சமூக வலை தளங்களில் தற்பொழுது சர்ச்சை ஆகி வரும் செய்தி நம் தெய்வங்களையும் தாய்திருநாட்டையும் கீழ்தரமான முறையில் ஒருவன் காட்சிபடுத்திய நிகழ்வு அதுவும் பிரபல கல்லூரியில்.

இங்கு அந்த நிகழ்வுக்கு எதிர்வினை ஆற்றும் அனைவரும் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இந்நிகழ்வானது இரு மதங்களுக்கு இடையே நடக்கும் மோதல் அல்ல. எந்த மதமாக இருந்தாலும் பிற மதத்தை உரிமைகளை நாம் மதிக்க வேண்டும். ஆனால் நம் உரிமைகள் பிறரால் நசுக்க படும்போது அதற்க்கு உரிய எதிர்வினை ஆற்றாததன் விளைவு தான் இன்று நடக்கிறது.

முதலில் இந்த ஓவியத்தை வரைந்தது பெரியாரியம் பேசும் நபர் முகிலன். ஆனால் அவரை எதிர்த்து எந்த ஒரு பதிவும் இதுவரை நம் தலைவர்களிடம் இல்லை.

லயோலா கல்லூரி இடம் தந்ததால் தான் இது நடந்தது என்று கூற முடியாது. காரணம் நாளையே வேறு எங்கு வேண்டுமானாலும் அந்த நபர் காட்சிபடுத்தலாம். இது போன்ற நிகழ்வுகள் நமக்கு புதிதல்ல ஆனால் இத்ற்க்கு எதிர்வினை என்ன என்பதுதான் நம் தலைவர்களிடத்தில் வைக்கும் கேள்வி.

இதுவரை திராவிட சித்தாந்தத்தில் ஊறிய சொற்பமான நபர்களை எதிர்த்து உருப்படியான அர்சியல் செய்ய முடிந்ததா? எங்கோ வெளிநாட்டில் நம் கடவுள் படங்களை செருப்பில் வெளியிடும்போது நாம் காட்டும் எதிர்ப்பு உள்ளூரில் நம் மதத்தை இழிவு செய்யும்போது வாய்மூடி மௌனியாக இருக்கிறார்கள். எதற்க்கு இந்த பயம்? யாரை கண்டு இந்த அச்சம்?

திரு. ஹெச். ராஜா அவர்கள் பெரியார் சிலைகள் அகற்றபடும் என்று சொன்னபோது திராவிடர் கழகமும், அதன் வழி தோன்றிய கட்சிகளும் எதிர்குரல் கொடுத்தது அவர்கள் பின்பற்றிவரும் கொள்கையின் நிலைபாடு என்றாலும் அதையே நாமும் ஆதரித்து ராஜா பேசியது தவறு தான் என்று சொல்ல வைத்ததில் இருக்கிறது நம் தோல்வி.

திராவிட அரசியலின் சாதுர்யமே மத, சாதிகளுக்கிடயே பகை மூட்டி அதில் குழம்பும் மீன்களை அறுவடை செய்வது. தோற்றுபோன ஒரு பெரியார் சித்தாந்தத்தை வைத்து அவர்களால் மக்கள் மனங்களை குழப்பி அரசியல் செய்ய முடிகிறது என்றால் உண்மை எதிரியை கண்ணெதிரில் வைத்துக் கொண்டு குறைந்தபட்ச எதிர்ப்பைகூட வெளிப்படுத்தவில்லை என்றால் கனவுலகில் கூட மலர வைக்கமுடியாது பெருவாரியான மக்கள் விரும்பும் ஆட்சியை.

இங்குபெருவாரியான மக்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் ( அது எந்த மதமாக இருந்தாலும் ). அவர்கள் நம்பிக்கையை தகர்க்கும்படி பேசினால் அதற்கு உரிய பதிலடி தரப்பட வேண்டும். (இங்கு இஸ்லாமிய கிறிஸ்தவர்களுக்கு போதிய ஆதரவு திராவிட இயக்கங்களால் தரப்படுகிறது. ) ஆனால் பாரதிய ஜனதா போன்ற வெளிப்படை ஹிந்து ஆதரவு கட்சிகளோ எதற்க்கும் வாய்திறக்காமல் அமைதி காப்பது மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையின்மையை தான் ஏற்படுத்தும்.

சமூக வலைதளங்களில் எதிர்ப்புகளை பதிவிட்டால் போதும் என்று இனியும் நினைக்காமல் கள அரசியலில் இறங்கி இனி எதிர்ப்புகளை பதிய வேண்டும். அதுமட்டுமே மக்கள் மனதில் ஆழமாக பதியும். இல்லையென்றால் ஊருக்கொருமுகிலன்களும், மனுஷ்யபுத்ரன்களும், வைரமுத்துகளும் தான் ஆட்சி செய்வர்.

பாரதீய ஜனதா முன் வைக்கும் திட்டங்கள் அனைதிற்க்கும் நம் எதிரிகளால் உடனுக்குடன் நீதிமன்றம் சென்று வழக்கு தொடுக்க முடிகிறது எனும்போது தேசத்தையே ஆளும் பெருவாரியான மாநிலங்களை ஆளும் கட்சியின் வழக்கறிஞர் அணி என்ன செய்துகொண்டிருக்கிறது? இதுபோன்ற நிகழ்சிகளுக்கு தடை வாங்கியிருக்க வேண்டாமா? அதை செய்யாமல் வலை தளம் மூலம் புகார் அனுப்பிக்கொண்டும் அறிக்கை வெளியிட்டுகொண்டும் இருந்தால் மூன்றாம் கலைஞர் கூட முதல்வர் ஆவார்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...