ஆலயங்கள் சீரமைப்புக்கு சில யோசனைகள்…!

சர்ச்களில் அந்த அந்த திருச்சபை மற்றும் உறுப்பினர்கள் குடும்பம் தான் செல்ல முடியும். திருசபை மெம்பர்கள் வருமானத்தில் பத்து சதம் சர்ச்சுக்கு கட்டாயமாக கொடுக்க வேண்டும்.தரிசன கட்டணம் கிடையாது.மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் சர்ச்சுக்கு வந்தால் உடனே இனம் கண்டு விசாரிப்பார்கள்.

அதே போல மசூதிக்கு வருபவர்கள் அவர்கள் முறையில் தொழுகை நடத்த வேண்டும். ஜமாத் என்று ஒரு அமைப்பு உண்டு.முஸ்லீம் அல்லாதவர்கள் வந்தால் கண்டுபிடித்து விடலாம்.

இந்து கோவில்களில் பல கடவுள்கள் ஆண் பெண் தெய்வங்கள் இருந்தாலும் எல்லா ஊரில் உள்ள எல்லா கோவில்களுக்கும் எல்லா இந்துக்களும் எந்த ஜாதியாக இரூந்தாலும் தரிசிக்க செல்வார்கள். பெயரை வைத்து மதம் அறிய வேண்டுமானால் அது முஸ்லீம் மதத்தில் மட்டும் தான் . மதம் மாறும் முஸ்லீம் தனக்கு முஸ்லீம் பெயரை சூட்டிக் கொண்டு நேர்மையாக வெளி உலகிலும் முஸ்லீம் ஆக அறியப்படுகிறான்.

ஆனால் மதம் மாறிய கிறிஸ்தவர்கள் மிக அழகான கிறிஸ்தவ மதத்திற்கே உரிய பெயர்கள் இருந்தாலும் அதனை ரெக்கார்டில் வைத்துக் கொள்வதில்லை. கந்தசாமி கோபால்சாமி கணேசன் ஏழுமலை வேல்முருகன் என இந்து கடவுள் பெயரிலேயே வலம் வருகிறார்கள்.

தற்போது மதம் மாறியவர்கள் இந்து மதத்திற்கே கேடு நினைப்பதால் இனி இந்து கோவில்களில் முக்கியமாக பிரபல கோவில்களில் தங்கும் விடுதி தரிசனம் இரண்டுக்கும் ஆதார் கட்டாயம் என்றும் இந்து வாக இருப்பது கட்டாயம் என விதி கொண்டூவர வேண்டும்.

மற்ற மதத்தவர் இந்து சம்பிரதாயம் கடைபிடிக்க உறுதிமொழி அளித்து நிர்வாக அலுவலக ஒப்புதல் பெற்று தரிசிக்க அனுமதிக்கலாம்.அதே போல் கோவிலுக்கு செல்ல விபூதி பட்டை குங்குமம் இடுதல் அல்லது நாமம் தரித்தல் கட்டாயம் என கொண்டூவர வேண்டிய தருணம்.

இந்து கோவிலில் கட்டாய நன்கொடை இல்லை.இந்து கோவில் சொத்துக்கள் இந்து பக்தர்களுக்காக பயன்படுத்த வேண்டும்.கோவிலுக்கு வந்து தரிசிக்கும் பக்தர்களுக்காக மட்டும் அன்னதானம் கோவில் நிதியில் வழங்கலாம்.மற்ற பொதுமக்களுக்கு அரசு நிதியில் வழங்க வேண்டும்.கோவில் வாரியாக பக்தர்கள் குழு அமைக்க வேண்டும்.

கருத்து: – ராமசாமி வெங்கட்ராமன்