இந்து முன்னணி நிர்வாகிகளை கண்மூடித்தனமாகத் தாக்கிய ராமநாதபுரம் ஏடிஎஸ்பி வெள்ளைத்துரை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி புகார் மனு அளித்துள்ளது.

இந்து முன்னணி மாநிலத் துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில்,

இராமேஸ்வரத்தில் பயங்கரவாதிகளால் பலியான மாவீரன் முனியசாமி சமாதிக்கு கடந்த 21.1.2019 அன்று மலரஞ்சலி நிகழ்ச்சி காவல்துறை அனுமதியுடன் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் கே.கே.பொன்னையா, மாநில பேச்சாளர் பழனிசாமி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் மீது அத்துமீறி, பலப்பிரயோகம் செய்து தாக்கி காயப்படுத்தியுள்ளார் ராமநாதாபுரம் கூடுதல் ஆணையர் வெள்ளத்துரை. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழகம் முழுவதும் காவல்துறை அதிகாரி வெள்ளத்துரையைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

மாவட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தரக்குறைவான வார்த்தைகளை பேசியதும், கொலை மிரட்டல் விடுத்துள்ளதும் அதிர்ச்சி அளிக்கிறது. காவல்துறை உயர் அதிகாரிகள் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும், மனித உரிமை மீறல் செய்த அந்த அதிகாரியின் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவும் கோரி புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்தப் புகார் கடிதத்தில் குறிப்பிடப் பட்டவை…

இந்து முன்னணி இயக்கத்தின் மாநில இணை அமைப்பாளராக பொறுப்பு வகித்து வருகிறேன் நேற்று மாலை சுமார் பத்தரை மணிக்கு ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தமிழ்நாடு ஓட்டல் அருகில் உள்ள இந்து முன்னணி முன்னாள் மாநில செயலாளர் முனியசாமி நினைவிடத்தில் இந்து முன்னணி சார்பில் காவல்துறையில் முறையாக தகவல் தெரிவித்து அனுமதி பெற்று மலர்தூவி அஞ்சலி செலுத்துவதற்காக சென்றேன்

அப்போது வாசலில் வருவாய்த்துறையினரும் காவல்துறையினரும் என்னையும் என்னுடன் வந்த பழனிசாமி உள்ளிட்டவர்களை வழிமறித்து உள்ளே செல்லக்கூடாது என தடுத்தனர்

நானும் என்னுடன் வந்தவர்களும் கடந்த 25 ஆண்டுகளாக இந்த நினைவிடத்தில் ஜனவரி 21ஆம் தேதி அஞ்சலி செலுத்தி வருகிறேன் எங்களை ஏன் தடுக்கிறீர்கள் என காவல்துறையினரிடம் பேசிக்கொண்டிருந்தபோது… ராமநாதபுரம் ஏடிஎஸ்பி வெள்ளை துரை என்பவர் என்னை நோக்கி வேகமாக வந்து செருக்கிபுள்ள… என்ன போலீஸ்கிட்ட எதுத்தா பேசுற எனக்கூறி தனது வலது கைவிரல்களை மடக்கி எனது வலது கன்னத்தில் ஓங்கி குத்தினார். நான் சற்று நிலை தடுமாறி கீழே விழுந்தேன், தாயோலி என்ன எங்கிட்டயே சட்டம் பேசுற வக்காளி சுட்டுக் கொன்று விடுவேன்.. என்னை பற்றி கேட்டு பாரு… பலபேர என்கவுண்டர்ல போட்டு தான் ஏடிஎஸ்பி ஆகி இருக்கேன்… என கொலை மிரட்டல் விடுத்து என்னுடன் வந்த பழனிசாமியும் அடித்து காயப்படுத்தி எங்களை மாலை வரை சட்டவிரோதமாக அடைத்து வைத்து உணவு குடிநீர் உரிய மருத்துவ முதலுதவி சிகிச்சை கூட வழங்காமல் கொடுமைப்படுத்தி மனித உரிமை மீறல் செய்து மாலை 4 மணிக்கு தான் விடுவித்தார்

ஏடிஎஸ்பி தாக்கியதும் வலியும் வேதனையும் நேரமாக நேரமாக அதிகரித்ததால் வெளியில் வந்ததும் சுமார் ஐந்து மணிக்கு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற போது டிஎஸ்பி வெள்ளத்துரை தாக்கியதில் வலது கண்ணிலும் காதிலும் வலி அதிகமாக இருந்ததாலும் மேல்சிகிச்சைக்காக அவர்கள் ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தினார்

அங்கு சிகிச்சை பெற்றால் மேற்படி ஏடிஎஸ்பி வெள்ளைதுரை எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என கருதியதால் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக பரிந்துரை கடிதம் பெற்று வந்து கொண்டிருந்தபோது காதில் ரத்த கசிவு ஏற்பட்ட நிலையில் 22 1 2019 காலை சுமார் 12 மணிக்கு திருநெல்வேலி தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறேன்

முனியசாமி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தச் சென்ற என்னை வழிமறித்து தாக்கி காயம் ஏற்படுத்தி அசிங்கமாக பேசி சுட்டுக் கொன்று விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்த டிஎஸ்பி வெள்ளத்துரை மீது சட்ட ரீதியாகவும் வேறு ரீதியாகவும் நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன் … – என்று சென்னை டிஜிபியிடம் அளிக்கப் பட்ட அந்த புகார் மனுவில் குறிப்பிடப் பட்டிருக்கிறது.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...