16/10/2019 11:38 PM
உரத்த சிந்தனை ஆக மொத்தம் ... அத்திவரதர் வைபவ அசால்ட்களை... அடுக்குறாங்க... ஆட்சியரும் ஆய்வாளரும்!

ஆக மொத்தம் … அத்திவரதர் வைபவ அசால்ட்களை… அடுக்குறாங்க… ஆட்சியரும் ஆய்வாளரும்!

இவற்றில் இருந்து, நிர்வாகத்தின் சீர்கேடு, நிர்வாக மெத்தனம், பணியில் அசட்டையாக இருத்தல், ஒரு மிகப் பெரும் நிகழ்வை எவ்வளவு சாதாரணமாக எள்ளி நகையாடியிருக்கிறார்கள் என்பதெல்லாம் தெரியவருகிறது.

-

- Advertisment -
- Advertisement -

காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அபூர்வமாக நடைபெறும் அத்திவரதர் வைபவம், கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கி, ஆக. 17ம் தேதியுடன்  நிறைவை எட்டி வருகிறது.

இந்த வைபவம் முன்னமேயே தொடங்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்போது நிலவிய தண்ணிர்ப் பஞ்சத்தை உத்தேசித்து, அத்திவரதர் வைபவம் இந்த ஆண்டு நடைபெறுமா என்று கேள்வி எழுப்ப வைத்தார்கள், அறநிலையத்துறை அதிகாரிகளும் ஆட்சியர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகமும்!

முன்னதாக அத்திவரதர் வைபவம் குறித்த முன்னேற்பாடு கூட்டங்களின் போதும், முன்னேற்பாடுகள் குறித்த பெரிய திட்டமிடலெல்லாம் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இல்லாமலே இருந்தது. காரணம், இது போன்ற பெரிய அளவிலான கூட்டத்தை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. கூட்டத்தில் பேசிய போதே, ஒரு நாளைக்கு சுமார் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரை வருவார்கள் என்றுதான் திட்டமிட்டார்கள்.

ஆனால், தற்போதைய நவீன தொழில்நுட்ப யுகத்தில், அத்திவரதர் வைபவம் குறித்த தகவல்கள், ஆர்வம், வசதிகள், போக்குவரத்து வசதிகள் இவற்றை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் குறைந்த பட்ச அசால்ட் .. மெத்தனம் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் இருந்தது என்பதைத்தான், பின்னாளைய சம்பவங்கள் காட்டிக் கொடுத்தன.

இதற்கு ஊடாக, இரு தினங்களுக்கு முன்னர், ஆட்சியரின் கோரமான ஒரு முகத்தை அங்கிருந்தவர்கள் பார்த்தார்கள். காவல் பணியில் நின்ற ஆய்வாளர் ஒருவரை, பொதுமக்கள் முன்னிலையில் மோசமாக திட்டித் தீர்த்தார் ஆட்சியர்.

இதை அடுத்து, காவல் துறை வசம் இருந்து வீடியோ வெளியீடு, ஆட்சியருக்கு எதிரான கூட்டங்கள், கண்டனங்கள், ஓய்வு பெற்ற போலீஸாரின் எதிர்ப்பு என பலவற்றை சந்தித்து வந்தது அந்தச் சம்பவம். இருப்பினும், இதுவும் கூட, ஆட்சியரின் கையாலாகாத் தனத்தைத் தான் வெளிச்சம் போட்டுக் காட்டியது.

திட்டமிடலின்மை, நிலைமை கைமீறிப் போகும் போது, பிறரை பொறுப்பாளி ஆக்கி குளிர்காய்வது போன்ற அசிங்க அரசியலையே ஆட்சியரும் கைக்கொண்டாரோ என்று கருத்துகள் கூறப் பட்டன.

இந்நிலையில், போலீஸாருக்குப் போட்டியாக, ஆட்சியருக்கு சாதகமாக சிலர் ஒரு சில கருத்துகளை  எடுத்து விட்டுள்ளனர்.

இவற்றில் இருந்து, நிர்வாகத்தின் சீர்கேடு, நிர்வாக மெத்தனம், பணியில் அசட்டையாக இருத்தல், ஒரு மிகப் பெரும் நிகழ்வை எவ்வளவு சாதாரணமாக எள்ளி நகையாடியிருக்கிறார்கள் என்பதெல்லாம் தெரியவருகிறது.

ஆட்சியருக்கு சாதகமாகவும், காவல் துறையினரை விமர்சித்தும் வைரலாகி வரும் கருத்துகள் இவை… 

ஏன் கொந்தளித்தார் கலெக்டர்
அமைதியே உருவானவர், சாதுவானவர், எளிதில் கோபப்படாதவர், சிரித்த முகத்துக்குச் சொந்தக்காரர் ஏன் காவல் ஆய்வாளரிடம் கொந்தளித்தார் என்பதற்கு பல காரணங்கள். இதோ சில.

1. VIP மற்றும் VVIP நுழைவு வழியில் அனுமதி அட்டை மற்றும் நுழைவு சீட்டு இல்லாமல் மேற்படி நுழைவு வாயிலில் பணியாற்றும் காவல்துறையினர் தங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் அனுப்பி வைக்கும் போது பாஸ் வைத்திருந்து வரிசையில் காத்திருக்கும் நன்கொடையாளர்கள் மாவட்ட ஆட்சியர் தினசரி ஆய்வின் போது புகார் தெரிவித்த போதும் பாஸ் இல்லாதவர்களை கூட்டம் சேர்க்காமல் பொது தரிசன வழிக்கு அனுப்பி வைக்க தினசரி அறிவறுத்தியும் தேவையில்லாத கூட்டத்தை சேர்த்தது.

2. VIP மற்றும் VVIP நுழைவு வழியே வழக்கமாக ஒரு மணி நேரத்துக்குள் தரிசனம் செய்து வந்த நிலையில் 3மணி நேரம் முதல் 6மணி நேரம் வரை VIP பாஸ் வைத்திருப்பவர்களை காக்க வைத்து அவசர வழியில் சம்பந்தமில்லாதவர்களை அனுமதித்தது.

3. மருத்துவ முகாம்களில் பணியாற்றும் மருத்துவர்களையும் செவிலியர்களையும் உரிய அனுமதி சீட்டு இருந்தும் உள்ளேஅனுமதிக்காமல் ‘ஆமாமாம்..நீ தான் போய் உயிரைக் காப்பாற்றப் போறியாக்கும்… எவனாவது நாலு பேரு செத்தா தான் எவனும் வரமாட்டான்’என கேலி செய்து சுகாதார பணியாளர்களை அனுமதிக்க மறுத்தது.

4.கோயிலுக்குள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் can கண்டு சென்ற TATA ACE வண்டியை உள்ளே அனுமதிக்காமல் டிரைவரை நெஞ்சில் தள்ளி முன்பக்க கண்ணாடியை உடைத்தது.

5.வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு அன்னதானம் வாங்குபவர்களுக்கு உரிய அடையாள அட்டை இருந்தும் சரியான நேரத்துக்கு உணவு வழங்க அனுமதிக்காதது.

6.வயதானவர்களுக்கும்,மாற்றுத்திறனாளிகளளுக்குமான வழியில் காவல்துறை தங்கள் உறவினர்களையும், தெரிந்தவர்கள் என்ற போர்வையில் சம்பந்தமில்லாதவர்களையும் தரிசனத்திற்கு அனுப்பி கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ஆம்புலன்ஸ் வழியை கூட தடுத்து மறைத்தது.

7. பக்தர்கள் வெளியேறும் மேற்கு கோபுரம் வழியாக காவலர்கள் தங்களது உறவினர்களையும்… நண்பர்கள் என்ற போர்வையில் கை….டு பெற்று அழைத்து வந்தவர்களை அனுமதித்து பக்தர்கள் சுலபமாக வெளியேற இயலாமல் தேவையற்ற நெருக்கடியை ஏற்படுத்தியது.

8.பத்திரிகையாளர்களை உள்ளே அனுமதிக்காதது.

9.கழிப்பறைகள், துப்புரவு பணி மற்றும் குடிநீர் விநாயக பணிகளை மேற்பார்வயிடும் நகராட்சி பெண்ஆணையாளர்கள், அலுவலர்களை உரிய அடையாள அட்டை இருந்தும் நீ உள்ளே போய் என்ன கிழிக்கப்போகிறாய் என கேவலமாகப் பேசியது.. பின் பதிலுக்கு தங்கள் பெயர் விபரம் யூனிபார்ம் தோள்பட்டையில் இல்லையே….தங்கள் பெயரை தெரிந்து கொள்ளை முடியவில்லையே என்றதற்கு அசிங்கமான சைகையுடன் நல்லா பாத்துக்க… இன்னும் வேணும்னாலும் காட்டறேன் என அவமானப்படுத்தியது.

10.துப்புரவு பணியாளர்களை உள்ளே விடாமல் பணி செய்ய விடாமல் தடுத்தது.

11. மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அடுத்த நிலையில் உள்ள திட்ட இயக்குநரின் அரசு வாகனத்தை உள்ளே அனுமதிக்காமல் அவரை நீ யாராக இருந்தால் எனக்கென்ன என்று கேவலமாக பேசி 2 கிமீ நடக்க வைத்தது

12. அண்டை மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், அமைச்சர்கள் மற்றும் அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழான ஆணைய உயர் அலுவலர்களை(constitutional body) உரிய அனுமதி அட்டை இருந்தும் பல்வேறு கேள்விகள் கேட்டு அவமானப்படுத்தியது.

13.உச்ச கட்டமாக தினசரி கோயிலுக்கு வந்து கோயிலின் நிர்வாகியான அறநிலையத்துறை செயல் அலுவலர் திரு. தியாகராசனை தாக்கி உதட்டைக்கிழித்தது…..

14. அனைவரும் நல்ல முறையில் தரிசிக்க அனைத்து துறையினரையும் ஒருங்கிணைத்து ஒரு தவம் போல சிரத்தையுடன் அனைத்து பணியாளர்களையும் ஒரே குடும்பமாகக்கருதி தினசரி காலை மாலை என 24 மணி நேரமும் பணி செய்யும் ஆட்சியரை, அடையாள அட்டை இன்றி யாரையும் VIP &VVIP வழியில் அனுமதிக்க வேண்டாமென அறிவுறுத்தி காவல் துறை உயர் அலுவலர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தினசரி 1000 பாஸ் வழங்கப்பட்ட பின்னரும் நடைமுறையை சிதைத்து குழப்பத்தை ஏற்படுத்தியது……

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆட்சியை தனிப்பட்ட முறையில் தாக்க பல்வேறு அமைப்புகளை நிர்ப்பந்தப்படுத்தி சமூக வலைத் தளங்களில் கருத்துக்களை பதிவிடுவதையும், காவல்துறை மட்டுமே பணி செய்வது போலீஸ் வீடியோ வெளியிடுவதும்….. என்ன தான் நடக்கிறது.

வேண்டாம்… இன்னும் சில நாள் தான். அத்தி வரதர் வைபவம் முடிந்து விடும். அனைவரும் சேர்ந்து இணைந்து பணியாற்றி பலன் பெறுவோம்.

இவண்

42நாட்களாக வைபவத்திற்காக பணியாற்றும் 4000 பணியாளர்களில் ஒருவன்!

- Advertisement -
- Donate via PayTM -
Tamil Dhinasari News..! We are in the path of protecting our Hindu dharma! Please consider supporting us to run this Tamil web portal continuously.
-Advertisement-

சினிமா:

-Advertisement-
-Advertisement-
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you

%d bloggers like this: