பிஸ்தா – பொட்டேட்டோ ஸ்நாக்
தேவையானவை:
பிஸ்தா பருப்பு – 20,
உருளைக்கிழங்கு – கால் கிலோ (தோல் சீவி, சதுர துண்டுகளாக நறுக்கவும்),
நெய் – ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் எண்ணெய்விட்டு உருளைக் கிழங்கு துண்டுகளைப் போட்டு சிவக்கப் பொரித்து எடுத்து எண்ணெய் வடிக்கவும். மற்றொரு வாணலியில் நெய்விட்டு பிஸ்தா சேர்த்து வறுக்கவும். பாத்திரத்தில் உருளைக்கிழங்கு துண்டுகள், பிஸ்தா, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் குலுக்கிப் பரிமாறவும்