ஒரு வீரவணக்க போஸ்டர்… பெரும் பரபரப்பையும் பிரச்னையையும் எழுப்பி, இவ்வளவு பெரிய விவகாரம் ஆகும் என்பதை எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்!

காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மத்தின் தற்கொலைப் படைத் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்த நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்தும், வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியும் நெல்லை மாவட்டம் செங்கோட்டை நகரில் குறிப்பிட்ட சில இடங்களில் விஷ்வ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப் பட்டன.

ஆனால் தனியார் கோவிலுக்குச் சொந்தமான சுவரில் ஒட்டப்பட்ட அந்த போஸ்டர், இரவோடு இரவாக கிழிக்கப் பட்டது. இதைக் கிழித்தவர்கள் யார் என்பது தெரியாத நிலையில், அன்று காலை அந்த சுவருக்கு முன்புறம் எஸ்டிபிஐ கட்சியின் கொடிக்கம்பம் நடப்படும் நிகழ்ச்சி இருந்ததால், இந்து இயக்கங்களின் பெயரில் இருக்கும் போஸ்டர் அங்கே இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில், தொடர்புள்ள யாரோ கிழித்திருக்கலாம் என்று அனுமானம் செய்யப் பட்டது. இருப்பினும், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கிழித்துவிட்டதாகவும், அதைக் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் மனு போலீஸில் கொடுக்கப் பட்டது.

ஆனால், அப்போது காவல் நிலையத்தில் இந்து இயக்க பிரமுகர்களை அவமரியாதை செய்ததாகவும், யாரைக் கேட்டு போஸ்டர் ஒட்டினீர்கள் என்று காவல் அதிகாரிகள் கேட்டதாகவும் புகார் கூறப்பட்டு, இது தொடர்பான மனு தென்காசி டிஎஸ்பியிடம் கொடுக்கச் செல்ல, அவர் விடுமுறையில் இருந்ததால், நெல்லை ஆட்சியரிடம் கொடுக்கப் பட்டுள்ளது.

தொடர்ந்து, செங்கோட்டையில் காவல்துறையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது. இவை எல்லாம் ஒரு போஸ்டர் கிழிப்பினால் ஏற்பட்ட தொடர் நிகழ்வுகள்!

அந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், பஜ்ரங் தள் மாநில அமைப்பாளர் சரவண கார்த்திகேயன் பேசிய போது… ஒட்டப்பட்ட போஸ்டர் கிழிக்கப்பட்டது! அதை யார் கிழித்தார்கள் என்று தெரியாத நிலையில், மர்மநபர்கள் கிழித்ததாகவே புகார் மனு கொடுக்கப்பட்டது! கிழித்தது ஆடாகவும் இருக்கலாம் கழுதையாகவும் இருக்கலாம்.. அட பன்னியாகவும் இருக்கலாம்!

கிழித்தது யார் என்று தெரியாத நிலையில் ஒரு புகார் வந்தால் அதை வாங்கி வைத்துக் கொண்டு அனுப்ப வேண்டியது தானே! விசாரிக்கிறேன் என்று சொல்ல வேண்டியது தானே! அப்படி இல்லாமல் மூஞ்சிய பேத்துடுவேன் என்றெல்லாம் போலீஸார் சொல்ல காரணம் என்ன? என்று பேசினார்!

காண்க..: செங்கோட்டையில் காவல்துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

இப்போது சரவண கார்த்திகேயன் சொன்னது போலவே…அட அந்த போஸ்டரை கிழிச்சது ஒரு பன்னியாகவே இருக்கட்டும்… அந்தப் பன்னியே கூட வாய் வெச்சி கிழிச்சி தின்னதாகவே இருக்கட்டும்! ஆனா அதுக்கும் கூட விசுவ இந்து பரிசத் ஒட்டிய போஸ்டர்தான்னு தெரிஞ்சிருக்கு! இந்து இயக்கங்கள் ஒட்டின போஸ்டர கிழிச்சாதான் நம்மள ஊருக்குள்ள திரிய விடுவாங்கன்னு அந்தப் பன்னிக்குக் கூட தெரிஞ்சிருக்கு!

பாருங்க.. இந்த சம்பவம் நடந்து இத்தனை நாட்கள் கழிஞ்சும், கிறிஸ்தவ பிரச்சார போஸ்டர், இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் ஒட்டப்பட்ட கண்டன போஸ்டர் இதெல்லாம் சரியா தெரிஞ்சி… அடையாளம் கண்டு.. அதுலல்லாம் வாய் வைக்காம போயிருக்கு பாருங்க… நல்ல புத்திசாலி பன்றிகள், பகுத்தறிவுப் பன்றிகள் என்று பன்றிகளை பாராட்டுகிறார்கள் இந்த வழியே கடந்து போகிறவர்கள்!

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...