அழிந்து வரும் திருநாவுக்கரசர் சுவாமிகள் திருஞானசம்பந்தர்/திருமூலர்/நக்கீரர்/பரணர் / தேவாரம்/ திருமுறைகள் பாடல் பெற்ற சிவாலயம்!

திருக்குறுக்கை வீரட்டானம் நாகப்பட்டினம் மாவட்டம் – மயிலாடுதுறை வட்டம் மயிலாடுதுறையில் இருந்து வில்லியனூர் செல்லும் வழியில் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. திருக்குறுக்கை (கொருக்கை) கொற்கை அழிவின் விளிம்பில் உள்ளது. கும்பாபிஷேகம் நடைபெறாமல் 58 ஆண்டுகள் ஆகி விட்டது!

திருக்குறுக்கை சுவாமிக்கு தினமும் முறையான அபிஷேகம் சிவபூசை கிடையாது கண்டு கொள்ள நாதி இல்லை. இங்கு உள்ள புகழ்பெற்ற சம்பு விநோத சபை நடராஜர்/சிவகாமி/மாணிக்கவாசகர் திருமேனிகள் திருட்டு போய் இரண்டு வருடங்களுக்கு மேலாக ஆகியும் முறையாக கண்டு பிடிக்கவில்லை!

சிவாச்சாரியார் மாதம் சம்பளம் 500 ருபாய். வருடத்திற்கு 190 கிலோ நெல். இதை வைத்து சிவாச்சாரியார் என்ன செய்வார்கள்? அதனால் அவர்கள் சிவாலயத்தை பெரிய அளவில் பராமரிப்பு செய்வது இல்லை. முறையாக கால பூசை நடைபெறுவது இல்லை!

திருக்குறுக்கை தல விருட்சம் கடுக்காய் மரம் முழுவதும் பூச்சி அரித்து அழிந்து கொண்டு வருகிறது ! ஆயிரம் ஆண்டுகள் பழமையான கடுக்காய் மரம் …

குறுக்கை வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் மடப்பள்ளி அந்த காலத்தில் பிரமாண்டமாக கட்டி உள்ளார் 25 வது தருமபுரம் சன்னிதானம் சுப்பிரமணிய தேசிகர் (இன்று கட்ட வேண்டும் என்றால் 1 கோடி செலவு ஆகும்) அதை பராமரிப்பு செய்யாமல் மடப்பள்ளி அழிந்து விட்டது.

மிகவும் சிரமப்பட்டு பல லட்சக்கணக்கான மதிப்புள்ள உபயதாரர்கள் வாங்கி தந்த சுவாமி வாகனங்கள் அனைத்து முறையான பராமரிப்பு இல்லாமல் அழிந்து விட்டன. சுவாமி வாகனங்கள் மேல் கண்ட பொருட்களை வைத்து வாகனங்கள் உடைந்து விட்டன.

சிவபெருமான் மன்மதனை தன்னுடைய நெற்றிக்கண்ணில் எரித்த தலம் காமதகன சிவாலயம் குறுக்கை வீரட்டானம். இப்போது எங்கே பார்த்தாலும் கருப்பாக பேய் வீடு போல் உள்ளது.

பிராகாரத்தில் புதர்கள் முளைத்து காடு போல் காட்சி தருகிறது. அதனால் பக்தர்கள் யாரும் பிரகாரம் வலம் வருவது இல்லை. அண்மையில் கோவிலுக்கு வழிபாடு செய்ய வந்த பக்தர்களை பாம்பு தீண்டி உள்ளது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த 2000 ஆண்டுகள் பழமையான திருக்குறுக்கை வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் 60 ஆண்டுகள் மேல் கும்பாபிஷேகம் செய்யாமல் முறையாக பூசை செய்யாமல் சிவாலயங்களை அழித்து கொண்டு உள்ளது தருமபுரம் ஆதீனம் மற்றும் தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை.

தமிழ் நாடு அறநிலையத்துறைக்கு இவ்வளவு பழமையான சிவாலயம் இருப்பது கூட தெரியாது! ஏன் என்றால் வருமானம் வரும் ஆலயங்களில் கொள்ளை அடிக்க நேரம் சரியாக உள்ளது !

தமிழ்நாட்டில் பிறந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிவாலயங்களை பாதுகாக்க வேண்டும் என்று சிந்தனை இல்லை!

  • வீரத் திருத்தொண்டர் சத்தியார்

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...