பெருமதிப்பிற்குரிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்
அண்ணன் தொல்.திருமாவளவன்
அவர்களுக்கு
வணக்கம். நலமே நாடுகிறேன்
மதுரை மாவட்டம் பேரையூர் அருகில் உள்ள சந்தையூர் என்கிற ஊரில் ஆலய வழிபாடு மற்றும் பாதை பிரச்சினை – தீண்டாமை சுவர் பிரச்சினை தங்களின் கவனத்திற்கு வந்திருக்கும் என நம்புகிறேன்.
இந்து பறையர் சமுதாய மக்களுக்கும் – இந்து அருந்ததியர் சமுதாய மக்களுக்குமான தீண்டாமை பிரச்சினை உண்மையில் மனம் வேதனை அடையச் செய்கிறது.
தமிழகத்தில் தொடர்ந்து எங்கெல்லாம் தீண்டாமை பிரச்சினை எழுகின்ற நேரங்களில் எல்லாம் மதுரை உத்தப்புரம் – நாகை மாவட்டம் கள்ளிமேடு – கரூர் சுக்காலியூர் ….. இப்படி பல ஊர்களில் இரு தரப்பு மக்களுக்கும் சமாதான சூழல் உண்டாக்கிட இந்து மக்கள் கட்சி சார்பில் அந்த ஊர்களிலே தங்கியிருந்து ஒரு சிறு அணில் போல உதவினேன்.
மேலும் ஒவ்வொரு திருக்குலத்தார் மக்களுக்கு திருக்குலத்தார் திருப்பாத வழிபாடு செய்து வருகிறேன் என்பதை தாங்கள் அறிவீர்கள்.
ஆனால் மதுரை சந்தையூர் பிரச்சினையில் அருந்ததியின மக்கள் _ பறையர் சமூக மக்களின் ஆதிக்க மனப்பான்மையால் _ இக்கொடுமை கண்டு -நாங்கள் முஸ்லீம்களாக மாறப் போகிறோம் என்ற அறிவிப்பு மிகுந்த மன உளைச்சலை தருகிறது.
களத்தில் பறையர் சமுதாய மக்களுக்கும் விடுதலை சிறுத்தைகளும் -அருந்ததியர் சமுதாய மக்களுக்கு ஆதரவாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட பல இயக்கங்கள் போராடுவது என்பது சரியான தீர்வை நோக்கி செல்லாது.
இந்த சந்தையூர் பிரச்சினையை சர்வதேச பிரச்சினையாக மாற்றி
அதில் குளிர் காய நினைப்பவர்
எவிடென்ஸ் – அமைப்பின் கதிர் என்ற கிறிஸ்தவர்.
மதுரை மாவட்ட ஆட்சியரும் – தமிழக அரசும் தெளிவான _உறுதியான பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க தயங்குவதும் – காலம் தாழ்த்தி வருவதும் இல்லாமல் உடனடியாக தலையிட வலியுறுத்தி கடந்த 17.03 2018 அன்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் அய்யா
திரு.முருகன் அவர்களிடம் மனு அளித்துள்ளோம்.
சட்டம் – நீதிமன்றம் .போராட்டம் – ஆர்பாட்டம் ….. இப்படி பல செய்தாலும் தீர்வுக்கு இரு தரப்பு மக்களும் -அந்த சந்தையூர் மக்கள் மகிழ்வோடு வாழ தாங்கள் இரு தரப்பினரையும் சந்தித்து பேசிட வேண்டி அன்புடன் அழைக்கிறேன் .
மதமாற்றம் நடக்காமல் தடுத்திட_ பேசி – அனைத்து மக்களின் உரிமைகளும் – உணர்வுகளும் மதிக்கப்பட்டு சுமூக தீர்வு காண அண்ணன் விரும்பினால் துறவியர் பெருமக்களை உடன் அழைத்து வர தயாராக இருக்கிறேன்.
நன்றி
என்றும்
தங்கள்
இராம. இரவிக்குமார்
இந்து மக்கள் கட்சி மாநில பொது செயலாளர்