- Ads -
Home உரத்த சிந்தனை சுயமரியாதையோடு பேசினா… உடனே பார்ப்பான் பட்டம் கட்டுவதா?: சீறும் ஷியாம் கிருஷ்ணசாமி

சுயமரியாதையோடு பேசினா… உடனே பார்ப்பான் பட்டம் கட்டுவதா?: சீறும் ஷியாம் கிருஷ்ணசாமி

சுயமரியாதையோடு பேசினா உடனே பார்ப்பான் பட்டம் கட்டிவிடுகிறார்கள் என்று தனது கோபத்தைக் காட்டி சீறியிருக்கிறார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம்.

இது குறித்த அவரது டிவிட்டர் பதிவுகள் காரசாரமன விவாதங்களைக் கிளப்பியுள்ளன. அதே நேரம், சாதிக் காழ்ப்பை விதைக்கும் திராவிட அரசியலின் முகத்திரையைக் கிழித்துத் தொங்கவிட்டிருக்கின்றன.

ஆங்கிலேயர் காலத்தில் ஏற்பட்ட வரலாற்று பிழைகளுக்கு பிரிட்டன் அரசு மன்னிப்பு கேட்டதற்கான உதாரணங்கள் பல உள்ளன. அந்த வகையில் வேளாண் குடிகளான தேவேந்திர குல வேளாளர்களை எஸ்சி., பட்டியலில் சேர்த்து இழைக்கப்பட்ட தவறுக்கு மன்னிப்பு கேட்கக் கோரி பிரிட்டன் தூதரகம் நோக்கி நவ.15 ஆம் தேதி தேவேந்திரர்கள் பேரணி நடத்த உள்ளனர்… என்று தகவலைப் பதிவிட்டிருந்தார் ஷ்யாம்.

இதற்கு பதிலளித்த ஒருவர், அண்ணே இப்ப என்ன வேணும் உனக்கு, நீ SC பட்டியலில் இருக்க வேண்டாம் அம்புட்டு தான, சரி உன்ன தூக்கி FC பட்டியலில் போட்டிடுறோம். இனிமே நீ பூணுல் போட்டுக்கோ, மந்திரம் ஓது, கோவில் கருவறைக்குள் போய் உன் நண்பன் பார்ப்பனன் தோள் மேல் கை போட்டு கடவுளை தரிசி. ஒன்னும் பிரச்சனையில்லை. – என்று பதிவிட்டிருந்தார்.

ALSO READ:  மக்களுக்கான டிஜிட்டல் பயன்பாட்டை முழுமை பெறச் செய்வோம்: மனதின் குரலில் மோடி!

இன்னொருவர், சரிங்க நீங்க கொஞ்சம் சமூக நீதி பகுத்தறிவுன்னா என்னான்னு சொல்லுங்க தேவேந்திர குழ பாப்பானே.. – என்று கூறியிருந்தார்.

இதை அடுத்து இருவர் கருத்துக்கும் பதில் சொல்லும் வகையில், சுயமரியாதையோடு பேசினா உடனே பார்ப்பான் பட்டம் கட்டி விடுவார்கள்… என்று கூறியிருந்தார் ஷ்யாம்.

பார்ப்பனன் சுயமரியாதையுடன் இருப்பதையும், சுயமரியாதை குறித்து மேடைக்கு மேடை வாய்கிழியப் பேசும் பெரியாரியத்தை முன்வைக்கும் திராவிட இயக்கங்கள் சுயமரியாதை அற்று வீழ்ந்து கிடப்பதையும் இந்தப் பதிவுகளில் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்கள் பலர்.

தொடர்ந்து ஷ்யாம் பதிவிட்டுள்ள கருத்துகள்…. அவரது நியாயமான கோபத்தையும் அறச் சீற்றத்தையும் காட்டுவதாக இருந்தது…

நிரந்தரமாக அய்யா சாமி இட ஒதுக்கீடு குடுங்க என கேட்டுக்கொண்டு இருக்கனும். தமிழர்கள் இட ஒதுக்கீடு இல்லாமல் முன்னேறவே முடியாது என்று நம்பவைப்பது தான் திராவிட கருத்தியல்.

பூணுல் போடறது, மந்திரம் ஓதுவது, கருவறைக்கு போவது, மத்த சாதி பொண்ணு கட்டுவது, மெல்லிசான தோசை சுடவது…

இவனுங்களுக்கு சமூக நீதி, பகுத்தறிவு எல்லாம் இவ்வளவு தான். எத்தனை தடவை சொன்னாலும் இதை தாண்டி சிந்திக்கவே முடியல…

ALSO READ:  சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

– என்று கருத்துகளைப் பதிர்ந்து, சூடான விவாதத்தைக் கிளப்பியிருக்கிறார் ஷ்யாம் கிருஷ்ணசாமி.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version