முருங்கையிலை கஞ்சி
தேவையானவை:
புழுங்கல் அரிசி – ஒரு கப்
பாசிப் பயறு (பச்சைப் பயறு) – கால் கப்
முருங்கையிலை =அரை கப்
சின்ன வெங்காயம் – 15 (தோலுரிக்கவும்)
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
அரைக்க:
தேங்காய்த் துருவல் – 5 டீஸ்பூன்
பூண்டு – 5 பல்
சீரகம் – அரை ஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
(இவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்)
செய்முறை
பாசிப் பயறை அரை மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். அரிசி, முருங்கையிலை, பாசிப் பயறு, சின்ன வெங்காயத்துடன் 3 கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் வைக்கவும். உப்பு, மஞ்சள்தூள், அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும். குக்கரில் நான்கு விசில்விட்டு இறக்கவும்.