.
மாதாந்திர மீட்டர் ரீடிங் முறையை கொண்டு வர அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும். உங்கள் அனைத்து குழுக்களுக்கும் அனுப்பவும்.🙏

சகோதரர் அவர்கள் அனுப்பிய இந்தப் பதிவு மிக முக்கியமான விழிப்புணர்வு பதிவு…….*

ALSO READ:  கணக்கெடுப்பில் பாரபட்சம்: அய்யனார்குளம் விவசாயிகள் அதிகாரிகள் மீது புகார்!

பெரும்பாலும் இந்த விஷயத்தில் யாரும் கவனம் எடுத்துக் கொள்வதில்லை. இதனால் நமது பொருளாதாரம் திட்டமிட்டு மின்சார வாரியத்தால் சுரண்டப்படுகிறது.

ஆகவே இதன் முக்கியத்துவத்தைக் கருதி, இந்தக் கட்டுரையின் சாராம்சத்தை விளக்கமாக தருகின்றேன்.

மின்சார வாரியம், இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின்சார ரீடிங் எடுப்பதால் மிகப் பெரிய பொருளாதார நஷ்டம் நமக்கு ஏற்படுகின்றது……

உதாரணத்திற்கு ,

500 யூனிட் வரை பயன்படுத்தியதற்கு கட்டணம் ரூ.1330.

அதே நேரத்தில் ஒரு யூனிட் கூடுதலாக வந்தால் (501 யூனிட் ) அப்போது கட்டணம் ரூ.2127.

ஒரே ஒரு யூனிட் கூடுவதால், நமக்கு ஏற்பட்ட கூடுதல் செலவு ரூ.797.

யோசித்துப் பாருங்கள்…. நம்மை அரசு எவ்வாறு சுரண்டுகின்றது என்று……..?

ஆக, ஒவ்வொரு மாதமும் மீட்டர் ரீடிங் செய்யப்பட்டால், நமது மின்சார கட்டணம் குறைவு……..!

மேலும்……….,

இரண்டு மாதத்திற்கு ஒரு முறையாவது (60 நாட்களுக்கு ஒரு முறையாவது) மீட்டர் ரீடிங் பார்க்க சரியாக வருகின்றார்களா …..? என்று சொன்னால் நிச்சயமாக இல்லை……..

ALSO READ:  நெல்லை வரதராஜ பெருமாள் கோயில் பரமபத வாசல் திறப்பு ரத்து; இந்து முன்னணி கண்டனம்!

இரண்டு மாதத்திற்கு ஒரு முறை 28 அல்லது 29 ந் தேதி ரீடிங் பார்க்க வர வேண்டிய ஊழியர், இந்த மாதம் 31 ஆம் தேதி வந்தால் பல வீடுகளில், இந்த மாதம் மட்டும் மின் கட்டணம் ஆயிரக்கணக்கில் வந்துள்ளது.

ஆகவே இந்த அநியாயத்திற்கெதிராக குரல் கொடுக்க வேண்டியது மட்டுமல்ல போராடவும் முன்வர வேண்டும்.! தயார் ஆவீர் மக்களே!!

இப்படிக்கு உங்கள் தமிழ் நண்பன் !

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version