“சாலமோன் பாப்பையா அவர்களே உங்கள் அரசியல் விருப்பு வெறுப்புகளை தமிழ் பாரம்பரிய பட்டிமன்றத்தில் திணிக்காதீர்.”
தமிழ் இலக்கிய மன்றமாக ஒரு காலத்தில் போற்றப்பட்ட பட்டிமன்றம் நிகழ்ச்சி கூட தற்போது அரசியல் மன்றமாக மாறி வருவது தமிழ் கூறும் நல்லுலகில் வேதனைக்குரியது.
திண்டுக்கல் லியோனி என்ற திமுக பேச்சாளர் திமுக கலைஞர் தொலைக்காட்சியில் பட்டிமன்றம் நடத்துவதை குறிப்பிடவில்லை. காரணம் அதை பட்டிமன்றமாகவோ லியோனியை தமிழ் அறிஞராகவோ நான் ஒரு போதும் கருதியதில்லை.
புலிக்கேசியை புகழ்ந்து பாடும் பாணபத்திர ஓணாண்டி தான் நினைவில் வருவார். ஆனால் நடுநிலை தொலைக்காட்சியாய் தன்னை காட்டி கொள்ளும் சன்டிவி தமிழறிஞராய் உருவகப்படுத்தப்படும் சாலமன் பாப்பையா தலைமையில் இன்று நடைபெற்ற பட்டிமன்றம்.
ராஜா சம்பந்தமேயில்லாமல் பென்னிகுயிக்கை போற்றி பாரத பிரதமரை மறைமுகமாக ஏளனம் செய்து தனது கிறிஸ்தவ வெறியை அந்நிய விசுவாசத்தை காட்டினார்.
நடுவர் சாலமோன்பாப்பையா தனது இறுதி உரையில் கருணாநிதி காவிரிக்காக சாதித்தார்ன்னு துதிபாட ஆரம்பித்தார். தற்போது மத்திய மாநில அரசுகள் தான் காவிரியை தடுத்து நிறுத்துவது போலும் எதுவுமே செய்யாதது போலவும் பேசினார்.
கருணாநிதி தான் காவிரி பிரச்சனைக்கே காரணம் என்றும் 5முறை முதல்வராய் இருந்தும் தீர்க்க முடியாத பிரச்சனை என்றும் சொன்னால் அடுத்த முறை பட்டிமன்றம் கிடைக்காதே என்ற வயிற்று பொழைப்புக்காக பட்டிமன்றத்தை அரசியல் மன்றமாக்கினார்.
ராஜாஜி கருணாநிதி MGR காவிரி பிரச்சனையை நன்றாக கையாண்டார்களாம்! சரி காமராஜரும் ஜெயலலிதாவும் என்ன சொஞ்சாங்கன்னு ஏன் சொல்லலை.
இவங்க செய்யாததை அப்பிடி என்னத்தை கருணாநிதி செஞ்சாரு. மத்தியிலும் மாநிலத்திலும் கர்நாடகத்திலும் காங்கிரஸ் திமுக அணி ஆட்சியிலிருந்து பல வருடமாக காவிரி பிரச்சனை தீரலையே!
சாலமோன்பாப்பையா அவர்களே உங்கள் அரசியல் விருப்பு வெறுப்புகளை தமிழ் பாரம்பரிய பட்டிமன்றத்தில் திணிக்காதீர்.
மொழியின் பாரம்பரியத்தை பணத்துக்காக அடகு வைப்பதா? ஆனாலும் நிகழ்ச்சியில் ஆறுதல் திருமதி பாரதிபாஸ்கர். கடந்த காலங்களில் ஆறு குளங்களை தூர்வாராமல் அணை கட்டாமல் காவிரிக்காக போராடுவதா என நியாயமாய் கேட்டது சற்று ஆறுதல். அரங்கத்திலும் அதற்குத்தான் அதிக கரவொலி…
தமிழ் இலக்கிய பாரம்பரியத்தை வயிற்று பிழைப்புக்காக அடகு வைத்தாலும் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என்பதற்கு அந்த கரவொலியே சாட்சி.!
- கா.குற்றாலநாதன்